Friday, September 23, 2005

ஜெயச்சந்திரன் பாடல்கள்

எனது டவுசர் காலப் பருவத்திலேயே திரைப்படப்பாடல்கள் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது.எனக்கு நினைவு தெரிந்து நான் ரசித்த முத பாட்டு இதுதான் . மெளன கீதங்கள்ல வருமே " மூக்குத்திப் பூமேலே காத்து ஒக்காந்து பேசுதம்மா" இந்தப் பாட்டு தான்.

0

நான் அஞ்சாப்பு படிக்கிற வரைக்கும் எங்க வீட்டில ரேடியோவோ , டேப் ரெக்கார்டரோ கிடையாது. நான் ஆறாப்பு படிக்கும் போது எங்கம்மாவுக்குக் கொஞ்சம் ஒடம்பு சரியில்லாமப் போச்சு , அதுக்கப்புறம் எங்கம்மா சாமிப்பாட்டு கேட்குறதுக்காக எங்க ஐயா நேஷனல் டேப் ரெக்கார்டரும் கண்ணன்சாமிப் பாட்டு கேசட்டு ரெண்டும் வாங்கிக் கொடுத்தாரு , ஐ ஜப்பான் டேப்பு ஜப்பான் டேப்புனு எந்நேரமும் சந்தோசமா அது பக்கத்துலயே கெடப்பேன்.எனக்கு ரெண்டு அண்ணன்மாரு இருக்காங்க , எங்க மூத்த அண்ணனுக்கு யேசுதாஸ் பாட்டுன்னா ரொம்பப்பிடிக்கும் , சிவகாசில இளையராஜா மியூசிக்கல்ஸ் , பாபு மியூசிக்கல்ஸ் இருந்துச்சு .. அங்க தான் ரொம்ப கேசட்டு பதிஞ்சிருக்கோம்


0

ஸ்ரீவில்லிபுத்தூர்ல ரெண்டு பேரு பார்ட்னராச் சேந்து தளபதி மியூசிக்கல்ஸ் வச்சிருந்தாங்க அதுல ஒருத்தரு தனியாப் பிரிஞ்சு போயி பாட்ஷா மியூசிக்கல்ஸ்னு வச்சிட்டாரு .. நான் சிவகாசில அய்ய நாடார் ஜானகி காலேஜுல பி.எச்.சி கெமிஸ்டிரி சேந்த சமயத்துல, சிவகாசில பஸ்ஸ்டாண்ட ஒட்டி இருக்குற பாண்டியன் காம்ப்ளக்ஸ் உள்ளக்க தளபதி மியூசிக்கல்ஸ் வந்துச்சு, எங்கய்யா கிட்ட , நான் புத்தகம் ஜெராக்ஸ் எடுக்கணும்னு பொய் சொல்லி நிறைய ரூவாவாங்கி கேசட் பதிவேன்

0

நான் பதியுற முத கேசட்டுல முத பாட்டா ஆனந்தக் கும்மி படத்துல ஜானகியும் , ஷைலஜாவும் சேந்து பாடுன " ஒருகிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா " பாட்டுத்தான் பதியணும்னு ஏற்கனவே முடிவு பண்ணி வச்சிருந்தேன்.அதே மாதிரியே முத கேசட்டுல அந்தப் பாட்டு தான் பதிஞ்சேன் , எனக்கு 1970 ல இருந்து 1985 வரைக்கும்வந்த பாட்டுகள் தான் ரொம்ப பிடிக்கும் , அந்தக் காலத்துல வந்த நல்ல நல்ல பாட்டுகள் எல்லாம் எனக்குஓரளவுக்குத் தெரியும்.

