அன்புள்ள நண்பர்களுக்கு
நலம் நலம்தானே.
ஏதோ ஆர்வக்கோளாறில் நானும் இந்த வலைப்பூ உலகத்தில் நுழைந்துவிட்டேன்.
நான் ஒரு முகமூடி அல்ல ! எனது இயற்பெயர் கணேஷ் குமார் , புனை பெயர் மரவண்டு.சிறிது காலம் உயிரெழுத்து , மரத்தடி போன்ற இலக்கிய மின்மடல் குழுக்களில் எழுதி வந்தேன் .
நான் இதுவரை சொல்லிக் கொள்ளும் படியாக சுயமாக எந்தப் படைப்பும் எழுதியதில்லை , நான் எழுதியதும் / எழுதப் போவதும் மற்றவர்களுடைய படைப்பைப் பற்றிய ஒரு விமர்சனப் பார்வையாகவே இருக்கும்.
நான் ரசித்த கவிதைகள் , கதைகள் , பாடல்கள் ஆகியவற்றைக் கூடுமான வரையில் சில தகவல்களுடன் சேர்த்து இங்கே பகிர்ந்து கொள்வேன்.தனது வலைப்பூவின் வார்ப்புருவத்தை (Template) தாராள மனதுடன் தானமாகக் கொடுத்து உதவிய எனது உற்றுழி நண்பர் ஆசிப் சாத்தானின் நல்லாசியுடன் ( நல்லா இருடே ) எனது இலக்கிய யாத்திரையைத் துவங்குகிறேன்....வலைப்பூ உருவாக்கத்தில் உதவி செய்த கே.வி ராஜா விற்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.
பிச்சைக்கண்ணன் என்றாவது ஒருநாள் உழைத்துச் சாப்பிட ஆரம்பித்துவிடலாம்..பிறிதொரு கணங்களில் நம்பிக்கு நன்றாகச் செரித்து ...வாந்தி நின்று போகலாம்..சோடா பாட்டில் அண்ணாச்சி திருந்தி ...சமர்த்துப் பையனாக மாறலாம்..அதே போல் என்றாவது ஒரு நாள் இந்த விளங்காவெட்டிக்குக் கால்கள் நோகும்பொழுது யாத்திரை நின்று போகலாம் .....அதுவரை எனது யாத்திரை தொடரும்..........
மீண்டும் சந்திப்போம் ....
என்றும் அன்பகலா
மரவண்டு
Tuesday, April 26, 2005
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ஏற்கனவே கருத்துச் சொன்ன கந்தசாமி ஆசிப் , கோ.கணேஷ் , கந்தாயி உஷா, சங்கீதா ஆகியோருக்கு
என் மனமார்ந்த நன்றிகள்
சிறிய தொழில்நுட்பப் பிரச்சினையால் உங்கள் கருத்துக்கள் காணாமல் போய்விட்டன மன்னிக்கவும்
என்றும் அன்பகலா
மரவண்டு
கருத்துச் சொன்னவரு: மரவண்டு
வாங்க மரவண்டே!
வணக்கம். எப்படி இருக்கீங்க?
வாங்க வாங்கன்னு உங்களை இந்த 'ப்ளாக்' உலகத்துலே வரவேற்கின்றோம்.
என்றும் அன்புடன்,
துளசி.
கருத்துச் சொன்னவரு:
பெண்களூரில் இருந்து வலைபதிய வந்திருக்கும் எங்கள் உடன்பிறவா அன்பு சகோதரர் மரவண்டு அவர்களை ஆரத்தழுவி வரவேற்கிறேன்.
என்றும் வம்பகலா,
மூர்த்தி.
கருத்துச் சொன்னவரு: மூர்த்தி
என்ன ராஜா, வாழ்த்துகள், நீயுமா?
நல்ல செய்திகளாக எழுத என் வாழ்த்துகள்..
என்றென்றும் அன்புடன், சீமாச்சு...
கருத்துச் சொன்னவரு: சீமாச்சு
வா வா வா வண்டே வா!
தா தா தா ஹைக்கூ தா!
அன்புடன்
ஆசாத்
கருத்துச் சொன்னவரு: ஆசாத்
வாங்க வண்டு.
கருத்துச் சொன்னவரு:
வாங்க வண்டு - நிர்மலா.
கருத்துச் சொன்னவரு:
Post a Comment