Friday, July 01, 2005

எங்க வீட்டு வாண்டுகள்

எப்படி இருந்த நாங்க ...



இப்படி ஆயிட்டோம் ...




பீச்சாங்கைப் பக்கம் கறுப்பா ஒரு ஆளு நிக்குறாருல , அவரு பேரு தங்க விக்ரம். எங்க மூத்த அண்ணன் பையன் , வயசு மூணு ஆவுது , இப்போ இவரு என்ன செய்யுறார்னு கேட்குறிங்களா ? இவரு இன்னும் ஸ்கூலுக்குப் போகலை...ஜாலியா வீட்டுல டீவி பாத்துக்கிட்டும் பொம்மைங்க கூட வெளாண்டுக்கிட்டும் சந்தோஷமா இருக்கார் , அதுவும் இல்லாம ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தம்பிப் பாப்பா வேற பொறந்துருக்கா ,எப்பப் பாத்தாலும் அபிக்குட்டி அபிக்குட்டின்னு கொஞ்சிக்கிட்டு கெடக்கார்.

சோத்தாங்கைப் பக்கம் நிக்குறாரே , அவரு ரொம்பப் பொல்லாதவர், பேரு ஸ்வஸ்திக் குமார் ,எங்க ரெண்டாவது அண்ணனோட பையன் , நாலு வயசு ஆகுது , UKG படிக்குறார் ,ஸ்கூல்ல மிஸ் எல்லாரையும் ராக்கிங் பண்ணிட்டு இருக்காராம் ," டே ஸ்வஸ்திக் நீ படிச்சு என்னவா ஆகப் போறன்னு மிஸ் கேட்டா ...நானும் எங்க சித்தப்பா மாதிரி கம்பூட்டரு இஞ்சின் ஆவேன் " னு சொல்லுறாராம்.


0


டிராவிட் நல்ல பேட்ஸ்மேனா ? கங்குலி நல்ல பேட்ஸ்மேனா ? ன்னு எங்கிட்ட கேட்டா , கங்குலிதான் நல்ல பேட்ஸ்மேனுன்னு சொல்லுவேன் . ஆனா கங்குலிக்கு இப்போலாம் நேரமே சரியில்ல ..
சரியாவே ஆட மாட்டுறாரு ,கங்குலியை கிண்டல் பண்ணி ஏகப்பட்ட ஜோக்குகள் வந்துட்டிருக்கு, இதையும் பாருங்களேன்....

1 comment:

Anonymous said...

தங்க விக்ரத்திற்கு நீங்களா Tie கட்டி விட்டீங்க?
குமாரின் கை அணைப்பில் தோழமை தெரிகிறது.
கருத்தெழுத இடம் தந்ததற்கு நன்றி பல.

கருத்துச் சொன்னவரு: அருமை