Wednesday, July 13, 2005

பாப்லோ நெருடா
பாப்லோ நெருடா (Pablo Neruda ), ஜூலை 12 ,1904 இல் , சிலி நாட்டின் தெற்கு எல்லையில் அமைந்த பார்ரல் ( Parral ) என்ற நகரத்தில் பிறந்தார் . தனது இளம்வயதிலேயே தாயை இழந்தார் ,நெருடாவின் தந்தை இரயில்வே துறையில் கூலி வேலை செய்து வந்தார். தனது சிறுவயதிலிருந்தே இலக்கியத்தில் அதிக ஈடுபாடு காட்டி வந்த பாப்லோ நெருடாவின் இயற்பெயர் நாப்தாலி ரிக்கார்டோ ரியெஸ் பாஸல்டோ( Neftali Ricardo Reyes Basoalto ) ஆகும்.

தனது தந்தைக்குப் பயந்து கொண்டு , 1923 ஆம் ஆண்டு தனது முதல் கவிதைத் தொகுதியான Crepssculario- வை , நெருடா என்ற புனைபெயரில் வெளியிட்டார் .நெருடா என்பவர் செக்நாட்டில் வாழ்ந்து வந்த ஒரு கவிஞர் ஆவார் .அவரது கவிதைகளின் மேல் இருந்த காதலால் , பாப்லோ நெருடா அந்த செக் கவிஞரின் பெயரையே தனது புனைபெயராக சூட்டிக்கொண்டார்.
(Twenty Love Poems: And a Song of Despair -1924) என்ற இரண்டாவது கவிதைத் தொகுப்பின் மூலம் சிலி மக்களின் கவனிப்பைப் பெற்றார் .

0

பாப்லோ நெருடா , பர்மா , இலங்கை , ஜாவாப்டேவியா , சிங்கப்பூர் , அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் சிலி நாட்டுத் தூதுவராக பணிபுரிந்திருக்கிறார் . 1934 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் தூதராகப் பணிபுரிந்தார் . ஸ்பெயினில் கவிஞர் லார்காவின் சிநேகம் கிட்டியது . 1936 ஆம் ஆண்டு ஸ்பெயினில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் , அரசியல் காரணங்களுக்காக கவிஞர் லார்கா கொல்லப்பட்டார். நெருடாவினால் லார்காவின் மரணத்தைச் சகித்துக் கொள்ளமுடியவில்லை . பத்திரிகைகளில் கண்டனக் கவிதைகள் எழுதினார் . இதனால் நெருடாவின் தூதுவர் பதவி பறிக்கப்பட்டது . அதன் பிறகு இலக்கியப் படைப்பில் தீவிரமாக இறங்கினார் , 1971 ஆம் அண்டு பாரிசில் தூதுவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது , நெருடாவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது . நெடுநாட்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாய்க் கிடந்த இருந்த நெருடா ,23-09-1973 அன்று இறந்து போனார் .

***************************************************

ஒரு கடல்கன்னியும் சில குடிகாரர்களும்

நதியில் இருந்து
வழி தப்பிய கடல்கன்னி ஒருத்தி
திறந்த மேனியுடன்
அந்த அறையினுள் நுழைந்தாள்

உள்ளே சில குடிகாரர்கள்
போதையில் மூழ்கியிருந்தார்கள்

அந்தக்குடிகாரரகள்
அவள் மீது காறி உமிழ்ந்தார்கள்

நதியில் இருந்து
புதிதாக வந்த அவளுக்கோ
ஒன்றும் புரியவில்லை

அந்தக் குடிகாரர்கள் அவளை நோக்கி
வசை பாடத்தொடங்கினார்கள்

அவர்களுடைய வசவு வார்த்தைகள்
அவள் அங்கமெல்லாம் வழிந்தோடி
அவளது தங்க நிற மார்புகளை
மூழ்கடித்துச் சென்றன.