எனக்கு ஜானகி குரலும் , ஜெயச்சந்திரன் குரலும் ரொம்பப் பிடிக்கும்

ஜெயச்சந்திரன் பாடுனதுல முதல் முதலா நான் ரொம்ப ரசிச்சுக் கேட்டது.டிசம்பர் பூக்கள் படத்துல வர்ர அழகாகச் சிரித்தது அந்த நிலவு அனலாகக் கொதித்தது இந்த மனது இந்தப் பாட்டு தான் .. இந்தப் பாட்ட கேட்டவுடனே , ச்சே ஜெயச்சந்திரனோட குரலு , யேசுதாசு குரலை விட ரொம்ப நல்லா இருக்கேன்னு தோணுச்சு . இந்தப் பாட்ட கேட்ட அன்னைக்கு தான் ஜெயச்சந்திரன் பாடல்கள் மீது தீராக்காதல் ஏற்பட்டு அவர் பாடிய பாடல்களையெல்லாம் தேடித் தேடிப் பதிஞ்சேன் . விருதுநகர்ல இருந்து சிவகாசி போற வழில வலது புறமா ஒரு ரோடு பிரியும் , அது வழியா போனாசெங்குன்றாபுரம்னு ஒரு ஊர் இருக்கு , அங்க கருமாரியம்மன் மியூசிக்கல்ஸ்னு ஒன்னு இருக்கு அங்க சிலோன் ரேடியோல இல்லாத பாட்டு கூட கிடைக்கும் .

0

நான் எம்.எஸ்.சி கம்ப்யூட்டரு படிச்சப்போ கடேசி செமஸ்டரு , வெளியூருக்குப் போய் ப்ராஜக்ட் செய்யவேண்டிய கட்டாயாம் , எனக்கு அப்போலாம் மெட்ராஸ் பிடிக்காது , அதனால பெசாம திருச்சில பிராஜகட் பண்ணலாம்னுமுடிவு பண்ணிட்டேன் , திருச்சிக்குக் கிளம்பணும் , எனக்குப் பிடிச்ச கேசட்டு , எங்க வீட்டுல இருந்த நேஷனல் டேப் ரெக்கார்டரு எல்லாத்தையும் எடுத்துட்டுப் போய்ட்டேன் . திருச்சில உறையூர்ல இருக்குற ஸ்டார் மேன்ஷ்ன்ல பசங்கலாம் சேந்து ரூம் எடுத்துத் தங்குனோம். அந்த மேன்ஷன் பக்கத்துல இந்தியன் மியூசிக்கல்ஸ் இருந்திச்சு , அவரும் ஓரளவுக்கு சில அபூர்வமான பாடல்களை எல்லாம் வச்சிருந்தாரு.

0

பிராஜக்ட் முடிச்சிட்டு வீட்டுலயே ஒரு 5 மாசம் இருந்துட்டேன் , அதுக்கப்புறம் வேலை தேடி சென்னைப் பயணம் . அங்க போயி வேலை மயிறத் தேடாம எங்ககடா மியூசிக்கல்ஸ் இருக்குன்னு தேடிட்டுத் திரிஞ்சேன்திருவல்லிக்கேணி பைகிராப்ஸ் ரோட்டுல வசந்தவிகார் ஹோட்டல் ஒன்னு இருக்கு , அதுக்கு எதுத்தாப்புலமாடில காயத்ரி மியூசிக்கல்ஸ் இருக்கு , அங்க தான் எனக்கு நிறைய ஜெயச்சந்திரன் பாடல்கள் கிடைச்சதுஅப்புறம் ஸ்ரீஇவில்லிபுத்தூர்ல இருக்குற பாட்ஷா மியூசிக்கல்ஸ் அங்கயும் ரொம்பப் பாட்டு கிடைச்சது.மூணு வருஷம் மெட்ராஸ்ல வேலை , அப்புறமா பெங்களூருக்குக் கிளம்பி வந்து இங்க ரெண்டு வருஷம்குப்பை கொட்டியாச்சு.

0

ஜெயச்சந்திரன் தமிழ்ல பாடுல மொதப்பாட்டு அலைகள் படத்துல வர்ர பொனென்ன பூவென்ன கண்ணே பாட்டுன்னுகொஞ்ச பேரு சொல்றாங்க , ஆனா இன்னும் கொஞ்சப் பேரு என்ன சொல்றாங்கன்னா , மணிப்பாயல் படத்துல வர்ர " தங்கச் சிமிழ் போல் இதழோ .. அந்தத் தங்கத் தமிழ் போல் மொழியோ " பாட்டுத் தான் மொதப் பாட்டுன்னு சொல்றாங்க..
இதுல எந்தப் பாட்டு மொதப்பாட்டுன்னு எனக்குத் தெரியாது வெவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க.

