Friday, September 23, 2005

ஜெயச்சந்திரன் பாடல்கள்

எனது டவுசர் காலப் பருவத்திலேயே திரைப்படப்பாடல்கள் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது.எனக்கு நினைவு தெரிந்து நான் ரசித்த முத பாட்டு இதுதான் . மெளன கீதங்கள்ல வருமே " மூக்குத்திப் பூமேலே காத்து ஒக்காந்து பேசுதம்மா" இந்தப் பாட்டு தான்.

0

நான் அஞ்சாப்பு படிக்கிற வரைக்கும் எங்க வீட்டில ரேடியோவோ , டேப் ரெக்கார்டரோ கிடையாது. நான் ஆறாப்பு படிக்கும் போது எங்கம்மாவுக்குக் கொஞ்சம் ஒடம்பு சரியில்லாமப் போச்சு , அதுக்கப்புறம் எங்கம்மா சாமிப்பாட்டு கேட்குறதுக்காக எங்க ஐயா நேஷனல் டேப் ரெக்கார்டரும் கண்ணன்சாமிப் பாட்டு கேசட்டு ரெண்டும் வாங்கிக் கொடுத்தாரு , ஐ ஜப்பான் டேப்பு ஜப்பான் டேப்புனு எந்நேரமும் சந்தோசமா அது பக்கத்துலயே கெடப்பேன்.எனக்கு ரெண்டு அண்ணன்மாரு இருக்காங்க , எங்க மூத்த அண்ணனுக்கு யேசுதாஸ் பாட்டுன்னா ரொம்பப்பிடிக்கும் , சிவகாசில இளையராஜா மியூசிக்கல்ஸ் , பாபு மியூசிக்கல்ஸ் இருந்துச்சு .. அங்க தான் ரொம்ப கேசட்டு பதிஞ்சிருக்கோம்


0

ஸ்ரீவில்லிபுத்தூர்ல ரெண்டு பேரு பார்ட்னராச் சேந்து தளபதி மியூசிக்கல்ஸ் வச்சிருந்தாங்க அதுல ஒருத்தரு தனியாப் பிரிஞ்சு போயி பாட்ஷா மியூசிக்கல்ஸ்னு வச்சிட்டாரு .. நான் சிவகாசில அய்ய நாடார் ஜானகி காலேஜுல பி.எச்.சி கெமிஸ்டிரி சேந்த சமயத்துல, சிவகாசில பஸ்ஸ்டாண்ட ஒட்டி இருக்குற பாண்டியன் காம்ப்ளக்ஸ் உள்ளக்க தளபதி மியூசிக்கல்ஸ் வந்துச்சு, எங்கய்யா கிட்ட , நான் புத்தகம் ஜெராக்ஸ் எடுக்கணும்னு பொய் சொல்லி நிறைய ரூவாவாங்கி கேசட் பதிவேன்

0

நான் பதியுற முத கேசட்டுல முத பாட்டா ஆனந்தக் கும்மி படத்துல ஜானகியும் , ஷைலஜாவும் சேந்து பாடுன " ஒருகிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா " பாட்டுத்தான் பதியணும்னு ஏற்கனவே முடிவு பண்ணி வச்சிருந்தேன்.அதே மாதிரியே முத கேசட்டுல அந்தப் பாட்டு தான் பதிஞ்சேன் , எனக்கு 1970 ல இருந்து 1985 வரைக்கும்வந்த பாட்டுகள் தான் ரொம்ப பிடிக்கும் , அந்தக் காலத்துல வந்த நல்ல நல்ல பாட்டுகள் எல்லாம் எனக்குஓரளவுக்குத் தெரியும்.

எனக்கு ஜானகி குரலும் , ஜெயச்சந்திரன் குரலும் ரொம்பப் பிடிக்கும்

ஜெயச்சந்திரன் பாடுனதுல முதல் முதலா நான் ரொம்ப ரசிச்சுக் கேட்டது.டிசம்பர் பூக்கள் படத்துல வர்ர அழகாகச் சிரித்தது அந்த நிலவு அனலாகக் கொதித்தது இந்த மனது இந்தப் பாட்டு தான் .. இந்தப் பாட்ட கேட்டவுடனே , ச்சே ஜெயச்சந்திரனோட குரலு , யேசுதாசு குரலை விட ரொம்ப நல்லா இருக்கேன்னு தோணுச்சு . இந்தப் பாட்ட கேட்ட அன்னைக்கு தான் ஜெயச்சந்திரன் பாடல்கள் மீது தீராக்காதல் ஏற்பட்டு அவர் பாடிய பாடல்களையெல்லாம் தேடித் தேடிப் பதிஞ்சேன் . விருதுநகர்ல இருந்து சிவகாசி போற வழில வலது புறமா ஒரு ரோடு பிரியும் , அது வழியா போனாசெங்குன்றாபுரம்னு ஒரு ஊர் இருக்கு , அங்க கருமாரியம்மன் மியூசிக்கல்ஸ்னு ஒன்னு இருக்கு அங்க சிலோன் ரேடியோல இல்லாத பாட்டு கூட கிடைக்கும் .

0

நான் எம்.எஸ்.சி கம்ப்யூட்டரு படிச்சப்போ கடேசி செமஸ்டரு , வெளியூருக்குப் போய் ப்ராஜக்ட் செய்யவேண்டிய கட்டாயாம் , எனக்கு அப்போலாம் மெட்ராஸ் பிடிக்காது , அதனால பெசாம திருச்சில பிராஜகட் பண்ணலாம்னுமுடிவு பண்ணிட்டேன் , திருச்சிக்குக் கிளம்பணும் , எனக்குப் பிடிச்ச கேசட்டு , எங்க வீட்டுல இருந்த நேஷனல் டேப் ரெக்கார்டரு எல்லாத்தையும் எடுத்துட்டுப் போய்ட்டேன் . திருச்சில உறையூர்ல இருக்குற ஸ்டார் மேன்ஷ்ன்ல பசங்கலாம் சேந்து ரூம் எடுத்துத் தங்குனோம். அந்த மேன்ஷன் பக்கத்துல இந்தியன் மியூசிக்கல்ஸ் இருந்திச்சு , அவரும் ஓரளவுக்கு சில அபூர்வமான பாடல்களை எல்லாம் வச்சிருந்தாரு.

0

பிராஜக்ட் முடிச்சிட்டு வீட்டுலயே ஒரு 5 மாசம் இருந்துட்டேன் , அதுக்கப்புறம் வேலை தேடி சென்னைப் பயணம் . அங்க போயி வேலை மயிறத் தேடாம எங்ககடா மியூசிக்கல்ஸ் இருக்குன்னு தேடிட்டுத் திரிஞ்சேன்திருவல்லிக்கேணி பைகிராப்ஸ் ரோட்டுல வசந்தவிகார் ஹோட்டல் ஒன்னு இருக்கு , அதுக்கு எதுத்தாப்புலமாடில காயத்ரி மியூசிக்கல்ஸ் இருக்கு , அங்க தான் எனக்கு நிறைய ஜெயச்சந்திரன் பாடல்கள் கிடைச்சதுஅப்புறம் ஸ்ரீஇவில்லிபுத்தூர்ல இருக்குற பாட்ஷா மியூசிக்கல்ஸ் அங்கயும் ரொம்பப் பாட்டு கிடைச்சது.மூணு வருஷம் மெட்ராஸ்ல வேலை , அப்புறமா பெங்களூருக்குக் கிளம்பி வந்து இங்க ரெண்டு வருஷம்குப்பை கொட்டியாச்சு.

0

ஜெயச்சந்திரன் தமிழ்ல பாடுல மொதப்பாட்டு அலைகள் படத்துல வர்ர பொனென்ன பூவென்ன கண்ணே பாட்டுன்னுகொஞ்ச பேரு சொல்றாங்க , ஆனா இன்னும் கொஞ்சப் பேரு என்ன சொல்றாங்கன்னா , மணிப்பாயல் படத்துல வர்ர " தங்கச் சிமிழ் போல் இதழோ .. அந்தத் தங்கத் தமிழ் போல் மொழியோ " பாட்டுத் தான் மொதப் பாட்டுன்னு சொல்றாங்க..
இதுல எந்தப் பாட்டு மொதப்பாட்டுன்னு எனக்குத் தெரியாது வெவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க.

0

ஜெயச்சந்திரன் தமிழ்ல சுமார் 250 பாடல்கள் முதல் 300 பாடல்கள் வரை பாடியிருப்பார்னு நினைக்கிறேன் . எனக்கு இதுவரை சுமார் 200 பாடல்கள் வரை தெரியும். இதில் சுமார் 160 பாடல்கள் வரை என்னிடம் இருக்கின்றன ,
இதில் 120 பாடல்கள் வரை Mp3 வடிவத்தில் இருக்கின்றன் . சொச்சம் இருக்குற பாட்டுகளையும் கூடிய சீக்கிரம் தேடிப் பிடிக்கணும் .எனக்குத் தெரிஞ்சு ஜெயச்சந்திரன் பாட்டு லிஸ்ட் இதான் , இந்த லிஸ்டுல இருக்குற ஒரு 40 பாட்டுகளை நான் ஒரு தடவ கூட கேட்டது கிடையாது அப்புறம் இதுல சில பாட்டுகள்ல பெண் குரல் யாருனு எனக்குத் தெரில , நான் தெரியாததுக்குலாம் குத்துமதிப்பா வாணிஜெயராம்னு போட்டிருக்கேன் , ஏன்னா வாணி ஜெயராம் கூடச் சேந்து ஜெயச்சந்திரன் நிறையா பாட்டு பாடிருக்காரு. அதான் .. எதுனா தப்பு இருந்தாச் சொல்லுங்க , இந்த லிஸ்டுல இல்லாத பாட்டு எதாச்சும் உங்களுக்குத் தெரியும்ணாலும் சொல்லுங்க , உங்களுக்கு புண்ணியமாப் போவும் ...

ஜெயச்சந்திரன் பாடல்கள்


(1) பொன்னென்ன பூவென்ன கண்ணே .. உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே/ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னை .. புவி காணாமல் போகாது பெண்ணே 0 ஜெயச்சந்திரன் - அலைகள்
(2) தங்கச் சிமிழ் போல் இதழோ .. அந்தத் தங்கத் தமிழ் போல் மொழியோ/தங்கச்சிலை போல் உடலோ .. அது தலைவனின் இன்பக் கடலோ0 ஜெயச்சந்திரன் - மணிப்பாயல்

(3) அழகே உன்னை ஆராதனை செய்கின்றேன் / மலரே மலரே ஆராதனை செய்கின்றேன்0ஜெயச்சந்திரன் - அழகே உன்னை ஆராதிக்கிறேன்

(4) கீதா .. சங்கீதா .. சங்கீதமே செளபாக்கியமே .. ஜீவஅமுதம் உன் மோகனம்0ஜெயசந்திரன் - & ஜென்சி- அன்பே சங்கீதா

(5) சங்கீதமே .. என் தெய்வீகமே .. நான் தேடும் என் காதல் ராஜாங்கமே வானோரும் காணாத பேரின்பமே ... பேரின்பமே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - காஷ்மீர் காதலி

(6) மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் .. இது முதலுறவு .. இது முதல் கனவு/இந்தத் திருநாள் .. தொடரும் ... தொடரும் 0ஜெயச்சந்திரன் & சுசிலா - முதல் இரவு

(7) பாடிவா தென்றலே ஒரு பூவைத் தாலாட்டவே பாவை கொண்ட கூந்தல் வாசம் கண்டு நீயும் பாராட்டவே 0ஜெயச்சந்திரன் - முடிவல்ல ஆரம்பம்

(8) திருவிழா திருவிழா இளமையின் தலைமையில் ஒருவிழா வேரினிலே நீ பழுத்த பலா ...விழிகளிலே தேன் வழிந்த நிலா .. இதோ ..0ஜெயச்சந்திரன் & ? - நாம் இருவர்

(9) அழகாகச் சிரித்தது அந்த நிலவு ..அதுதான் இதுவோ அனலாக கொதித்தது இந்த மனது ...இதுதான் வயதோ0ஜெயச்சந்திரன் & ஜானகி - டிசம்பர் பூக்கள்

(10) நான் மெதுவாகத் தொடுகின்ற போது.. கண் மயங்காமல் இருப்பாளோ மாதுதிருமேனி கொஞ்சம் .. தழுவாமல் நெஞ்சம்..துயிலாது ...கண்கள் துயிலாது 0 ஜெயச்சந்திரன்&வாணிஜெயராம் - உனக்கும் வாழ்வு வரும்

(11) உந்தன் காவிய மேடையிலே .. நான் கவிதைகள் எழுதுகின்றேன்/அந்தக் காமனின் பூஜையிலே நான் மோகனம் பாடுகிறேன் ..0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - முறைப்பொண்ணு

