Wednesday, June 08, 2005

இதுதாண்டா கவிதை

ஸ்தனதாயினி - ( கவிஞர் சுகுமாரன் )



இளகிய வெண்கலப் பழங்கள்
உன் மார்பகங்கள்
உள்ளே
உயிர் தழைக்கப் பெய்யவெனத்
திரண்டிருக்கும் பால்மேகம்

ஒன்றில் தாய்மையின் கசிவு
மற்றதில் காதலின் குழைவு

உன் இடது முலை பருகுகையில்
என் கண்களில்
குழந்தைமையின் நிஷ்களங்கம்
அப்போது உன் இடது முலை
பரிந்து சுரக்கும் ஊற்று

உன் வலது முலை பருகுகையில்
என் கண்களில்
காதலின் உற்சவம்
அப்போது உன் வலது முலை
நெகிழ்ந்து பெருகும் அருவி

குழந்தைமையும் காதலும் கனிந்த
மனவேளையில்
உன் மார்பகங்களின் இடைவெளியில்
உண்ர்கின்றேன்
அமைதிக் கடலாய்
மூன்றாவது ஒரு முலை


4 comments:

Anonymous said...

என்ன மரவண்டு ஒரு மாதிரி பதிவுகள் மட்டும் இடுவது என முடிவோ?ஆனாலும் கவிதை அழகாத்தான் இருக்கு

கருத்துச் சொன்னவரு:

ப்ரியன் said...

என்ன மரவண்டு ஒரு மாதிரி பதிவுகள் மட்டும் இடுவது என முடிவோ?ஆனாலும் கவிதை அழகாத்தான் இருக்கு

Anonymous said...

ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரை !

கருத்துச் சொன்னவரு: ஞானபீடம்

Anonymous said...

போடா

கருத்துச் சொன்னவரு: shan