Wednesday, July 13, 2005

பாப்லோ நெருடா
பாப்லோ நெருடா (Pablo Neruda ), ஜூலை 12 ,1904 இல் , சிலி நாட்டின் தெற்கு எல்லையில் அமைந்த பார்ரல் ( Parral ) என்ற நகரத்தில் பிறந்தார் . தனது இளம்வயதிலேயே தாயை இழந்தார் ,நெருடாவின் தந்தை இரயில்வே துறையில் கூலி வேலை செய்து வந்தார். தனது சிறுவயதிலிருந்தே இலக்கியத்தில் அதிக ஈடுபாடு காட்டி வந்த பாப்லோ நெருடாவின் இயற்பெயர் நாப்தாலி ரிக்கார்டோ ரியெஸ் பாஸல்டோ( Neftali Ricardo Reyes Basoalto ) ஆகும்.

தனது தந்தைக்குப் பயந்து கொண்டு , 1923 ஆம் ஆண்டு தனது முதல் கவிதைத் தொகுதியான Crepssculario- வை , நெருடா என்ற புனைபெயரில் வெளியிட்டார் .நெருடா என்பவர் செக்நாட்டில் வாழ்ந்து வந்த ஒரு கவிஞர் ஆவார் .அவரது கவிதைகளின் மேல் இருந்த காதலால் , பாப்லோ நெருடா அந்த செக் கவிஞரின் பெயரையே தனது புனைபெயராக சூட்டிக்கொண்டார்.
(Twenty Love Poems: And a Song of Despair -1924) என்ற இரண்டாவது கவிதைத் தொகுப்பின் மூலம் சிலி மக்களின் கவனிப்பைப் பெற்றார் .

0

பாப்லோ நெருடா , பர்மா , இலங்கை , ஜாவாப்டேவியா , சிங்கப்பூர் , அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் சிலி நாட்டுத் தூதுவராக பணிபுரிந்திருக்கிறார் . 1934 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் தூதராகப் பணிபுரிந்தார் . ஸ்பெயினில் கவிஞர் லார்காவின் சிநேகம் கிட்டியது . 1936 ஆம் ஆண்டு ஸ்பெயினில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் , அரசியல் காரணங்களுக்காக கவிஞர் லார்கா கொல்லப்பட்டார். நெருடாவினால் லார்காவின் மரணத்தைச் சகித்துக் கொள்ளமுடியவில்லை . பத்திரிகைகளில் கண்டனக் கவிதைகள் எழுதினார் . இதனால் நெருடாவின் தூதுவர் பதவி பறிக்கப்பட்டது . அதன் பிறகு இலக்கியப் படைப்பில் தீவிரமாக இறங்கினார் , 1971 ஆம் அண்டு பாரிசில் தூதுவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது , நெருடாவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது . நெடுநாட்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாய்க் கிடந்த இருந்த நெருடா ,23-09-1973 அன்று இறந்து போனார் .

***************************************************

ஒரு கடல்கன்னியும் சில குடிகாரர்களும்

நதியில் இருந்து
வழி தப்பிய கடல்கன்னி ஒருத்தி
திறந்த மேனியுடன்
அந்த அறையினுள் நுழைந்தாள்

உள்ளே சில குடிகாரர்கள்
போதையில் மூழ்கியிருந்தார்கள்

அந்தக்குடிகாரரகள்
அவள் மீது காறி உமிழ்ந்தார்கள்

நதியில் இருந்து
புதிதாக வந்த அவளுக்கோ
ஒன்றும் புரியவில்லை

அந்தக் குடிகாரர்கள் அவளை நோக்கி
வசை பாடத்தொடங்கினார்கள்

அவர்களுடைய வசவு வார்த்தைகள்
அவள் அங்கமெல்லாம் வழிந்தோடி
அவளது தங்க நிற மார்புகளை
மூழ்கடித்துச் சென்றன.

கண்ணீரைப் பற்றி
யாதும் அறிந்திராத அவளோ
அழவில்லை

நிர்வாணத்தை மட்டுமே
உடுத்திப் பழகிய அவளுக்கு
ஆடையின் அவசியம் தெரிந்திருக்கவில்லை

அந்தக் குடிகாரர்கள்
சிகரெட் கங்குகளினால்
அவள் மேனியில்
சூடுபோட்டார்கள்
அவள் நிலையைக் கண்டு
ஆனந்தக்கூத்தாடினார்கள்

வார்த்தைகள் அறியாத அவளோ
எதுவும் பேசவில்லை

அவளது இருகரங்களும்
வெண்மைநிறப் புஷ்பராகக்
கல்லால் செய்யப்பட்டது போல்
காட்சியளித்தன

தொலைதூரத்து அன்பின் நிறமாய்
அவள் கண்கள் மின்னின

அவள் உதடுகள்
பவள ஒளியில்
மெளனித்து நின்றன

திடீரென அவள்
அந்தக் கதவின் வழியே வெளியேறி
நதியோடு கலந்துவிட்டாள்.

நதியில் நுழைந்ததும்
அவள் பரிசுத்தமானாள்
மழையில் ஒரு வெள்ளைக்கல் போல
அவள் மின்னினாள்

பின்னால் திரும்பிக்கூடப் பாராமல்
அவள் நீந்தினாள்
வெறுமையை நோக்கி நீந்தினாள்
மரணத்தை நோக்கி நீந்தினாள்


***************************************************

Fable of the Mermaid and the Drunks - Pablo Neruda

All those men were there inside,
when she came in totally naked.
They had been drinking: they began to spit.
Newly come from the river, she knew nothing.
She was a mermaid who had lost her way.
The insults flowed down her gleaming flesh.
Obscenities drowned her golden breasts.
Not knowing tears, she did not weep tears.
Not knowing clothes, she did not have clothes.
They blackened her with burnt corks and cigarette stubs,
and rolled around laughing on the tavern floor.
She did not speak because she had no speech.
Her eyes were the colour of distant love,
her twin arms were made of white topaz.
Her lips moved, silent, in a coral light,
and suddenly she went out by that door.
Entering the river she was cleaned,
shining like a white stone in the rain,
and without looking back she swam again
swam towards emptiness, swam towards death.

******************************************************
http://www.poemhunter.com/pablo-neruda/poet-6638/

2 comments:

Anonymous said...

கவிதை நன்றாக இருக்கின்றது. நெருதாவைப் பற்றி நிறம்பவே எழுத இருக்கின்றது. மிகச்சுருக்கமாக முடித்து விட்டீர்களோ என்று படுகின்றது.

கருத்துச் சொன்னவரு: karupy

Anonymous said...

பாப்லோ நெருடாவைப் பற்றி , காலச்சுவடில் வேங்கடாசலபதி எழுதிய
கட்டுரை

கருத்துச் சொன்னவரு: மரவண்டு