(12) உன் விழி சொல்லும் சிறுகதையொன்று ஒரு தொடராக மலர்கின்றதோ அதன் சுவையென்ன அதன் பொருளென்ன .. நாளை விடிந்தாலே தெரியும் கண்ணே 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்

(13) ஓடையின்னா நல்லோடை ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை தங்கக் கொழுந்தனுக்கு சாந்துப் பொட்டு வைக்க வேணும் ..தன்னன்னா தானே தன்னன்னா 0ஜெயச்சந்திரன் & ஜானகி - ராஜாத்தி ரோஜாக்கிளி

(14) மதுக்கடலோ .. மரகத ரதமோ.. மதன் விடும் கணையோ ..மழைமுகில் விழியோ/கனியிதழ் சுவைதனில் போதை ஊட்டும் கோதை .. மணம் கமழ் ராதை நீயே சீதை0ஜெயச்சந்திரன் & ஜானகி - குமரிப்பெண்ணின் உள்ளத்திலே

(15) செவ்வானமே பொன்மேகமே செவ்வானமே பொன்மேகமே 0ஜெயச்சந்திரன் & சசிரேகா கோரஸ் - நல்லதொரு குடும்பம்

(16) எனது விழி வழிமேலே ... கனவு பல விழி மேலே/வருவாயா .. நீ வருவாயா என நானே எதிர்பார்த்தேன் ..0ஜெயச்சந்திரன் & ஜானகி கோரஸ் - சொல்லத் துடிக்குது மனசு

(17) தாலாட்டுதே வானம் .. தல்லாடுதே மேகம்.. தாளாமல் மடிமீது தார்மீக கல்யாணம் ... இது கார்கால சங்கீதம்0ஜெயச்சந்திரன் & ஜானகி - கடல் மீன்கள்

(18) ஒரு வானவில் போலே .. என் வாழ்விலே வந்தாய்/உன் பார்வையால் எனை வென்றாய் .. என் உயிரிலே நீ கலந்தாய்..0ஜெயச்சந்திரன் & ஜானகி - காற்றிலே வரும் கீதம்

(19) சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன் என் முத்தான முத்தம்மா என் கண்ணான கண்ணம்மா ..0ஜெயச்சந்திரன் கோரஸ் - காற்றினிலே வரும் கீதம்

(20) இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமேகனவுகளின் சுயம்வரமோ கண்திறந்தால் சுகம் வருமோ 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - வைதேகி காத்திருந்தாள்

(21) மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ ..வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோஇவள் ஆவாரம் பூதானோ ..நடை தேர்தானோ .. சலங்கைகள் தரும் இசை தேன்தானோ0ஜெயச்சந்திரன் - கிழக்கே போகும் ரயில்

(22) வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் ..புதுமுகமான மலர்களே நீங்கள்நதிதனில் ஆடி .. கவி பல பாடி .. அசைந்து ஆடுங்கள் அசைந்து ஆடுங்கள்0ஜெயச்சந்திரன் - ரயில் பயணங்களில்

(23) ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு .. பொன்மானே உன்னைத் தேடுது0ஜெயச்சந்திரன் - வைதேகி காத்திருந்தாள்

(24) காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடிபூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி0ஜெயச்சந்திரன் - வைதேகி காத்திருந்தாள்

(25) ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ நம் வீட்டினில் பூத்தது ஏராளம்0ஜெயச்சந்திரன் & ஜானகி - தழுவாத கைகள்

(26) விழியே விளக்கொன்று ஏற்று ..விழுந்தேன் உன் மார்பில் நேற்று 0ஜெயச்சந்திரன் & ஜானகி - தழுவாத கைகள்

(27) அடி மாடி வீட்டு மானே உன்னை கட்டிக்கிட்டேன் நானேஐயர் வைக்கலை .. அம்மி மிதிக்கலை .. மேளமும் கொட்டலை .. தாலியும் கட்டலைகல்யாணம் தான் ஆகிப்போச்சு இன்னிக்கு முதலிரவு என்ன ஆச்சு ?0ஜெயச்சந்திரன் & வித்யா - நட்பு

(28) அஞ்சுவிரல் கெஞ்சுதடி வஞ்சி உன்னைப் பார்த்து பஞ்சணையில் தஞ்சம் கொடு நெஞ்சம் தன்னைச் சேர்த்து0ஜெயச்சந்திரன் & ஜானகி - நட்பு

(29) மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே0ஜெயச்சந்திரன் & சுசிலா - நானே ராஜா நானே மந்திரி

(29) பூவிலே மேடை நான் போடவா பூவிழி மூட நான் பாடவா0ஜெயச்சந்திரன் & சுசிலா - பகல்நிலவு

(30) காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ .. நெருங்கிவா படிக்கலாம் ரசிக்கலாம்0ஜெயச்சந்திரன் & ஜானகி - சூரக்கோட்டை சிங்கக்குட்டி

(31) தென்றலது உன்னிடத்தில் சொல்லிவைத்த சேதி என்னவோ 0ஜெயச்சந்திரன் & ஜானகி - அந்த 7 நாட்கள்

(32) கவிதை அரங்கேறும் நேரம் மலர்க்கனைகள் பரிமாறும் தேகம்இனி நாளும் கல்யாண ராகம் .. இன்ப நினைவு சங்கீதமாகும்0ஜெயச்சந்திரன் & ஜானகி - அந்த 7 நாட்கள்

(33)கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ என் காதல்வீணை0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - லாட்டரி டிக்கெட்

(34) தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த ராகம்0ஜெயச்சந்திரன் & ஜானகி - உன்னை நான் சந்திதேன்

(35) தவிக்குது தயங்குது ஒரு மனது .. தினம் தினம் தூங்காமலேஒரு சுகம் காணாமலே ... 0ஜெயச்சந்திரன் & ஷைலஜா - நதியைத் தேடிவந்த கடல்

(36) பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா/உன் தோளுக்காகத் தான் இந்த மாலை ஏங்குது ..0ஜெயச்சந்திரன் & ஜானகி - அம்மன் கோவில் கிழக்காலே

(37) காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்0ஜெயச்சந்திரன் & சுனந்தா - புதுமைப்பெண்

(38) செம்மீனே செம்மீனே உன் கிட்ட சொன்னேனே0ஜெயச்சந்திரன் & சுனந்தா - செவ்வந்தி

(39) கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்0ஜெயச்சந்திரன் - ஒரு தலை ராகம்

(40) காதல் ஒரு வழிப்பாதை பயணம்0ஜெயச்சந்திரன் -
கிளிஞ்சல்கள்

(41) கலையோ சிலையோ .. இது பொன் மான் நிலையோ... பனியோ பூங்கிளியோ .. நிலம் பார்க்க வந்த நிலவோ 0ஜெயச்சந்திரன் - பகலில் ஒரு இரவு

(42) ஆடிவெள்ளி ... தேடி உன்னை ... நான் அடைந்த நேரம் / கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம் (அந்தாதி)0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - மூன்று முடிச்சு

(43) மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை .. மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில் காதல் தேவதைகள் பாடும் பாடல்களில் பரவசம் அடைகின்ற இதயங்களே ...0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - சாவித்திரி

(44) மலரோ நிலவோ மலைமகளோ ... தேவி வடிவாக அமர்ந்தவள் யாரோ0ஜெயச்சந்திரன் - ராகபந்தங்கள்

(45) பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும் பழகிய பலன் உருவாகும்பாடிவா பாடிவா .. பூந்தென்றலே ..0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - புவனா ஒரு கேள்விக்குறி

(46) பூவே மல்லிகைப் பூவே நெஞ்சில் போதை ஏறுதடி/பொன்மேனியும் கண்ஜாடையும் கண்டு காதல் மீறுதடி0ஜெயச்சந்திரன்&ஜானகி - ?

(47) தேவி ... செந்தூரக் கோலம் .. என் சிங்கார தீபம் .. திருக்கோயில் தெய்வம்/நான் உனக்காக வாழ்வேன் .. காதல் இது காலங்களின்
லீலை0ஜெயச்சந்திரன் & ஜானகி - துர்காதேவி

(48) மெளனமல்ல மயக்கம் .. இளமை ரதங்கள் வெள்ளோட்டம் ..சலனம் பார்வையில்.. சரசம் வார்த்தையில் .. மெய்சிலிர்க்கும் வேளையில்0ஜெயச்சந்திரன் & ஜானகி -அழகு

(49) கண்ணே கரிசல் மண்ணு பூவே தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே0ஜெயச்சந்திரன் -
வைகாசி பொறந்தாச்சு

(50) கோடி இன்பங்கள்.. தேடும் உள்ளங்கள் ... ஊடல் வந்தாலே கூடும்பாவை உன் தேகம் .. போதை உண்டாகும் .. பூமஞ்சம் ஆதலால்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - அவள் ஒரு காவியம்

(51) பாவை நீ மல்லிகை.. பால் நிலா புன்னகை மான்களில் ஓர்வகை .. மங்கையே என்னிடம் நீ அன்புவை0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - தெய்வீக ராகங்கள்

(52) என்னவோ சேதி மனம் பேச எண்ணும் பேசாது/காதலின் கீதம் இங்கு
பாடவரும் பாடாது0ஜெயச்சந்திரன் & ஜானகி - தேநீர்

(53) முத்துரதமோ .. முல்லைச்சரமோ .. மூன்று கனியோ .. பிள்ளைத் தமிழோ கண்ணே நீ விளையாடு... கனிந்த மனதில் எழுந்த நினைவில் காதல் உறாவாடு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - பொன்னகரம்

(54) நீரில் ஒரு தாமரை .. தாமரையில் பூவிதழ் ... பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ (அந்தாதி)0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - நெஞ்சத்தை அள்ளித்தா

(55) காமதேணு கன்னியாக கண்ணில் வந்ததைக் கண்டேன்/இது தானே தேவலோகம் .. இனிமேல் தான் ராஜயோகம்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - பால்காரி

(56) இசைக்கவோ நம் கல்யாண ராகம்..கண்மூடி மெளனமாய் நாண மேனியில் கோலம் போடும் போது0ஜெயச்சந்திரன் & ஜானகி - மலர்களே மலருங்கள்

(57) பூமாலைகள் இரு தோள் சேருமே வெட்கம் வந்து இவள் கண்ணில் முத்தம் கொஞ்சும்..0ஜெயச்சந்திரன் & ஜானகி- ஜாதிப்பூக்கள்

(58) ஊதக் காத்து வீசயில குயிலு கூவயில வாட தான் என்ன வாட்டுது0ஜெயச்சந்திரன் & ஜானகி - கிராமத்து அத்தியாயம்

(59) பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா 0ஜெயச்சந்திரன் & சுனந்தா - என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்

(60)சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்லை0 ஜெயச்சந்திரன் -செந்தூரப் பூவே

(61) கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே..0ஜெயச்சந்திரன் & ஜானகி - கடலோரக்கவிதைகள்

(62) வெள்ளி நிலாவினிலே .. தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா ...0ஜெயச்சந்திரன் - சொன்னது நீதானா

(63) உறவுகள் தொடர்கதை .. உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் .. முடிவிலும் ஒன்று தொடரலாம் .. இனியெல்லாம் சுகமே 0 ஜெயச்சந்திரன் - அவள் அப்படித்தான்

(64) பாவைமலர் மொட்டு .. இளம்பருவமோ பருவமோ ஈரெட்டு/பாடும் வண்ணச்சிட்டு .. ஒன்று தரவா கன்னம் தொட்டு... 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - அன்புள்ள அத்தான்

(65) பாடு தென்றலே புதுமணம் வந்தது ... ஆடு தோகையே புது இசை வந்தது ..காதலென்னும் பூமழையைப் பாடிடுவாய் கவிதையினிலே நெஞ்சமே ...0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - நெல்லிக்கனி

(66) அன்பே உன் பேர் என்ன ரதியோ .. ஆனந்த நீராடும் நதியோ..கண்ணே உன் சொல் என்ன அமுதோ .. காணாத கோலங்கள் எதுவோ ?0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- இதயமலர்

(67) மீனா ...ஹலோ மீனா ...கண்கள் கடல்மீனா ... விண்ணின் ஒளிமீனா ...மண்ணின் பொன்மீனா .. மன்னன் கொடிமீனா .. புது மோகம் உன்னிடம் ...0ஜெயச்சந்திரன் - மாம்பழத்துவண்டு

(68) அலையே கடல் அலையே .. ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய்..இன்ப நினைவினில் பாடுகிறாய் என்னென்னவோ உன் ஆசைகள் 0ஜெயச்சந்திரன்&ஜானகி - திருக்கல்யாணம்

(69) என்னோடு என்னன்னவோ ரகசியம் ...உன்னோடு சொல்லவேண்டும் அவசியம்சொல்லத்தான் ஆசை துடிக்கின்றது .. நாணம் தடுக்கின்றது0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் -தூண்டில் மீன்கள்