கண்ணீரைப் பற்றி
யாதும் அறிந்திராத அவளோ
அழவில்லை

நிர்வாணத்தை மட்டுமே
உடுத்திப் பழகிய அவளுக்கு
ஆடையின் அவசியம் தெரிந்திருக்கவில்லை

அந்தக் குடிகாரர்கள்
சிகரெட் கங்குகளினால்
அவள் மேனியில்
சூடுபோட்டார்கள்
அவள் நிலையைக் கண்டு
ஆனந்தக்கூத்தாடினார்கள்

வார்த்தைகள் அறியாத அவளோ
எதுவும் பேசவில்லை

அவளது இருகரங்களும்
வெண்மைநிறப் புஷ்பராகக்
கல்லால் செய்யப்பட்டது போல்
காட்சியளித்தன

தொலைதூரத்து அன்பின் நிறமாய்
அவள் கண்கள் மின்னின

அவள் உதடுகள்
பவள ஒளியில்
மெளனித்து நின்றன

திடீரென அவள்
அந்தக் கதவின் வழியே வெளியேறி
நதியோடு கலந்துவிட்டாள்.

நதியில் நுழைந்ததும்
அவள் பரிசுத்தமானாள்
மழையில் ஒரு வெள்ளைக்கல் போல
அவள் மின்னினாள்

பின்னால் திரும்பிக்கூடப் பாராமல்
அவள் நீந்தினாள்
வெறுமையை நோக்கி நீந்தினாள்
மரணத்தை நோக்கி நீந்தினாள்


***************************************************

Fable of the Mermaid and the Drunks - Pablo Neruda

All those men were there inside,
when she came in totally naked.
They had been drinking: they began to spit.
Newly come from the river, she knew nothing.
She was a mermaid who had lost her way.
The insults flowed down her gleaming flesh.
Obscenities drowned her golden breasts.
Not knowing tears, she did not weep tears.
Not knowing clothes, she did not have clothes.
They blackened her with burnt corks and cigarette stubs,
and rolled around laughing on the tavern floor.
She did not speak because she had no speech.
Her eyes were the colour of distant love,
her twin arms were made of white topaz.
Her lips moved, silent, in a coral light,
and suddenly she went out by that door.
Entering the river she was cleaned,
shining like a white stone in the rain,
and without looking back she swam again
swam towards emptiness, swam towards death.

******************************************************
http://www.poemhunter.com/pablo-neruda/poet-6638/

Tuesday, July 12, 2005

ஃபெடரிக்கோ கார்சியா லார்கா
ஃபெடரிக்கோ கார்சியா லார்கா(Federico Garcia Lorca ), ஜூன் 5 ,1898 இல் , ஸ்பெயின் நாட்டில் , ஒரு நிலக்கிழாருக்கும் ஆசிரியைக்கும் மகனாகப் பிறந்தார். லார்கா தன் இளம் வயதிலேயே ஒரு சிறந்த கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் திகழ்ந்தார். கல்லூரிப் பட்டப் படிப்பில் நாட்டமில்லாத லார்கா , கவிதை நினைவோடு , கற்பனையில் மிதந்து வந்தார். நாடோடி மக்களுடன் சிநேகம் கொண்டு அவர்களின் கிராமியப் பாடல்களைக் கேட்டு இன்புற்றார் . லார்காவின் பெரும்பாலான கவிதைகளுக்கான கரு, கிராமியப் பாடல்களில் இருந்தே பெறப்பட்டது ( கீழிருக்கும் கவிதையும் கூட )

லார்கா , ஓர் ஓரினச் சேர்க்கைப் பிரியர் , இதில் தவறு ஒன்றும் இல்லை எனத் தன் படைப்புகள் வழியே வாதிட்டார் .
" ஏவாள் என்பவள் , ஆதாம் உடம்பின் ஒரு பாகம் என்றால் , ஆதாமும் ஏவாளும் ஒன்று தானே.. பிறகு ஏன் உடலுறவில் மட்டும் பால் பேதம் ? " என்று தத்துவம் பேசினார்.