0

ஜெயச்சந்திரன் தமிழ்ல சுமார் 250 பாடல்கள் முதல் 300 பாடல்கள் வரை பாடியிருப்பார்னு நினைக்கிறேன் . எனக்கு இதுவரை சுமார் 200 பாடல்கள் வரை தெரியும். இதில் சுமார் 160 பாடல்கள் வரை என்னிடம் இருக்கின்றன ,
இதில் 120 பாடல்கள் வரை Mp3 வடிவத்தில் இருக்கின்றன் . சொச்சம் இருக்குற பாட்டுகளையும் கூடிய சீக்கிரம் தேடிப் பிடிக்கணும் .எனக்குத் தெரிஞ்சு ஜெயச்சந்திரன் பாட்டு லிஸ்ட் இதான் , இந்த லிஸ்டுல இருக்குற ஒரு 40 பாட்டுகளை நான் ஒரு தடவ கூட கேட்டது கிடையாது அப்புறம் இதுல சில பாட்டுகள்ல பெண் குரல் யாருனு எனக்குத் தெரில , நான் தெரியாததுக்குலாம் குத்துமதிப்பா வாணிஜெயராம்னு போட்டிருக்கேன் , ஏன்னா வாணி ஜெயராம் கூடச் சேந்து ஜெயச்சந்திரன் நிறையா பாட்டு பாடிருக்காரு. அதான் .. எதுனா தப்பு இருந்தாச் சொல்லுங்க , இந்த லிஸ்டுல இல்லாத பாட்டு எதாச்சும் உங்களுக்குத் தெரியும்ணாலும் சொல்லுங்க , உங்களுக்கு புண்ணியமாப் போவும் ...

ஜெயச்சந்திரன் பாடல்கள்






(1) பொன்னென்ன பூவென்ன கண்ணே .. உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே/ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னை .. புவி காணாமல் போகாது பெண்ணே 0 ஜெயச்சந்திரன் - அலைகள்
(2) தங்கச் சிமிழ் போல் இதழோ .. அந்தத் தங்கத் தமிழ் போல் மொழியோ/தங்கச்சிலை போல் உடலோ .. அது தலைவனின் இன்பக் கடலோ0 ஜெயச்சந்திரன் - மணிப்பாயல்

(3) அழகே உன்னை ஆராதனை செய்கின்றேன் / மலரே மலரே ஆராதனை செய்கின்றேன்0ஜெயச்சந்திரன் - அழகே உன்னை ஆராதிக்கிறேன்

(4) கீதா .. சங்கீதா .. சங்கீதமே செளபாக்கியமே .. ஜீவஅமுதம் உன் மோகனம்0ஜெயசந்திரன் - & ஜென்சி- அன்பே சங்கீதா

(5) சங்கீதமே .. என் தெய்வீகமே .. நான் தேடும் என் காதல் ராஜாங்கமே வானோரும் காணாத பேரின்பமே ... பேரின்பமே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - காஷ்மீர் காதலி

(6) மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் .. இது முதலுறவு .. இது முதல் கனவு/இந்தத் திருநாள் .. தொடரும் ... தொடரும் 0ஜெயச்சந்திரன் & சுசிலா - முதல் இரவு

(7) பாடிவா தென்றலே ஒரு பூவைத் தாலாட்டவே பாவை கொண்ட கூந்தல் வாசம் கண்டு நீயும் பாராட்டவே 0ஜெயச்சந்திரன் - முடிவல்ல ஆரம்பம்

(8) திருவிழா திருவிழா இளமையின் தலைமையில் ஒருவிழா வேரினிலே நீ பழுத்த பலா ...விழிகளிலே தேன் வழிந்த நிலா .. இதோ ..0ஜெயச்சந்திரன் & ? - நாம் இருவர்

(9) அழகாகச் சிரித்தது அந்த நிலவு ..அதுதான் இதுவோ அனலாக கொதித்தது இந்த மனது ...இதுதான் வயதோ0ஜெயச்சந்திரன் & ஜானகி - டிசம்பர் பூக்கள்

(10) நான் மெதுவாகத் தொடுகின்ற போது.. கண் மயங்காமல் இருப்பாளோ மாதுதிருமேனி கொஞ்சம் .. தழுவாமல் நெஞ்சம்..துயிலாது ...கண்கள் துயிலாது 0 ஜெயச்சந்திரன்&வாணிஜெயராம் - உனக்கும் வாழ்வு வரும்