(70) பாலாபிஷேகம் செய்யவோ உனக்குத் தேனாபிஷேகம் செய்யவோ..அலங்காரவள்ளி திருநாமம் சொல்லி மலர்கொண்டு பூஜைசெய்யவோ...0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - முத்தான
முத்தல்லவோ

(71) ஓடும் நதிகளில் ஆடும் மலர்களில் உனது முகம்/ஓங்கும் மலைகளில் தோன்றும் கனிகளில் உனது மணம்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - சரிகமபதநி

(73) தென்றல் ஒரு தாளம் சொன்னது... சிந்தும் சங்கீதம் வந்ததுசந்தங்கள் தண்ணீர் தந்தது மாலைப்பெண்ணே ...0ஜெயச்சந்திரன் - கனவுகள் கற்பனைகள்

(74) ஆயிரம் ஜென்மங்கள் ஆசைகள் ஊர்வலம் இணைவதோ பறவைகள்/இதயம் உன்னை நாடும் இதழ்கள் உன்னைத் தேடும் நல்ல நாள் அல்லவோ0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - அந்த வீட்டில் ஒரு கோயில்

(75) கடல் அலை கால்களை முத்தமிடும் புதுக்கலைசத்தமில்லாத முத்தங்களை கற்றுத் தந்தாள் இந்தக் கன்னி அலை 0ஜெயச்சந்திரன் - பொம்பளமனசு

(76) மல்லிகை பூவில் இன்று .. புன்னகை கோலம் ஒன்று .. மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா.... என்னென்று நீ சொல்லு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - பெண்ணின் வாழ்க்கை

(77) வானம் எங்கே மேகம் எங்கே ஒரு மேடை கொண்டு வா ..ஒரு வீணை கொண்டு வா .. ஒரு ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம்0ஜெயச்சந்திரன் & ஜானகி - நெஞ்சிலாடும் பூ ஒன்று

(78) அக்கா ஒரு ராஜாத்தி .. இவ அழகா சிரிச்சு நாளாச்சு/மனம் போலவே வாழ்வு .. உனை வந்து தான் சேர .. பிறந்தது காதல் இங்கே வா0ஜெயச்சந்திரன் & ஜென்சி - முகத்தில் முகம் பார்க்கலாம்

(79) ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ வடிவேலனோ தெய்வானையோ/யார் வந்து பிறப்பாரோ .. கண்ணான என் செல்வமே0ஜெயச்சந்திரன் & எல்.ஆர்.ஈஸ்வரி - மீனாக்ஷ¢குங்குமம்

(80) மேலாடை மேகத்தில் நீந்தும் .. பூமேடை நான் ஆடும் ஊஞ்சல்/நீராடும் தேகத்தில் மேனி .. தள்ளாடும் செந்தாழம் பூதானோ0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - அக்கரைக்கு வாரீங்களா

(81) ஒரு தெய்வம் தந்த பூவே0ஜெயச்சந்திரன் & ? - கன்னத்தில் முத்தமிட்டால்

(82) ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உன் பேர சொல்லும் ரோசாப்பூ0ஜெயச்சந்திரன் & ? - சூர்யவம்சம்

(83) கதை சொல்லும் கிளிகள் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - கராத்தே கமலா

(84) கண்ணன் முகம் காண காத்திருந்தாள் ஒரு மாதுமன்னன் வந்த பின்னே தன்நினைவு என்பது ஏது 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - ஆயிரம் ஜென்மங்கள்

(85) அமுத தமிழில் எழுதும் புதுமைப்புலவன் நீ0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

(86) திருமுருகன் அருகினிலே வள்ளிக்குறத்தி 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - மேயர்மீனாக்ஷ¢

(87) கொல்லையிலே தென்னை வைத்து0 ஜெயச்சந்திரன் - காதலன்

(88) ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நாளும் உன்னோடு தானே நான் வாழுவேனே/பெண்ணோடு வாழும் என் வாழ்க்கை யாவும் உன்னோடு தானே என் கண்ணின் மணியே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்

(89) சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது .. அன்பில் சேர்ந்தாடும் போது சுவை நூறானது/காதல் கொண்டாடும் மனம் தேனானது .. கல்யாணக் கோலம் தினம் கொண்டாடுது0ஜெயச்சந்திரன் & ஜானகி - தேநீர்

(90) விழியோ உறங்கவில்லை ... ஒரு கனவோ வரவுமில்லை/ கனவினிலேனும் தலைவனைக்காண கண்ணே நீ உறங்கு அவன் காட்சியை நீ வழங்கு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - நீ வாழவேண்டும்

(91) எங்கெங்கும் அவள் முகம் அங்கெல்லாம் என் மனம் ஏந்திழை அவள் உடல் தங்கம் .. அவள் இயல் இசை நாடகச் சங்கம்0ஜெயச்சந்திரன் - நெருப்பிலே பூத்த மலர்

(92) இதயவாசல் வருகவென்று பாடல் ஒன்று பாடும்/எதுகை தேடும் மோனை இன்று கவிதை உன்னை நாடும் 0ஜெயச்சந்திரன் - நெஞ்சில் ஒரு ராகம்

(93) செவ்வானமே பொன்மேகமே தூவுங்கள் மலர்கள் கோடிசொல்லுங்கள் கவிதை கோடி0ஜெயச்சந்திரன் குழுவினர்- நல்லதொரு குடும்பம்

(94) கலைமாமணியே சுவைமாங்கனியே எந்தன் சிங்காரச் செவ்வானமே அன்பே சங்கீதமே.../மணிமாளிகையே .. திருவாசகமே.. ஒளிமங்காத பொன்னாரமே.. அன்பே சங்கீதமே...0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - பணம் பெண் பாசம்

(95) நாலுவகை பூவில் .. மலர்க்கோட்டை ... அதில் ராணியாகிறாய்/நாலு புறம் வீசும் மலர்வாசம் அதில் நீயே ஆள்கிறாய்0ஜெயச்சந்திரன் & ஜானகி - ?

(96) பால் நிலவு காய்ந்ததேன் .. பார் முழுதும் ஓய்ந்ததேன்ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ .. நீ தான் உயிரே0ஜெயச்சந்திரன் - யாரோ அழைக்கிறார்கள்

(97) - ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள் கனவென்னும் முடிசூடிக் கன்னம் சிவந்தாள்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - நந்தா என் நிலா

(98) சாமத்தில் பூத்த மல்லி சந்திரனை சாட்சி வைச்சேன்/சாமியே உன்னை எண்ணி லாபத்தை வரவு வைச்சேன்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - உங்களில் ஒருத்தி

(99)சின்னப்பூவே மெல்லப் பேசு உந்தன் காதல் சொல்லிப்பாடு/வண்ணப் பூவிழி பார்த்ததும் பூவினம் நாணுது ..உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது0ஜெயச்சந்திரன் & சித்ரா- சின்னப்பூவே மெல்லப் பேசு

(100) நான் ராமனைப் போல் ஒரு அவதாரம்/அவன் போல் எனக்கு ஒரு தாரம்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - ஆசைக்கு வயசில்லை

(101) மணிமாளிகை கண்ட மகாராணியே .. மன்மதன் கோவிலில் மங்கள ஓசைகள்..மங்கையின் சொர்க்கங்கள் மாலையில் கொஞ்சுது மஞ்சள் நிலாமுகம் ஏனடி வெட்கங்கள் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- தரையில் வாழும் மீன்கள்

(102) மகாராணி .. உனைத்தேடி வரும் நேரமே .. எங்கும் குழல் நாதமே/தென்றல் தேரில் வருவான் .. அந்தக் காமன் விடுவான் .. கணை இவள் விழி0ஜெயச்சந்திரன் & ஜானகி - ஆயிரம் வாசல் இதயம்

(103) சிந்து நதி ஓரம் தென்றல் விளையாடும்..கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்0ஜெயச்சந்திரன் & சுசிலா - மலர்களில் அவள் மல்லிகை

(104) வா வா ஆடிவா வா வா ஆடிவா உன்னை அழைத்தேன் வா வா ஆடிவா.ஒரு நதியலை போல் வா வா ஆடிவா காதோரம் பூபாளம் இனிக்கும் ..0ஜெயச்சந்திரன் & - கல்லுக்குள் தேரை

(105) உனக்காக பூஜை செய்யும் பக்தனம்மா .. உறங்காமல் ஆசை வைத்த பித்தனம்மா/மனக்கோவில் தேவியே .. நீ தான் என் ஆவியே.. கட்டுக் கூந்தல் காற்றில் ஆட 0ஜெயச்சந்திரன் & ஜானகி - என் ஆசை உன்னோடுதான்

(106) தமிழில் இருந்து உலகம் முழுதும் இனிமை பிறந்தது அதைத் தழுவத் தழுவப் புதிய புதிய கவிதை பிறந்தது0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- பருவத்தின் வாசலிலே

(107) அழகி ஒருத்தி இளநீர் விக்குறா கொழும்பு வீதியிலேஅருகில் ஒருத்தன் உருகி நிக்குறான் குமரி அழகினிலே0ஜெயச்சந்திரன் & ? - பைலட் பிரேம்நாத்

(108) இருவிழிகள் பிறந்ததம்மா உலகைக் காணவே/இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரைப் போலவே 0ஜெயச்சந்திரன் & ஜானகி - சின்னமுள்ளு பெரியமுள்ளு

(109) இது காலாகாலம் அலைகள் கரையில் ஏறி வரஇது நேராநேரம் கடலில் படகு ஆடிவர 0ஜெயச்சந்திரன் & ? - வலம்புரிச்சங்கு

(110) அனுராகமே உந்தன் இளந்தேகமே அணையாத ஒளி சிந்தும் எழில் தீபமே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- கிளிப்பிள்ளை

(111) அன்புமிக்க மாப்பிள்ளைக்கு என்னைத் தந்த பெரியவர்க்கு..நன்றி சொல்லும் நேரமிது ... நான் வணங்கும் தெய்வமிது0ஜெயச்சந்திரன்&ஜானகி - எங்கல் குல தெய்வம்

(112) மாசி மாதம் முகூர்த்த நேரம் மேடை மங்களம் திருமணம் வந்த நாள் இருமணம் இந்த நாள் 0ஜெயச்சந்திரன் & ? - பெண்ணின்வாழ்க்கை

(113) அந்தரங்க நீர்க்குளத்தே .. ஊர்த்தெழுந்த தாமரைகள் .. சந்தியிலே மலராகிஅந்தியிலே மொட்டாகி சிந்தையிலே கோலமிட்டு திரும்பாமற் போயினவோ0ஜெயச்சந்திரன் & ? - சுஜாதா

(114) எந்தன் கண்ணான கண்ணாட்டி நாளை என் பொன்டாட்டிஎன் ஆசை நீ கேளடி .. பாலாக தேனாக முத்தங்கள் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - டெளரிகல்யாணம்

(115) கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - ஒரு கொடியில் இருமலர்கள்

(116) நிலவாகி வந்ததொரு பெண்ணே ... மலர்போல மேனிமுகம் கண்ணேதினம் நானே வருவேனே .. அதில் நானும் நீயும் புது மோகம் தேடிகாதல் சுகம் கூடி மகிழ்வோமே0ஜெயச்சந்திரன் & - அவள் ஒரு தனிராகம்

(117) சொல்லாமலே யார் பார்த்தது .. நெஞ்சோடு தான் பூப்பூத்ததுமழை சுடுகின்றதே .. அடி அது காதலா.. தீ குளிர்கின்றதே.. அடி இது காதலாஇந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா .. 0 ஜெயச்சந்திரன் & ? - பூவே உனக்காக

(118)நான் வரைந்த ஓவியமே 0 ஜெயச்சந்திரன் - ?

(119) கண்ணும் கண்ணும் பாத்துக்கிட்டா டிங் டிங் டிங் டிங் 0ஜெயசந்திரன் - சுந்தராடிராவல்ஸ்

(120) நீ சந்தனம் பூசிய செண்பகமே லாலாலல்லலாலா 0ஜெயச்சந்திரன் - சுந்தராடிராவல்ஸ்

(122) சாமந்திபூவுக்கும்0ஜெயச்சந்திரன் - புத்தம்புதுபூவே

(123) - சித்திரை நிலவு சேலையில் வந்தது பெண்ணே/அந்த சேலையின் புண்ணியம் நான் பெறவேண்டும் கண்ணே0ஜெயச்சந்திரன் & ? - வண்டிச்சோலை சின்னராசு

(124) ஊரெல்லாம் சாமி0ஜெயசந்திரன் & ஜானகி - தெய்வவாக்கு

(125) என் மேல் விழுந்த மழைத்துளியே 0ஜெயச்சந்திரன் & சித்ரா - மேமாதம்

(126) வானும் மண்ணும்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - வரம்

(127) இந்த பச்சக்கிளி0ஜெயச்சந்திரன் - பொன்விலங்கு

(128) ராஜ்ஜியமே0ஜெயச்சந்திரன் - பாபா

(129) பூவண்ணம் போல நெஞ்சம் 0ஜெயச்சந்திரன் & சுசிலா - அழியாத கோலங்கள்

(130) கார்த்திகையில் மாலையிட்டு0ஜெயச்சந்திரன் & ? - ?