தனது நண்பர் மெஜியாஸ் (Ignacio Sanchez Mejias) காளைப் போரில் இறந்த பொழுது , லார்கா பாடிய இரங்கற்பா ( Lament ) , அவரது கவிதைப் படைப்புகளிலேயே மிகவும் சிறந்ததாதக் கருதப்படுகிறது.

இவரது நாடகங்களில் Blood Wedding (1933) மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

1936 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் லார்கா கொல்லப்பட்டார் (August 19,1936 ) .

லார்காவின் இறப்புக்குப் பின்பே அவர் பரவலாக அறியப்பட்டார் .இவர் அமெரிக்காவில் வசித்தபொழுது
எழுதிய கவிதைகள் (The Poet in Newyork) என்ற தலைப்பில் வெளியானது.


நம்பிக்கையற்ற மனைவி

புனித ஜேம்ஸ் இரவொன்றில்
தெருவிளக்குகள் அணைந்ததும்
சில்வண்டுகள் ஒளியேற்றின

தெருக்கோடி முனையில்
யுவதி ஒருத்தியின்
தூங்கிக் கொண்டிருந்த மார்புகளைத்
தொட்டுத் தடவினேன்..

கண நேரத்தில்
அவள் மார்புகள் இரண்டும்
கூரிய ஹியாசிந் மலரின்
இதழ்களைப் போல்
கிளர்ந்தெழுந்தன...

அவள் ஆடைக் கஞ்சியின் மொரமொரப்பு
பட்டு ஆடையை
பத்துக் கத்திகளால் கிழிப்பது
போன்று சத்தமிட்டது ..

பசுமையற்ற வெளிறிய மரங்கள்
உயரமாக வளர்ந்திருந்தன
ஆற்றுக்கு அப்பால்
நாய்கள் குரைத்துக்கொண்டிருந்தன

அவளை என்னோடு
அழைத்துச் சென்றேன்

கரிய பெர்ரி மரங்களையும்
நாணல் புதர்களையும்
ஹாதார்ன் முட்செடிகளையும்
கடந்து சென்றோம்

அவள் கூந்தல் கற்றைகள் படியுமளவு
பள்ளம் ஒன்று தோண்டினேன்

நான் என் கழுத்துப்பட்டையை
நீக்கினேன்

அவளோ தன் ஆடையைக் களைந்தாள்

கைத்துப்பாக்கியுடன் கூடிய
சட்டையை நான் அவிழ்த்தேன்

அவள் தனது நான்கு உள்ளாடைகளையும்
உதறி விட்டாள்

வெள்ளியும் முத்துக்களும்
அவள் மேனியின் தகதகப்பிற்கு
ஈடாகாது

என் கரம் பட்டதும்
அவள் தொடைகள் இரண்டும்
மீன்களைப் போல துள்ளிவிழுந்தன

அதில் ஒரு பாதி தணலாய்க் கொதித்தது
மறுபாதி ஜில்லென்றிருந்தது

"அந்த" அனுபவம்
கடிவாளம் இல்லாத குதிரையொன்றில்
உல்லாசப் பயணம்
செய்தது போல் இருந்தது எனக்கு..

அன்று அவள் சொன்ன வார்த்தைகளை
ஆண்மகனாகிய என்னால்
திரும்பச் சொல்லமுடியாது

அவள் முத்தங்களாலும் , மணலாலும்
கறைபட்டுப் போனேன்

நானும் அவளும்
ஆற்றங்கரையை விட்டுப் புறப்பட்டோம்

லில்லிப்பூக்களின் கத்திமுனைகள் காற்றோடு
சண்டையிட்டுக் கொண்டிருந்தன

நானொரு நாடோடி மனிதனாக
மிக கண்ணியமாகத் தான்
அவளுடன் நடந்து கொண்டேன்

வைக்கோல் நிற பட்டாடைகளை
அவளுக்கு வாரி வழங்கினேன்

இருந்தும் நான் அவளைக் காதலிக்க முடியாது
ஏனெனில்
அவள் ஒரு கன்னிப் பெண் என்று நினைத்துத்தான்
ஆத்தங்கரைக்கு அழைத்துச் சென்றேன்
ஆனால்
அவளுக்கோ
ஏற்கனவே ஒரு கணவன் இருக்கிறான்
என்ற விஷயத்தை
இப்பொழுது தான் அவள் சொல்கிறாள் ...