(131) இது காலாகாலம் அலைகள் கரையில் ஆடிவரும்0ஜெயச்சந்திரன் & ஜானகி - வலம்புரிசங்கு

(132) கண்ணா வா வா வசந்த ராகம் காதல் ராகம் பாடுதே0ஜெயச்சந்திரன் & ஜானகி - மலர்கள் நனைகின்றன

(133) ஆத்தங்கரையில் ஒரு ரோஜா 0 ஜெயச்சந்திரன் & சுசிலா - ஒரேமுத்தம்

(134) ராஜாப்பொண்ணு வாடியம்மா0ஜெயச்சந்திரன் & சுசிலா - ஒரேமுத்தம்

(135) ராஜா வாடா சிங்கக்குட்டி0ஜெயச்சந்திரன் & ஜானகி - கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன

(136) புல்லைக் கூட பாடவைத்த 0ஜெயச்சந்திரன் & ? - என்புருஷன் தான் எனக்கு மட்டும்தான்

(137) கவிதை கேளுங்கள் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - புன்னகை மன்னன்

(138) ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் -வணக்கத்துக்குரிய காதலியே

(139) தேவி என் தேவி நீதானே .. அழகிய தேவி பொன்வேலி நான்தானே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - வேலி

(140) இளமையின் நினைவுகள் ஆயிரம் மலர்களில் எழுதிய ஓவியம் 0ஜெயச்சந்திரன் & சுசிலா - செல்வாக்கு

(141) நீரோடை கண்டு நீராட வந்தேன் வாராயோ என் செல்வமே 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - கருப்புசட்டைக்காரன்

(142) மாலை மாஞ்சோலை மலர்வாசனை அடி ஆகாதோ ஆண்வாசனை0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - ஒரு மனிதன் ஒரு மனைவி

(143) தெய்வம் நம்மை வாழ்த்தட்டும் கோயில் மணிகள் பாடட்டும்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - உன்னிடம் மயங்குகிறேன்

(144) காதல் மந்திரத்தில் தந்திரத்தில் கண்மயங்க0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - நேரம் வந்தாச்சு

(145) செவப்பா இருக்குது பொண்ணு சேத்துப் புடிச்சா என்ன ?0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - வேங்கையன்

(146) விளக்கு வச்சா படிச்சிடத்தான் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - மருதாணி

(147) அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி0ஜெயசந்திரன் & வாணிஜெயராம் - மனதிலே ஒரு பாட்டு

(148) உதடுகளில் உனது பெயர் ஒட்டிக் கொண்டதுஅதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - தங்கரங்கன்

(149) ஊஞ்சல் மனம் உலாவரும் நாளில் , உன்னுடனே நிலா வரும் தோளில்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - கொம்பேறிமூக்கன்

(150) மந்தாரமலரே மந்தார மலரே0ஜெயச்சந்திரன் & எல்.ஆர் .ஈஸ்வரி - ஒரு கொடியில் இரு மலர்கள்

(151) மெளனமே மெளனமே என்னுடன் பாடிவா0ஜெயச்சந்திரன் - சாந்திமுகூர்த்தம்

(152) வஞ்சிக்கொடி எண்ணப்படி0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - சாந்திமுகூர்த்தம்

(153) அதிகாலை நிலவே அலங்காரச்சிலையே புதுராகம் நீபாடிவா0ஜெயச்சந்திரன் & ஜானகி - உறுதிமொழி

(154) காவேரி கங்கைக்கு மேலே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - இதயத்தில் ஓர் இடம்

(155) வாழ்க்கையே வேஷம் இதில் பாசமென்னெ நேசமென்னா0ஜெயச்சந்திரன் - ஆறிலிருந்து அறுபது வரை

(156) சம்மதம் சொல்ல வந்தாய் , கையில் தாமரைப் பூவினைத் தந்தாய்0ஜெயச்சந்திரன் & ? - காலையும் நீயே மாலையும் நீயே

(157) கண்ணில் தெரியும் காதல் கவிதை எண்ணப்படிநீ எழுதிப் பழகு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - ருக்குமணி வண்டிவருது

(158) ஏரிக்குயிலே நீயும் பாடு ஏழை மார்பில் பூவைச்சூடு0ஜெயச்சந்திரன் - ருக்குமணி வண்டி வருது

(159) கரைசேர வழி தேடும் ஓடம் , நடுக்கடல் மீது தனியாக ஆடும்0ஜெயச்சந்திரன் - ஒரு ஊமையின் ராகம்

(160) பாட்டு ஒன்று பாடச்சொல்லி கேட்டு வந்தவன்0ஜெயச்சந்திரன் - பொம்பளமனசு

(161) நான் மணமகளே ஒரு ராத்திரிக்கு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - தம்பி தங்கக்கம்பி

(162) சங்கத் தமிழோ தங்கச்சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும்செந்தாமரையோ0 ஜெயச்சந்திரன் - விழியோர கவிதை

(163) தேகம் சிறகடிக்கும் ஓ வானம் குடைப்பிடிக்கும்0ஜெயச்சந்திரன் & சித்ரா - நானே ராஜா நானே மந்திரி

(164) ஒத்தப் பூ பூத்த மரம் காத்தடிச்சு சாஞ்ச மரம்அது தான் மகளே நான் வாங்கி வந்த வரம்0ஜெயச்சந்திரன்&வாணிஜெயராம் - திருட்டு ராஜாக்கள்

(165) ஆண்டவன் பிள்ளைகளே0ஜெயசந்திரன் & ? - ஆப்பிரிக்காவில் அப்பு

(166) அடி நகு0ஜெயச்சந்திரன் & ? - கரும்பு வில்

(167) அடி ஓங்காரி ஆங்காரி மார் 0ஜெயச்சந்திரன் - எல்லாம் உன் கைராசி

(168) தேவதை வந்தாள்0ஜெயச்சந்திரன் & ? - பொண்ணுக்கேத்த புருஷன்

(169) என் மனசை பறிகொடுத்து உன் மனசில் இடம் பிடிச்சேன்0ஜெயச்சந்திரன் & ? - உள்ளம் கவர்ந்த கள்வன்

(170) ஏழை ஜாதி0ஜெயச்சந்திரன் & ? - ஏழை ஜாதி

(171) ஹேய் மஸ்தானா0ஜெயசந்திரன் & ஜென்சி - அழகே உன்னை ஆராதிக்கிறேன்

(172) கஸ்தூரி மான்குட்டியாம் இது கண்ணீரை ஏன் சிந்துதாம்0ஜெயச்சந்திரன் & ? - ?

(173) கட்டிக் கொள்ளவா0ஜெயச்சந்திரன் & ? - வாழ்க்கை

(174) நாடிருக்கும் நிலைமையிலே0ஜெயச்சந்திரன் & ? -உள்ளம் கவர்ந்த கள்வன்

(175) நான் காதலில் ஒரு0ஜெயச்சந்திரன் & ? - மந்திரப்புன்னகை

(176) நூறாண்டு வாழும்0ஜெயச்சந்திரன் & ? -ஊரெல்லாம் உன் பாட்டு

(177) ஊரெல்லாம் சாமியாக பார்க்கும்0ஜெயச்சந்திரன் & ஜானகி - தெய்வவாக்கு

(178) வெளஞ்சிருக்கு சோளக்காடுதான்0ஜெயச்சந்திரன் & - ராஜகோபுரம்

(179) தொட்டுப்பாரு குற்றமில்லை0ஜெயச்சந்திரன் & - தழுவாத கைகள்

(180) உன் கண்ணில் நீரானேன்0ஜெயச்சந்திரன் & ? - கண்ணே கலைமானே

(181) தை மாதம் 0ஜெயச்சந்திரன் & - தம்பிக்கு ஒரு பாட்டு

(182) ஒரு கோலக்கிளி0ஜெயச்சந்திரன் & ? - பொன்விலங்கு

(183) ராஜாமகள் ரோஜா மகள்0ஜெயச்சந்திரன் - பிள்ளை நிலா

(184) ராத்திரிப் பொழுது உன்னை பாக்குற பொழுது அடி வேர்த்துக்கொட்டுது வார்த்தை முட்டுது கேக்குற பொழுது0ஜெயச்சந்திரன் & ஷைலஜா - ஒரு ஓடை நதியாகிறது

(185) கொஞ்சி கொஞ்சி 0ஜெயச்சந்திரன் & - எங்கள் அண்ணா

(186) சொல்லாயோ வாய்திறந்து0ஜெயச்சந்திரன் & - மோகமுள்

(187) உன்னைக் காண துடித்தேன்0ஜெயசந்திரன் & - நட்பு

(188) பூந்தென்றலே நீ பாடிவா பொன் மேடையில் பூச்சூடவா0ஜெயச்சந்திரன் & - மனசுக்குள் மத்தாப்பூ

(189) தேன் பாயும் வேளை செவ்வான மாலை பூந்தென்றல் தாலாட்டுப் பாடும்தெய்வங்கள் நல்வாழ்த்துக் கூறும்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - பெளர்ணமி அலைகள்

(190) வானம் இங்கே மண்ணில் வந்தது வாசல் தேடி வந்து வா வா என்றது0ஜெயசந்திரன் & வாணிஜெயராம் - நட்சத்திரம்

(191) ஆஹா இருட்டு நேரம் ஆசை வெளிச்சம் போடும்0ஜெயசந்திரன் & ? - இளையராஜாவின் ரசிகை

(192) கண்ணே கரிசல் மண்ணு பூவே தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே0ஜெயச்சந்திரன் - வைகாசி பிறந்தாச்சு

(193) இது காதலின் சங்கீதம்0ஜெயச்சந்திரன் - அவள் வருவாளா

(194) வெள்ளையாய் மனம்0ஜெயச்சந்திரன் & ? - சொக்கத்தங்கம்

(195)மழையில் நனைந்த 0ஜெயச்சந்திரன் & ? - காற்றுள்ள வரை

(196)காதல் திருடா0ஜெயச்சந்திரன் & சித்ரா - பிபாக்கெட்

(197)கண்ணில் ஏதோ மின்னலடிச்சிருச்சு0ஜெயச்சந்திரன் & ஜானகி - பூவிலங்கு

(198)அஞ்சாறு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - குரோதம்

(199)இதுக்குத் தானா0ஜெயச்சந்திரன் -உள்ளம் கவர்ந்த கள்வன்

(200) சுதந்திரத்தை0ஜெயச்சந்திரன் & ஜானகி - ரெட்டைவால்குருவி

(201 )இந்த இரவில் நான் பாடும் பாடல் 0 ஜெயச்சந்திரன் - யாரோ அழைக்கிறார்கள்

(202)கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்0ஜெயச்சந்திரன் - காற்றினிலே வரும் கீதம்

(203)ஆதிசிவன்0ஜெயச்சந்திரன் & ஜானகி - கடவுள்

(204)ஜனனி ஜனனி0ஜெயச்சந்திரன் & ஷைலஜா - விஸ்வநாதன் வேலை வேண்டும்

(205)வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா 0 ஜெயச்சந்திரன் & ஜானகி - கிழக்குச்சீமையிலே

(206)நீதானே தூறல் நான் தானே சாரல்0ஜெயச்சந்திரன் & ஷைலஜா - பிரம்மராஜாக்கள்

(207) இரவினில் பனியினில் இருவரும் விழித்திருப்போம்0
ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - நெருப்பிலே பூத்த மலர்

(208)மாளிகையானாலும் மலர்வனமானாலும் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - ஆஷா

(209)திருநாளும் வருமே சாமி 0 ஜெயச்சந்திரன் & சுசிலா -இசைக்கு ஒரு கோயில்

(210)எத்தனை அவதாரம் 0 ஜெயச்சந்திரன் - நான் நானேதான்

(211)அம்மா அடி அம்மா சுகம் சும்மா வருமா0ஜெயச்சந்திரன் & ஜானகி - ரசிகன் ஒரு ரசிகை

(212)நான் தாயுமானவன் தந்தையானவன்0ஜெயச்சந்திரன் - தாம்பத்யம் ஒரு சங்கீதம்

(213)என் மனக்கூட்டுக்குள்ளே ஒரு கிளியை வளர்த்தேனே அதன் அழகை ரசித்தேனே / நான் என்னை மறந்தேனே0ஜெயச்சந்திரன் - மனக்கணக்கு

(214)அலைமகள் மலைமகள் மூவரும் குலவிடும் ராத்திரி நவராத்த்திரி 0ஜெயச்சந்திரன் & சுசிலா - வெள்ளிரதம்

(215)பூந்தென்றல் காற்றே வா 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - மஞ்சள் நிலா

(216) உயிருள்ள ரோஜாப்பூவே உனக்காக வாழ்வேன் நானே 0 ஜெயச்சந்திரன் - நான் வளர்த்த பூவே


(217) கண்ணுக்குள்ளே புன்னகைக்கும் காதல் ஓவியம்
கற்பனையில் மின்னும் ஒரு ராஜ காவியம் 0 ஜெயச்சந்திரன் - பந்தா

(218) மணி ஓசை கேட்டது உனைக் காண மனசு ஏங்குதே
0 ஜெயச்சந்திரன் & ? - இருளும் ஒளியும்

(219)கடலம்மா கடலம்மா உப்புக் கடலம்மா/என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா
0 ஜெயச்சந்திரன் & ? - நிலாவே வா

(220)சாமந்தி பூவுக்கும் சாயங்கால காத்துக்கும்/சரியாச்சு என்று சொல்லி பாட்டுப் பாடு
0 ஜெயச்சந்திரன் - புத்தம் புதுபூவே

(221)எனக்கொரு மணிப்புறா ஜோடி ஒன்று இருந்தது 0 ஜெயச்சந்திரன் - மணிப்புறா

(222)பால் நிலாவிலே ஒரு பல்லவி /அதைப் பாடும் போதிலே ஒரு நிம்மதி 0 ஜெயச்சந்திரன் - மீசை மாதவன்

(223)காபூளிவாளா நாடோடி காடாறு மாசம் சம்சாரி 0 ஜெயச்சந்திரன் - மீசை மாதவன்

(224)எந்தன் மனம் 0 ஜெயச்சந்திரன் & பவதாரிணி - எனக்கொரு மகன் பிறப்பான்

(225)பூச்சமாய் ஒரு பூங்குருவி 0 ஜெயச்சந்திரன் - எனக்கொரு மகன் பிறப்பான்

(226) கரு வண்ன வண்டுகள் 0 - ஜெயச்சந்திரன் - தேவ ராகம்

(227) மஞ்சள் இட்ட நிலவாக 0 ஜெயச்சந்திரன் & ? - அவள் தந்த உறவு

(228) மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில 0 ஜெயச்சந்திரன் - சோலையம்மா

(229) வைகை கரைப் பூங்காற்றே வாசம் வீசும் தேன்காற்றே 0 ஜெயச்சந்திரன் - மாங்கல்யம் தந்துனானே

(230) பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு 0 ஜெயச்சந்திரன் & வானி ஜெயராம் - பார்வையின் மறுமக்கம்

(231) தாலாட்டுவேண் கண்மணி பொண்மணி 0 ஜெயச்சந்திரன் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்

(232) பூ பூத்த செடியக் காணோம் விதை போட்ட நானோ பாவம் 0 ஜெயச்சந்திரன் - பூ பூவா பூத்திருக்கு

(233) ஓ மை டியர் ஐ லவ் யூ - 0 ஜெயச்சந்திரன் - வெளிச்சம்

(234) பூவெல்லாம் 0 ஜெயச்சந்திரன் - என் தங்கச்சி படிச்சவ

(235) மாமான்னு சொல்ல ஒரு ஆளு இப்ப வரப்போற நாளு 0 ஜெயச்சந்திரன் - என் தங்கச்சி படிச்சவ

(236) ஆத்தங்கரை மேட்டோரமா ஆடிப் பல நாளச்சம்மா 0 ஜெயச்சந்திரன் & ஜானகி

(237) தீபங்களே நீங்கள் கண் மூடினால் தெய்வம் வாடாதோ 0 ஜெயச்சந்திரன்

(238) எங்கும் இன்பம் கானுதே உலகம் எஙும் இன்பம் காணுதே 0 ஜெயச்சந்திரன் & சித்ரா

(239) என்னாவது இந்த வழக்கு 0 ஜெயச்சந்திரன் - பச்சைக் கொடி

(240) இன்று மோகம் தொடங்கி வரும் எதற்காக 0 ஜெயச்சந்திரன் & சித்ரா

(241) அந்தி நேர தென்றல் காற்று 0 ஜெயச்சந்திரன் - இணைந்த கைகள்
(242) பதினெட்டு வயது பருவத்தின் நிலவு 0 ஜெயச்சந்திரன் & சித்ரா

(243) செம்பருத்திப் பூவிது பூவிது /வேலியோரம் எட்டி எட்டி யாரைப் பார்க்குதோ 0 ஜெயச்சந்திரன் & சித்ரா

(244) உள்ளம் உள்ளம் /இன்பத்தில் துள்ளும் துள்ளும் 0 ஜெயச்சந்திரன் & சித்ரா - உள்ளம் என்னும் நதியினிலே


(245) ஏண்டியம்மா பக்கம் பக்கம் வாயேன் / வண்ணப் பூ இதழைத் தாயேன் 0 ஜெயச்சந்திரன்

(246) மோகம் வந்து முத்தம் கேட்கும் ராத்திரி/ அது எந்த ராத்திரி/நாணம் விடை பெற வேண்டும் 0 ஜெயச்சந்திரன் & வானி ஜெயராம்

(247) மொட்டு விட்ட வாசனை மல்லி / வாங்கி வந்தேன் ஆசையில் அள்ளி 0 ஜெயச்சந்திரன் & ஜானகி - கருடா சொந்க்கியமா ?

(248) பரிசம் போட பங்குனி மாசம் 0 ஜெயச்சந்திரன் & ஜானகி

(249) பார்த்தாலும் ஆசை இது தீராது / படுத்தாலும் தோங்க கோட தோணாது 0 ஜெயச்சந்திரன் & ?

(250) பெத்தாலும் பெத்தேனடா ஒரு போக்கிரி பையலத் தான் - 0 ஜெயச்சந்திரன்

(251) சுகமான எதிர் காலம் நல்ல சேதி நமக்கு கூறும் 0 ஜெயச்சந்திரன் & ?

(252) வீடு தேடி வந்தது 0 ஜெயச்சந்திரன் & ?

(253) உயிர் எழுதும் ஒரு கவிதை / நீதான் தேவியே 0 ஜெயச்சந்திரன் & ? - ஆசைக் கிளியே கோபமா

(254) நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டுச் சென்றது 0 ஜெயச்சந்திரன் - ரிஷிமூலம்

(255) கல்யான கனவு 0 ஜெயச்சந்திரன் & ? - சுதேசி

(256) ஒரு ஓசையின்றி மவுனமாக உறங்குபவள் மனது 0 ஜெயச்சந்திரன் & ? - பரிச்சைக்கு நேரமாச்சு

(257) கோலி கோலி 0 ஜெயச்சந்திரன் & ? - செம ரகளை

(258) வெத்தலக் காடு வெறிச்சோடி போச்சு 0 ஜெயச்சந்திரன் - காவடிச் சிந்து

(259) அலைமகள் கலைமகள் மலைமகள் மூவரும் குலவிடும் ராத்திரி நவராத்திரி - 0 ஜெயச்சந்திரன் & ? - வெள்ளி ரதம்

(260) மங்கள மேடை அதில் மல்லிகை வாடை - 0 ஜெயச்சந்திரன் & ? மருமகளே வாழ்க

(261) அம்மன் கோவில் எல்லாமே எந்தன் அம்மா உன்ந்தன் கோவிலம்ம 0 ஜெயச்சந்திரன் - ராஜாவின் பார்வையிலே

(262) காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே 0 ஜெயச்சந்திரன் - வானத்தைப் போல

Monday, September 19, 2005

மெளனியும் மண்ணாங்கட்டியும்-பாகம்(2)

கி.அ. சச்சிதானந்தம் அவர்கள் தொகுத்து பீகாக் பதிப்பகம் வெளியிட்ட " மெளனியின் கதைகள் "என்ற புத்தகம் என்னிடம் இருக்கிறது . இதில் 24 கதைகளும் பின்னிணைப்புகளாகமெளனியின் பேட்டி , மெளனியின் வாழ்க்கைக் குறிப்புகள் , க.நா.சு விமர்சனக்கட்டுரைமற்றும் மெளனியின் கையெழுத்துப் பிரதிகள் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.இந்தப் புத்தகத்தில்,கதைகள் அனைத்தும் காலவரிசையில் இடம்பெறாமல் தரவரிசையில் இடம்பெற்றிருக்கிறது என நினைக்கிறேன் . மெளனி முதலில் எழுதிய "ஏன்" என்ற கதை (பிப்ரவரி - மணிக்கொடி -1936 ), ஏனோ இந்தப் புத்தகத்தில் கடைசியாக இடம்பெற்றிருக்கிறது.


மெளனி எழுதிய 24 கதைகள் - வெளியான இதழ் மற்றும் காலம்


1) மனக்கோட்டை - எழுத்து,1963
2) மாறாட்டம் - மணிக்கொடி,1938
3) அழியாச்சுடர் -மணிக்கொடி,1937
4) சாவில் பிறந்த சிருஷ்டி -சிவாஜி,1954
5) பிரக்ஞை வெளியில் - சரஸ்வதி,1960
6) மனக்கோலம் -தேனி,1948
7) மாறுதல் - மணிக்கொடி,1937
8) பிரபஞ்சகானம் - மணிக்கொடி,1936
9) நினைவுச்சுழல் - மணிக்கொடி,1937
10) சிகிச்சை - ஹனுமான் மலர்,1937
11) உறவு, பந்தம் , பாசம் - குருஷேத்திரம் ,1968
12) எங்கிருந்தோ வந்தான்-தினமணி வருஷமலர் 1937
13) குடை நிழல் - சிவாஜிமலர் 1959
14) இந்நேரம் , இந்நேரம் - மணிக்கொடி - 1937
15) அத்துவான வெளி - குருஷேத்திரம் - 1968
16) குடும்பத்தேர் - மணிக்கொடி - 1936
17) கொஞ்ச தூரம் - மணிக்கொடி - 1937
18) தவறு - கசடதபற 1971
19) காதல் சாலை - மணிக்கொடி - 1936
20) சுந்தரி - மணிக்கொடி - 1936
21) நினைவுச்சுவடு - தேனி -1948
22) மாபெருங்காப்பியம் - தினமணி மலர் 1937
23) மிஸ்டேக் - மணிக்கொடி - 1937
24) ஏன்? - மணிக்கொடி - 1936

0

மெளனி சிறுகதையின் திருமூலரா ?

மெளனி அரிதாகவும் , உயர்வாகவும் எழுதிவந்தமைக்காக , புதுமைப்பித்தன் " மெளனி - சிறுகதையின்திருமூலர்" என்று கூறினார் . இந்த ஒற்றை வாக்கியம் இலக்கியவாதிகளிடையே சலசலப்புகளைஉருவாக்கியது . புதுமைப்பித்தனின் வாசகர்கள் சிலர் , மெளனி அரிதாக எழுதியதற்காக**மட்டுமே** புதுமைப்பித்தன் அவ்வாறு கூறினார் மற்றபடி கதைகளின் தரத்துக்காக அல்ல என்று கூறிவந்தார்கள்.

0
என் இலக்கிய நண்பர்கள் (தி.ஜானகிராமன் , க.நா.சு , மெளனி) என்ற புத்தகத்தில் ," மெளனியை சிறுகதையின் திருமூலர் என்று புதுமைப்பித்தன் ஏதோ வேகத்தில் குறிப்பிட்டுவிட்டார்என்றே எனக்குத் தோன்றுகிறது , பிழையின்றித் தமிழ் எழுத முடியாத ஒருவரைத் திருமூலரோடு புதுமைப்பித்தன் ஒப்பிட்டிருப்பது பொருத்தமற்றது " என்று எம்.வி வெங்கட் ராம் குறிப்பிட்டிருக்கிறார். தேனி சிற்றிதழ் நடத்தி வந்த எம்.வி.வெங்கட்ராம் , காதுகள் என்ற நாவலுக்காக சாகித்ய அகாடாமிவிருது பெற்றிருக்கிறார்.

0

புதுமைப்பித்தன் தெளிவான காரணத்துடனேயே மெளனியைத் தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்றுசொல்லியுள்ளார் . அதாவது கதைகளின் எண்ணிக்கையை வைத்து , என் கதைகளும் நானும் கட்டுரையில் வாரத்துக்கு ஐந்து ஆறு கதைகலிருந்து வருஷத்துக்கு ஒன்று என்ற திருமூலர் அந்தஸ்தை எட்டியிருக்கிறேன் என்று புதுமைப்பித்தன் கூறுவதிலிருந்தே இதைத் தெளிவாக அறிய முடியும். - ( ராஜமார்த்தாண்டன் , புதியநம்பிக்கை சிற்றிதழ் , ஜூலை ,93 )

0
ஆனால் இதைப் பற்றி க.நா.சு இவ்வாறாக எழுதியிருக்கிறார்....