**************************************************
The Faithless Wife - Federico Garcia Lorca

It was on St. James night
and almost as if I was obliged to.
The lanterns went out
and the crickets lighted up.
In the farthest street corners
I touched her sleeping breasts,
and they opened to me suddenly
like spikes of hyacinth.
The starch of her petticoat
sounded in my ears
like a piece of silk
rent by ten knives.
Without silver light on their foliage
the trees had grown larger
and a horizon of dogs
barked very far from the river.

Past the blackberries,
the reeds and the hawthorn
underneath her cluster of hair
I made a hollow in the earth
I took off my tie,
she took off her dress.
I, my belt with the revolver, She, her four bodices.
Nor nard nor mother-o’-pearl
have skin so fine,
nor does glass with silver
shine with such brilliance.
Her thighs slipped away from me
like startled fish,
half full of fire,
half full of cold.
That night I ran
on the best of roads
mounted on a nacre mare
without bridle or stirrups.
As a man, I won’t repeat
the things she said to me. The light of understanding
has made me most discreet.
Smeared with sand and kisses
I took her away from the river.
The swords of the lilies
battled with the air.

I behaved like what I am.
Like a proper gypsy.
I gave her a large sewing basket,
of straw-colored satin,
and I did not fall in love
for although she had a husband
she told me she was a maiden

***************************************

Friday, July 01, 2005

எங்க வீட்டு வாண்டுகள்

எப்படி இருந்த நாங்க ...இப்படி ஆயிட்டோம் ...
பீச்சாங்கைப் பக்கம் கறுப்பா ஒரு ஆளு நிக்குறாருல , அவரு பேரு தங்க விக்ரம். எங்க மூத்த அண்ணன் பையன் , வயசு மூணு ஆவுது , இப்போ இவரு என்ன செய்யுறார்னு கேட்குறிங்களா ? இவரு இன்னும் ஸ்கூலுக்குப் போகலை...ஜாலியா வீட்டுல டீவி பாத்துக்கிட்டும் பொம்மைங்க கூட வெளாண்டுக்கிட்டும் சந்தோஷமா இருக்கார் , அதுவும் இல்லாம ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தம்பிப் பாப்பா வேற பொறந்துருக்கா ,எப்பப் பாத்தாலும் அபிக்குட்டி அபிக்குட்டின்னு கொஞ்சிக்கிட்டு கெடக்கார்.

சோத்தாங்கைப் பக்கம் நிக்குறாரே , அவரு ரொம்பப் பொல்லாதவர், பேரு ஸ்வஸ்திக் குமார் ,எங்க ரெண்டாவது அண்ணனோட பையன் , நாலு வயசு ஆகுது , UKG படிக்குறார் ,ஸ்கூல்ல மிஸ் எல்லாரையும் ராக்கிங் பண்ணிட்டு இருக்காராம் ," டே ஸ்வஸ்திக் நீ படிச்சு என்னவா ஆகப் போறன்னு மிஸ் கேட்டா ...நானும் எங்க சித்தப்பா மாதிரி கம்பூட்டரு இஞ்சின் ஆவேன் " னு சொல்லுறாராம்.


0


டிராவிட் நல்ல பேட்ஸ்மேனா ? கங்குலி நல்ல பேட்ஸ்மேனா ? ன்னு எங்கிட்ட கேட்டா , கங்குலிதான் நல்ல பேட்ஸ்மேனுன்னு சொல்லுவேன் . ஆனா கங்குலிக்கு இப்போலாம் நேரமே சரியில்ல ..
சரியாவே ஆட மாட்டுறாரு ,கங்குலியை கிண்டல் பண்ணி ஏகப்பட்ட ஜோக்குகள் வந்துட்டிருக்கு, இதையும் பாருங்களேன்....