புதுமைப்பித்தன் எழுதியுள்ள இலக்கிய விமர்சனக்குறிப்புகளில் ஒரு இடத்தில் மெளனியைத் திருமூலர்என்று குறிப்பிடுகிறார். அது அவர் அதிகம் எழுதாமையும் அடிக்கடி எழுதாமையும் பற்றித்தான்.தரத்தைப் பற்றியல்ல என்று விவாதிக்கிற "முற்போக்குக்" கும்பல் (புதுமைப்பித்தன் என்று "முற்போக்கு"வாதியானாரோ- அது கடவுளுக்குத் தான் வெளிச்சம்) ஒரு விஷயத்தை மறந்து விடுகிறார்கள்.மெளனியின்முதல் பத்துப் பன்னிரென்து கதைகள் புதுமைப்பித்தனையும் விட அதித துரித கதியில் எழுதப்பட்டவை.அது விஷயம் புதுமைப்பித்தனுக்கும் தெரியும்.ஆகவே திருமூலர் என்று அவர் கூறியது தரத்தைப் பற்றியும்,உருவத்தைப் பற்றியும், பிற சித்தரிப்புகள் பற்றியும் தான் என்று நான் சொல்லுகிறேன். அதைப்பற்றிநான் புதுமைப்பித்தனுடன் பேசியதுண்டு - க.நா.சு

0

பிரமிள் , ஆரம்பகாலத்தில் மெளனியின் படைப்புகள் மீது நல்ல அபிப்ராயமே கொண்டிருந்தார்.ஆனால் , க.நா.சு போன்றவர்கள் மெளனியின் வருகைக்குப்பின்னால் , புதுமைப்பித்தனைக் குறைத்தும்,மெளனியைத் தூக்கி வைத்தும் எழுதத் தொடங்கினார்கள் . இதை க.நா.சு பல விமர்சனக்கட்டுரைகளில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செய்திருக்கிறார். புதுமைப்பித்தனின் தீவிர ரசிகரான பிரமிளுக்கு இந்தப் போக்கு பிடிக்கவில்லை , அதைத் தொடர்ந்து மெளனியின் படைப்புகள் தரம் தாழ்ந்தவை என்றும் புதுமைப்பித்தனே சிறந்த படைப்பாளி என்றும் ஸ்தாபிக்க முற்பட்டார்.

0

மீறல் சிற்றிதழில் , மெளனியைப் பற்றி பிரமிள் எழுதிய கட்டுரையிலிருந்து சில வரிகள்...

மெளனியின் இலக்கிய பார்வை என்ன ? அவருடன் நேரில் சந்தித்துப் பேசினால் பிரபஞ்சம் தலைகீழாகத் தெரியும் என்கிறார்களே உண்மையா ? அந்தப் பேச்சுக்களைப் பதிவு செய்திருக்கலாமே ? என்ற கேள்விகள் இன்றைய தலைமுறையினருக்கு ஏற்படுவதுண்டு. மெளனியின் படைப்புகள் நம்மிடம் உள்ளன. இவற்றில் உள்ள மெளனி செம்மையான வகையில் நிற்கிற ஒரு சிருஷ்டிகரமாகும்.அவரது பேச்சுக்களிலோ இந்தச் செம்மை இராது . ஒரு மகத்தான சிற்பத்தின் சிதறுண்ட பகுதிகள் போலத்தான் அவை தோன்றும். சிற்பக் கலை நுட்பத்தை உணர்ந்தவர்களுக்கு இந்த சிதறல்களில் உள்ள சிறுபகுதிகள் ஒரு வியப்புணர்வை தரும். பெரும்பாலோனோர்
சிற்பத்தின் படைப்புப்பகுதியை விட்டு சிதறல் பகுதியைப் பார்த்து இதிலென்ன கிடக்கிறது என்பதுண்டு. தமது நேர்ப் பேச்சுகளில் இப்படிப் பிரச்சினை இருப்பதை மெளனி உணர்ந்திருந்த ஒருவராவார். எனவே தான் அவர் பேட்டி தருவதிலோ தமது நேர்ப்பேச்சுக் கள் பதிவு பெறுவதிலோ ஆர்வம் காட்டவில்லை. பதிவு செய்வதற்கு நான் முயன்றிருக்கிறேன் . விளைவு ஏமாற்றத்தைத் தந்தமையால் அதை விட்டுவிட்டேன் . பாதிக்குப் பாதி ஒரு சிறப்பான பார்வையுடன் ஆதாரமற்ற துவேஷமும் அவரிடமிருந்து வெளிப்படுவதுண்டு.பார்க்கப்போனால் 'தத்துவம்' என்றதுமே நாம் அதனுடன் கைகோர்த்தபடி பிரசன்னம் தருகிற கருணையை மெளனியிடம் எதிர்பார்க்க
முடியாது. மெளனியின் சிருஷ்டியில் கூட கருணையின் மூச்சு இயங்குவதில்லை . தமது சிறப்பு, தமது இழப்பு,இதன் விளைவான ஒரு
ஆழ்ந்த தாபம் , இந்தத் தாபத்தின் தத்துவார்த்தச் சலனம் இவைதான் மெளனியின் சிருஷ்டிகரமாக மலர்ந்து கொண்டிருக்கின்றன.
தமது சிறப்பை ஓரிரு கதைகளில் சுயரூப வர்ணனையாக அசிங்கப்படுத்தியிருந்தாலும் , இதனையே சங்கீதபாவமாக வேறு கதைகளில் உந்தப்படுத்தியிருக்கிறார் . மற்றபடி தான் என்பதே தாபமாகி இருக்கிறது . பெர்ஸனலாகப் பார்த்தால் சிறுவயதிலேயே தாயை இழந்து
மாற்றாந்தாயினால் வளர்க்கப்பட்டதின் அந்தரங்கம், அவரது தாபத்திற்கு வித்தாகி இருக்கிறது . கருணை காட்டப்படாமையினால் அதை வெளிப்படுத்தவும் முடியாத ஒரு தத்துவார்த்தம் அவரது படைப்பில் ஊடாடுவதையும் இது நிர்ணயித்திருக்கலாம் . இது பற்றி அபிப்ராய பேதத்திற்கு இடமுண்டு

0

ஒரு குணரூப வடிவில் அமைந்த (Abstract) படைப்புகளைத் தந்த அவரால்(மெளனி) புதுக்கவிதையின் இதே அம்சங்களையோ நவீன ஓவியங்களையோ உணர முடிந்ததில்லை. பார்க்கப் போனால் குணரூபத்தின்அம்சங்களையே முழுவதும் சார்ந்து எழுதாமல் 'கதை' என்ற காமிரா, மைக்சிஸ்டம் சார்ந்த வடிவில்எழுத முற்பட்டமையால் குணரூபமேயான அவரது சிருஷ்டிகரம் பரிபூரணம் பெறாமலே போய்விட்டதுஎன வேண்டும். சாவில் பிறந்த சிருஷ்டியை இவ்விஷயத்தில் தனிமைப்படுத்தி ஒரு பூரணமான உரைநடைப் படைப்பாகக்காட்டலாம் என்றாலும், கெளரி மீது சுப்பய்யர் எரிச்சல் கொண்டு , அவளது பிறந்தகத்திலிருந்துஉடனே ஊருக்குக் கிளம்பவைக்க அவளை "தனியே கூப்பிட்டு ஏதோ அவள் மனது நோகியதாப் பேசி"தாகஎழுதுகிறார் மெளனி. காமிரா , மைக்சிஸ்டம் இந்த "ஏதோ"வுக்கு ஏன் ? எதுவாக இருந்தாலும்அதைப்பதிவு செய்வது அல்லவா இந்த சிஸ்டம் ? இத்தகைய 'ஏதோ' எதையும் புதுமைப்பித்தனிடம்காணமுடியாது" - பிரமிள் , மீறல் சிற்றிதழ்

0


இதே போல நினைவுச் சுவடு கதையில் ஏதோ என்று வரும்படியாக மெளனி எழுதியிருக்கிறார்.

சேகர் எப்போது வந்தாய் - என்ன விசேஷம் - ஊரில எல்லோரும் செளக்கியமா - என்ன செய்கிறாய் .."என்று என்னவெல்லாமோ கேட்டு ஒரு பதிலில் அவனைப் பற்றிய இருபது வருஷ சமாசாரத்தையும் அறிய முயன்றுகொண்டு இருந்தேன். அவனும் எனக்கு ஏதோ பதிலளித்துக் கொண்டிருந்தான். - நினைவுச்சுவடு

0

ஏன் ? - கதைச் சுருக்கம்

" ஏன் ? " என்ற கதையின் சாரத்தை தந்தி பாஷையில் சொன்னால் " திடீர்க் காதல் , காணாமல் போய்த் திரும்பவந்த பின் சாதல்"

சுசிலா , இவள் நான் கதாநாயகி , எதிர்த்தவீட்டில் கதாநாயகன் மாதவன் குடியிருக்கிறார்.சுசிலா எட்டாவது வகுப்பு படிக்கும் அதே பள்ளியில் மாதவன் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.இருவரும் ஒருவரை அறிந்திருந்தாலும் இதற்கு முன்னால் ஒரு வார்த்தை கூட பேசிக்கொண்டது கிடையாது.ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிந்து சுசிலா வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறாள்.அவள் பின்னாலே சற்றுத் தள்ளி மாதவன் நடந்து வருகிறான். " சுசீலா ,நானும் வீட்டிற்குத்தானே போகிறேன்சேர்ந்து போகலாமே ? " என்று திடீரென கேட்டான் மாதவன். சுசிலா திடுக்கிட்டுப் பின்புறம் திரும்பிப் பார்த்தாள்.அவள் புருவங்கள் சற்று உயர்ந்து , கண்களும் சற்றுப் பெரிதாகி , " ஏன் எதற்கு ? " என்று வியப்போடு கேட்டதுபோல தோன்றின . மாதவன் தன் மனக்கட்டுப்பாட்டை இழந்தவன் போன்று " சுசீ நான் உன்னை மறக்க மாட்டேன்,நீயும் என்னை மறக்காமல் இருக்கிறாயா ? " என்று பொருத்தமில்லாமல் கேட்டான். (இது தான் திடீர்காதல் , அதாவது லா.ச.ராவின் "த்வனி" ல சொன்னால் " உன்னை நான் அறியுமுன்னர் என் உள்பிரக்ஞையிடம் நீ பீடம் கொண்டுவிட்டாய்" என்று மாதவன் சுசிலாவிடம் சொல்லாமல் சொல்கிறான்.) இருவரும் அடுத்துப் பேசிக்கொள்ளாமல் வீட்டிற்குச் சென்றுவிட்டார்கள் . புருவங்களை உயர்த்தி , கண்களைச்சிறிது பெரிதாக்கி "ஏன்?" என்று சுசிலா கேட்டது மட்டும் மாதவன் மனதிற்குள் அழுத்தமாய் பதிந்துவிட்டது .சில நாட்களில் சுசிலாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துவிடுகிறது . மேற்படிப்புக்காக மாதவன்அசலூருக்குச் சென்று விட்டான் ,இரண்டு வருடம் கழித்து விடுமுறையில் ஊருக்கு வருகிறான்.ஒரு நாள் மதியம் மாதவன் தன் வீட்டின் மாடியிலிருந்து எதிர்த்தவீட்டுத் திண்ணையைப் பார்த்தான்சுசிலா தன் அழும் குழந்தைக்கு தெருவில் போகும் வண்டியை விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள்.அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் மாதவன். அழுத்தமாய் மூளையில் பதிந்திருந்த "ஏன்?" என்ற கேள்விமேலே கிளர்ந்தெழுந்து மூளையை இழந்தவன் போலாகி நாளடைவில் பித்துப்பிடித்து செத்துப் போகிறான் மாதவன்.

0
மாதவனின் பிரேதத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள் , திண்ணையிலிருந்தபடியே கவனித்துக் கொண்டிருந்தசுசிலாவின் கண்களிலிருந்து விழுந்த இரண்டு சொட்டுக் கண்ணீர் "ஏன்" என்ற கேள்விக்கு அகப்படாமலேதான் கீழே சொட்டின.

இந்தக் கதையின் மூலம் " எல்லாம் விதிப்படி தான் நடக்கும் ? "ஏன்" னு காரணம்லாம் சொல்லமுடியாது " என்று மெளனி சொல்ல வருகிறார் என்று மாதிரி எனக்குத் தோன்றுகிறது

0

சாவில் பிறந்த சிருஷ்டி - கதைச்சுருக்கம்

இந்தக் கதையின் நாயகன் சுப்பய்யர் , ஐம்பது வயது மதிக்கத்தக்கவர், 10 வருடத்திற்கு முன்னால்மனைவியை இழந்த விதவன் , குழந்தை ஏதும் இல்லாத அநாதை . இரண்டாந்தாரமாக கெளரி என்ற19 வயது பெண்ணை மணந்து கொள்கிறார்.முப்பது வருட வயது இடைவெளி அவர்களுக்கிடையே ஒருசுவரை எழும்பியிருக்கிறது.


0

கெளரி தன் தங்கையின் திருமணம் முடிந்த மறுநாளில் திண்ணையில் அமர்ந்த படி தன்உறவுக்காரர்களிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறாள் . அதைக் காணும் சுப்பய்யர் ," நம்மிடம்மட்டும் ஏன் இவள் இவ்வளவு கலகலப்பாக இல்லை ? " என்று மனதுக்குள் புழுங்குகிறார்,தனியேகூப்பிட்டு ஏதோ அவள் மனது நோகப் பேசி, உடனே வீட்டிற்குக் கிளம்புமாறு அவசரப்படுத்துகிறார் .

0

சுப்பய்யரும் , கெளரியும் இரயில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள் , "தான் இழுத்தஇழுப்புக்கெல்லாம் கெளரியும் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ ? " என்ற குற்றஉணர்வு சுப்பய்யருக்கு , இரயில் ஒரு சந்திப்பில் நிற்கிறது , ஓர் இளைஞர் அவர்களுக்கு எதிர்இருக்கையில் வந்தமர்கிறான் , அந்த இளைஞனிடம் , சுப்பய்யர் விவஸ்தையில்லாமல் ஏதேதோபேசிக்கொண்டே வருகிறார் . ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் கெளரியை ," சுப்பய்யரின் மகள்"என்று தவறாகப் புரிந்து கொள்கிறார். அதற்கு சுப்பய்யர் கோபப்படாமல் " பெண்ணில்லை ஸார்..பெண்ணில்லை.. அவள் நம்ப ஸம்சாரம்" என்கிறார்.

0

ஏதேதோ உளறிக்கொண்டிருந்த சுப்பய்யர் , அந்த இளைஞனிடம் படைத்தல் , காத்தல் ,அழித்தல் வேலைகளைச் செய்யும் திருமூர்த்திகளான சிவன்,பிரம்மன் ,விஷ்ணு ஆகியோருடைய புராணத்தைஎ டுத்து விடுகிறார் ( இந்தப் புராணக்கதை தான் கதையின் மையப்புள்ளி )

சுப்பய்யர் , இளைஞனிடம் சொல்லும் கதை ...............

" இந்த திருமூர்த்திகள் கிளம்பி ஊருக்கு வந்து ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொண்டு வேலைக்கு ஆரம்பித்தார்கள்.ரொம்ப நாள் செய்தார்கள் ஒற்றுமையாக .. கிரேதாயுகம் ... திரேதாயுகம்...துவாபரயுகம்..முழுசா மூன்று யுகங்கள் ஐயா.. ஒரு யுகம் பாக்கி, இந்த கலியுகம் தன்.வேலை கலைந்து சாப்பிடத் தூங்க.கலி பிறந்ததே பாருங்க சார்,நம்மைப் பிடித்து ஆட்டுகிற கலி, அதைத் தான் சொல்லுகிறேன்.அது தான்பாக்கி.அப்போது பிரும்மாவிற்கு கொஞ்சம் தூக்கம் கண்ணை அமட்டியது. காப்பி கீப்பி , பொடி கிடிஎன்று என்னவெல்லாமோ போட்டுப்பார்த்தான் போலிருக்கிறது ... ஆமாம் பிரும்மாவிற்கு தூக்கம்வந்துவிட்டது.விஷ்ணுவைக் கேட்டான். "கொஞ்சம் வேலையை நிப்பாட்டு . ஒரு சின்ன தூக்கம்போட்டுவிட்டு ஓடிவந்து விடுகிறேன் " என்றான். சரிதான் நடுவிலும் கொஞ்சம் சாப்பிடலாம் என்றுஅந்தச் சாப்பாட்டுராமன் சரி என்றான்... சிவனைப் போய் கேட்டாலோ, அது ஒரு பைத்தியம்.'முடியவே முடியாது . நீ கேட்கிறதினாலே நிச்சயமாக முடியாது.இப்போது தான் எனக்குக் குஷிகண்டிருக்கிறது' என்று சொல்லிவிட்டான்.என்ன கெஞ்சியும் மிஞ்சியும் அவனிடம் பலிக்கவில்லை.கோபம்வருகிறது ஆனால் யார் யாரை என்ன செய்யமுடியும்.ஸார் .. இந்தக் காலத்திலே எல்லோரும்ஈசுவரர்கள் இல்லையா ? எப்படியாவது துலைந்து போகிறது. அவா அவா தலைஎழுத்துப்படி நடக்கும்.நடக்கப்போவது தான் நடந்தது, ஆகப் போகிறது தலை எழுத்தாக , எனநினைத்துக் கொண்டு பிரும்மா கண் அசந்து தூங்கி விட்டான் ...சிவன் அழித்துக் கொண்டே விடாது வேலையை செய்துகொண்டிருந்தான். பிரும்மா படைத்ததை எல்லாம்குஷியில் ஒரே நொடியில் அழித்து முடித்துவிட்டான்.பிரும்மா தூங்கிக் கொண்டு இருந்தான்.படைத்ததுஆன பிறகும் பிரும்மா படைக்காததையும் சேர்த்து அழித்துக்கொண்டிருந்தான் இவன்.சாமிகளோன்னோ..எல்லாம் செய்யமுடியும் அவர்களால்.தூங்கிவிட்டு பிரம்மா தன் வேலைக்கு ஆரம்பித்தார்.அது தான்உன்னை, என்னை , இந்தப் பொம்பிள்ளை, நாய்,நரி ... எல்லாவற்றையும் படைக்கிற பிரும்மாசிருஷ்டி கொள்வதற்கு முன்னால் தான் அவைகள் சிவனால் அழிக்கப் பட்டுவிட்டாச்சே.இப்படிப் படக்கிறதிலேஏதாவது பலன் உண்டா ஸார் சொல்லுங்கோ .. என்ன பிறவிகள் நாம் எல்லாம் இந்தக் கலியில் துளுக்கிறதரிதலைகள் தான். அந்தத் திருமூர்த்திகளின் போட்டி நம்மை எல்லாம் உயிர் இல்லாமல் தவிக்கவிட்டுக் கொண்டிருக்கு. எல்லாம் தரிதலையாட்டம் தான் ஸார் இந்தக் காலத்திலே.... வேறு என்னசொல்ல இருக்கிறது ஸார். "

0

சுப்பய்யர் இறங்கவேண்டிய இடம்வந்துவிட்டது . அந்த இளைஞனின் பெயரைக் கேட்கிறார். அவன் சுப்புஎன்கிறார் அடடே என் பெயரும் அது தான் சின்ன வயதில் நானும் உங்களைப் போலத்தான் இருந்திருப்பேன்போல.. எதற்கும் ஊருக்குப் போனது ஒரு போட்டோ எடுத்து வைச்சுக்கோங்க ..' என்றுசொல்லிக்கொண்டே வண்டி நிற்குமுன் எழுந்தவர் கொஞ்சம் தள்ளாடிச் சாய்கிறார்.பக்கத்தில் இருந்த கெளரியின் அணைப்பில் அகப்பட்டு கீழே விழாது தப்புகிறார்.

0

இந்தக் கதையில் சுப்பய்யர் தன்னை நடமாடும் பிணமாகவே கருதுகிறார்.


0

நாவலாசிரியர் ·பிரான்ஸ் காப்வைப் பற்றிச் சிலவரிகள் ...

பிரான்ஸ் காப்கா திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார் ," இலக்கியமில்லாத மற்ற அனைத்தையும் எனக்குப் பிடிக்கவில்லை , குடும்ப வாழ்வுக்கான எந்தத்தகுதியும் எனக்கில்லை , தனியாக இருந்தால் எப்போதாவது நான் என் உத்தியோகத்தைத் தூக்கிஎறியமுடியும் ,ஆனால் திருமணமான பின்பு அது எப்போதும் முடியாது , என் வாழ்வின் படுகொலையை நானே தாங்கிக் கொள்கிறேன் , மாலை நேரத்தின் விசித்திர கணங்களில் நான் என்னையேபிளந்து பார்க்கமுடிகிறது.என்னுள் இருப்பதை ஒரு பெரிய அலறலுடன் கொண்டு வரும் முனைப்பில் எனக்குவேறு வேலையே இருப்பதில்லை. ஆனாலும் கடைசியில் எங்கோ ஒரு இசைவு ஏற்பட்டு அந்தஅலறல் ஒடுக்கப்பட்டுவிடுகிறது . அதை அப்படியே வெளிவர விட்டிருப்பேனாயின் அது மேலும் என்னைவிரிவுபடுத்தி நிறைத்திருக்கக்கூடும் எதுவும் இனி என்னைக் காப்பாற்றப் போவதில்லை ,அலைகளால் இழுத்துவரப் பட்ட சடலத்தின் நிலை என்னுடையது , நீந்துகிற ஒருவன் மீது இது மோதினாலும் அவனால் அதை கடலை விட்டு வெளியே இழுக்கமுடியவில்லை.மாறாக அது அவனை இழுத்துச்சென்றுவிடுகிறது" - இவ்வாறாக கா·ப்கா தான் உயிருடன் இருந்த பொழுதே தன்னை ஒரு பிணமாகக் கருதினார். - ( நன்றி : செந்தூரம் ஜெகதீஷ்)

திண்ணைக் கட்டுரைகள்


மௌனியின் சிறுகதைகள் - மரணமும் மகத்துவமும் - பாவண்ணன்
http://www.thinnai.com/arts/ar1202011.html

சாவில் பிறந்த சிருஷ்டி கதையைப் பற்றி - பாவண்ணன்
http://www.thinnai.com/arts/ar0310024.html

மௌனியின் படைப்புகளில் இலக்கிய இடம் - ஜெயமோகன்
http://www.thinnai.com/arts/ar0710036.html

மௌனியின் படைப்புலகம் - ஒரு கலந்துரையாடல் - அரவிந்தன்
http://www.thinnai.com/arts/ar0910012.html

செம்மங்குடி - மௌனி
http://www.thinnai.com/st121702.html

சுந்தரி - மௌனி
http://www.thinnai.com/st111901.html

உறவு, பந்தம், பாசம் - மௌனி
http://www.thinnai.com/st0122012.html


முற்றிற்று ..

என்றும் அன்பகலா
மண்ணாங்கட்டி

Wednesday, September 07, 2005

மெளனியும் மண்ணாங்கட்டியும் - பாகம்(1)வாழ்க்கைக் குறிப்பு


மெளனியின் இயற்பெயர் மணி, தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள செம்மங்குடி என்ற கிராமத்தில் 27/07/1907 அன்று பிறந்தார் . கும்பகோணத்திலும் திருச்சியிலும் படித்தார் . இசையிலும் தத்துவத்திலும் அதிக ஈடுபாடு காட்டினார் . இளங்கணிதம் படித்திருந்த மெளனி வேலைக்கு எங்கும் செல்லவில்லை. சில காலம் கழித்து சிதம்பரத்திற்குக் குடிபெயர்ந்தார் ,
மெளனி , 06/06/1985 அன்று சிதம்பரத்தில் காலமானார்.

0

மெளனி இலக்கியத் துறைக்கு வந்தது அவரே எதிர்பாராத ஒரு விபத்து . கும்பகோணத்தில் , 1933 ஆம் ஆண்டு ஒரு சென்னை நண்பர் மூலமாக பி.எஸ்.ராமையாவை சந்திக்கும் வாய்ப்பு மெளனிக்கு ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டு ஸ்நேகிதம் வளர்த்துக் கொண்டார்கள் . பி.எஸ்.ராமையா மெளனியை மணிக்கொடி இதழுக்காக சிறுகதைகள் எழுதச் சொல்லி ஊக்குவித்தார் . மெளனி என்ற புனைபெயரைச்
சூட்டியவரும் பி.எஸ்.ராமையா தான். மெளனியின் முதல் கதையான
" ஏன் ? " என்ற கதை மணிக்கொடி இதழில்( பிப்ரவரி - 1936) பிரசுரமானது.

0

மெளனியின் கதைகளை ஒற்றைப் பரிமாணத்துடன் அணுகினால் ஏமாற்றமே மிஞ்சும் . அவருடைய கதைகள் யாவும் உளவியல், தத்துவம் போன்ற பல்வேறான சாரங்களை உள்ளடக்கியது . மெளனி மொத்தம் இரண்டு டஜன் கதைகள் ( 24 கதைகள் ) மட்டுமே எழுதியிருக்கிறார் . தமிழ் வாக்கிய அமைப்புகள் மெளனிக்கு எளிதாக வசப்படவில்லை . தமிழ்மொழி தன்
சிந்தனைக்குப்போதுமானதாக இல்லை என்று கூறியிருக்கும் மெளனி,
" என்னால் தமிழில் தோன்றுவதை எல்லாம் சொல்லமுடியவில்லை, சமஸ்கிருதத்தினால் கொஞ்ச நாள் தள்ளியது , இப்பொழுது ஆங்கிலத்தைக் கொண்டு ஓடுகிறது " என்று குறிப்பிட்டிருக்கிறார் . மெளனியின் எழுத்துக்கள் " அவலட்சணம், கட்டுக்கடங்காதது, ஓட்டமின்மை திருத்தமில்லாதது " என்று பலவாறான விமர்சனத்தை எதிர்கொண்டிருந்தாலும் அவருடைய எழுத்துக்கள் எல்லாம் கூட்டணி சேர்ந்து ஒரு புதிய மொழியை சிருஷ்டித்திருக்கிறது என்றே கூறலாம் .

0

மெளனியின் பெரும்பாலான கதைகள் புறவயமான உலகத்தைப் புறக்கணித்து விடுகின்றன . ஆழ்மனத்திலிருந்து வரும் சிந்தனைகளே கதையை ஒரு தொடர்வாக நகர்த்தி (Stream of Consiousness) முன்னெடுத்துச் செல்கின்றன . இவருடைய கதை மாந்தர்கள் வெளியே சிக்கொள்வதை விட மனதுக்குள் தான் அதிகம் குசுகுசுத்துக் கொள்வார்கள், உள்ளுக்குள்ளே காதலைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள் , திடீரென காதல் தோன்றி திடீரென அல்பாய்ஸில் போய்ச் சேர்ந்துவிடுகிறது . ஆனால் அதற்கான முறையான காரணம் எதுவும் கற்பிக்கப்படவில்லை.

0

" மெளனி கவியாகப் பிறந்திருக்க வேண்டியவர் , தப்பித் தவறி வசன உலகிற்கு வந்துவிட்டார். மெளனி கதை மாந்தர்களை மாஸோக்கிஸ்டுக்களாக விளக்குகிறார் , இவ்வகை உணர்வுக்கு வாசிப்பாளனும் கூட ஆட்படுகிறான் , அதனால் தான் மெளனி மொழிக்குத் தரும் பரிணாமத்தை கதைகளுக்குத் தருவதில்லை " என்று கூறிய சி.சு செல்லப்பா , எழுத்து சிற்றிதழில் " மெளனியின் மனக்கோலம்" என்ற தொடர்கட்டுரை (5 பாகங்கள்)எழுதியிருக்கிறார் . மேலை நாட்டுப் படைப்புகளின் தாக்கம்,தன்படைப்புகளின் மீது ஒருபோதும் படியாதவாறு தான் பார்த்துக் கொண்டதாக மெளனி கூறிக்கொண்டாலும் பின்னாட்களில்,
கா·ப்கா இலக்கிய ரீதியாக தன்னைப் பாதித்திருப்பதாக மெளனியே தெரிவித்திருக்கிறார்.

0

மெளனி தன் கதைகளில் "போலும்" என்ற வார்த்தையை அடிக்கடி பிரயோகிப்பது கண்கூடு . மெளனியின் கதைகள் சிலவற்றை பி.எஸ் . ராமையா மற்றும் எம்.வி வெங்கட்ராம் ஆகியோர் திருத்தியமைத்திருக்கிறார்கள் . திருந்தாத படிவம் , நிறைய இலக்கணப்பிழைகளோடும் நிறுத்தற்குறிகளே இல்லாமலும் காணப்பட்டிருக்கின்றன .

0


மனுஷயபுத்திரனின் கவிதை ஒன்று


சிவப்புப் பாவாடை
வேண்டுமென சொல்ல
அவசரத்திற்கு
அடையாளமேதும் சிக்காமல்
விரலை கத்தியாக்கி
தன் தொண்டையறுத்து
பாவனை இரத்தம் பெருக்குகிறாள்
ஊமைச் சிறுமி


0

தொடரும் ....

என்றும் அன்பகலா
மண்ணாங்கட்டி

Friday, September 02, 2005

நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள்

மலையாளக்கவிதைகளின் தொகுப்பு நூல் - மொழியாக்கம் ( ஜெயமோகன் )
அன்புள்ள நண்பர்களே

நலம் நலம் தானே ..

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வலைப் பதிய வந்திருக்கிறேன். இந்தப் பதிவில் நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் என்ற கவிதை நூலிருந்து சில கவிதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

கல்பற்றா நாராயணன் , அனிதா குட்டி , பி.பி ராமச்சந்திரன் , டி.பி.ராஜீவன் , பி.ராமன், வீரான் குட்டி மற்றும் அன்வர் அலி ஆகிய 7 மலையாளக் கவிஞர்களின் படைப்புகளை ஜெயமோகன் அவர்கள் மிகவும் அழகான தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் அனைத்தும் மே 21,22,23 /2004 நாட்களில் , ஊட்டியில் நாராயண குருகுலத்தில் நித்ய சைதன்யயதி நினைவாக நடத்தப்பட்ட தமிழ் மலையாளக் கவிதை அரங்குக்காக மொழிபெயர்க்கப்பட்டதாக புத்தகமுன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் "நெடுஞ்சாலைப் புத்தர்" என்ற கவிதை தனக்கு ஓர் ஆழமான அனுபவத்தை அளித்தாகக் குறிப்பிட்டிருக்கும் ஜெயமோகன் , அந்தக் கவிதையின் தலைப்பையே புத்தகத் தலைப்பிலும் பயன்படுத்தியிருக்கிறார்.

நெடுஞ்சாலைப் புத்தர் - கல்பற்றா நாராயணன்

நேற்று நான்
நெடுஞ்சாலையைக் குறுக்கே கடக்கும்
புத்தனைக்கண்டேன்

சாயங்காலப் பரபரப்பில்
கடக்க முடியாமல்
இப்பக்கம்
வெகுநேரமாக நின்றிருந்தேன்

ஐம்பதோ
அறுபதோ
எழுபதோ
வருடம் நீளமுள்ள வாழ்வில்
எப்படிப் பார்த்தாலும் ஒரு ஒன்றரை வருடம்
நாம் இப்படி கடக்க முடியாமல்
காத்து நிற்கிறோம்
என்று எண்ணியபடி ...

அப்போது ஒருவன்
சற்றும் தயங்காமல்
மெதுவாக நெடுஞ்சாலையை கடப்பதைக் கண்டேன்
அவனைப் பின் தொடரத் தொடங்குகையில்
ஒரு வண்டி
குரோதத்துடன் என்னை நோக்கி வந்தது

ஒரு வண்டியும்
அவனுக்காக வேகத்தைக் குறைக்கவில்லை
இயல்பான
அகன்ற
தனித்த
எப்போதும் அங்கிருக்கும் பாதையில்
அவன் நடந்து மறுபக்கம் சேர்ந்தான்.


இதே போன்றதொரு கவிதையை விருட்சம் சிற்றிதழில் (அக் 92 - மார்ச் 93) ரா.ஸ்ரீனிவாசன் என்றொரு கவிஞர் எழுதியிருக்கிறார்

விபத்து - ரா.ஸ்ரீனிவாசன்

கார்களும் பேருந்துகளும்
விரைந்தபடியிருந்த
நெடுஞ்சாலையைக் குறுக்கே
கடந்துவிடக் காத்திருந்தோம்

இப்புறம் நானும்
மறுபுறம் ஒரு நாயும்

எதிர்ப்புறமிருந்து நாய்
என்புறம் கடந்து வர
என்னவோர் அவசரம் அதற்கு !
மூடத்தனம் - அதன் பின்
ஒரு கனரக வாகனம்
வேகம் .. மிக வேகம் ...

வீற்றிருந்த ஓட்டுநருக்கில்லை
குறுக்கிட்ட
நாய் பற்றிய கவனம்

செத்தது நாயென்று
என்னுடல் துள்ளினேன் அப்பால்
நிகழ்ந்தது என்ன ?

ஓர் அற்புதம்
கடக்கப்படாத சாலையின்
எதிர்ப்புறம் சுவரோரம்
நடுங்கியும் ஒடுங்கியும்
நாய் பிழைத்து நின்றது
நான் செத்துக் கிடந்தேன் !

இந்தக் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் அனைத்துக் கவிதைகளுமே எனக்குப் பிடித்திருக்கின்றன , உங்களுக்காக மேலும் இரண்டு கவிதைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.திண்ணையும் உம்மாவும் - வீரான்குட்டி

புதுவீட்டின்
திண்ணையிடம்
உம்மாவுக்கு உள்ள பிரியம்
எனக்கு இல்லை

இரவில்
கதவுகள் மூடிய பிறகு
வெளியே
திண்ணை
குளிர்ந்து சிலிர்த்து
தனித்துக் கிடக்குமே
என்று உம்மா
அடிக்கடி திறந்து பார்ப்பாள்

காலையில்
அவசரமாக
திறந்து போகும்போது
பால் பொட்டலங்கள்
செய்தித்தாள்
இரவு பிறந்த பூனைக்குட்டிகள்
காற்று வீசியிட்ட
பழைய இலைகள்
ஆகியவற்றை மடியில் வைத்து
புன்னகைத்து அமர்ந்திருக்கும்
திண்ணை

மெல்லிய துணியால்
துடைத்து
உம்மா
திண்ணையை சுத்தப்படுத்துவாள்
மதிய வெயிலில்
துணிவிரித்து
அதில் ஒட்டிப்படுப்பாள்

உம்மா
சமையலறையில்
தனித்து
தன்னில் ஆழ்ந்து
வேலை செய்யும்போது
வாசல் கடந்து
சத்தமின்றி
உள்ளே சென்று
அவளைத் தொடும் அது

ஜின்னுகளையும்
மலக்குகளையும்
கனவு கண்டபடி
உம்மா தூங்கும்போது
இரவில்
மெல்ல வந்து அவளைத் தொட்டு
எழுப்பி
புற உலகு காணாத அவளை
படிகளில் இறக்கி
வெளியே கூட்டிக்கொண்டு
போகுமா அது ?


நட்பு என்ற கவிதையில் ஆறை ஒரு குழந்தையாக பாவித்து எழுதியிருக்கும்
விதம் ரசிக்கும் படியாக் இருக்கிறது

நட்பு - டி.பி. ராஜீவன்

ஆற்று நீர்
மல்லாந்து
பொக்கை காட்டிச் சிரித்தது

பிறகு
குப்புறப்படுத்து
மூச்சு கிடைக்காமல்
கால்கை உதறிக்கொண்டது

மணலில்
கூழாங்கல் பரப்பில்
முழந்தாளிட்டு ஊர்ந்தது

கருங்கல் பாறை விளிம்பில்
பிடித்து எழுந்து நிற்க முயன்றது

மல்லாந்து விழுந்து
தலை முட்டி அழுது
மீண்டும் தயங்கி எழுந்து
நின்று சிறுகால் வைத்து
தள்ளாடி நடந்தது

நண்டு வளைகளில் கைநுழைத்து
பரல் மீன்களை
கிச்சுகிச்சு மூட்டியது

மென்மணல் கரைகளுக்கும்
பாறைக்கூட்டங்களுக்கும்
நடுவே ஓடியது

கோயில் துறைப்படிக்கட்டுகளில் ஏறி
அரசமர மேடையை
வலம் வந்தது

என்னைக் கண்டு
அடையாளம் அறிந்து
உரக்கச் சிரித்து
கட்டிக்கொண்டது

மெல்லக் கைபிடித்து
காலடிகள் பதியாத
பாதைகளினூடாகக்
கொண்டு சென்றது

மரக்கொம்பில் அவிழ்த்து வைத்த
உள்ளாடைகளைக் கூட எடுக்காமல்
பிறந்த மேனியாய்
வீடு நோக்கி


நான் ஹைக்கூ குறித்து எழுதிய பதிவின் பின்னூட்டத்தில் சங்கர் என்றொரு நண்பர் " நான் ஏதேனும் ஹைக்கூ எழுதியிருக்கேனா ? " என்று கேட்டிருந்தார் அவருக்காக இதோ ஒரு ஹைக்கூ (பொய்க்கூ ?)

உப்பு நீரைக் குடிக்க
இவ்வளவு ஓட்டமா
அறிவு கெட்ட ஆறு !


நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் -
புத்தகம் கிடைக்குமிடம்

United Writers
130/2 , Avvai shanmugam saalai
Chennai - 86

ஒரு முக்கியமான விஷயம் .. செப்டம்பர் 7 ஆந்தேதி புதன் கிழமை எனக்கு ஹேப்பி பர்த்டே .. 27 வயசு முடிஞ்சு 28 தொடங்கப் போகுது , எல்லாரும் வாழ்த்துச் சொல்லுங்கடே/டி கீழ இருக்குற போட்டோல இருக்குறது நான் தான் :-)