(11) உந்தன் காவிய மேடையிலே .. நான் கவிதைகள் எழுதுகின்றேன்/அந்தக் காமனின் பூஜையிலே நான் மோகனம் பாடுகிறேன் ..0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - முறைப்பொண்ணு

(12) உன் விழி சொல்லும் சிறுகதையொன்று ஒரு தொடராக மலர்கின்றதோ அதன் சுவையென்ன அதன் பொருளென்ன .. நாளை விடிந்தாலே தெரியும் கண்ணே 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்

(13) ஓடையின்னா நல்லோடை ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை தங்கக் கொழுந்தனுக்கு சாந்துப் பொட்டு வைக்க வேணும் ..தன்னன்னா தானே தன்னன்னா 0ஜெயச்சந்திரன் & ஜானகி - ராஜாத்தி ரோஜாக்கிளி

(14) மதுக்கடலோ .. மரகத ரதமோ.. மதன் விடும் கணையோ ..மழைமுகில் விழியோ/கனியிதழ் சுவைதனில் போதை ஊட்டும் கோதை .. மணம் கமழ் ராதை நீயே சீதை0ஜெயச்சந்திரன் & ஜானகி - குமரிப்பெண்ணின் உள்ளத்திலே

(15) செவ்வானமே பொன்மேகமே செவ்வானமே பொன்மேகமே 0ஜெயச்சந்திரன் & சசிரேகா கோரஸ் - நல்லதொரு குடும்பம்

(16) எனது விழி வழிமேலே ... கனவு பல விழி மேலே/வருவாயா .. நீ வருவாயா என நானே எதிர்பார்த்தேன் ..0ஜெயச்சந்திரன் & ஜானகி கோரஸ் - சொல்லத் துடிக்குது மனசு

(17) தாலாட்டுதே வானம் .. தல்லாடுதே மேகம்.. தாளாமல் மடிமீது தார்மீக கல்யாணம் ... இது கார்கால சங்கீதம்0ஜெயச்சந்திரன் & ஜானகி - கடல் மீன்கள்

(18) ஒரு வானவில் போலே .. என் வாழ்விலே வந்தாய்/உன் பார்வையால் எனை வென்றாய் .. என் உயிரிலே நீ கலந்தாய்..0ஜெயச்சந்திரன் & ஜானகி - காற்றிலே வரும் கீதம்

(19) சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன் என் முத்தான முத்தம்மா என் கண்ணான கண்ணம்மா ..0ஜெயச்சந்திரன் கோரஸ் - காற்றினிலே வரும் கீதம்

(20) இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமேகனவுகளின் சுயம்வரமோ கண்திறந்தால் சுகம் வருமோ 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - வைதேகி காத்திருந்தாள்

(21) மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ ..வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோஇவள் ஆவாரம் பூதானோ ..நடை தேர்தானோ .. சலங்கைகள் தரும் இசை தேன்தானோ0ஜெயச்சந்திரன் - கிழக்கே போகும் ரயில்

(22) வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் ..புதுமுகமான மலர்களே நீங்கள்நதிதனில் ஆடி .. கவி பல பாடி .. அசைந்து ஆடுங்கள் அசைந்து ஆடுங்கள்0ஜெயச்சந்திரன் - ரயில் பயணங்களில்

(23) ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு .. பொன்மானே உன்னைத் தேடுது0ஜெயச்சந்திரன் - வைதேகி காத்திருந்தாள்

(24) காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடிபூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி0ஜெயச்சந்திரன் - வைதேகி காத்திருந்தாள்

(25) ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ நம் வீட்டினில் பூத்தது ஏராளம்0ஜெயச்சந்திரன் & ஜானகி - தழுவாத கைகள்

(26) விழியே விளக்கொன்று ஏற்று ..விழுந்தேன் உன் மார்பில் நேற்று 0ஜெயச்சந்திரன் & ஜானகி - தழுவாத கைகள்

(27) அடி மாடி வீட்டு மானே உன்னை கட்டிக்கிட்டேன் நானேஐயர் வைக்கலை .. அம்மி மிதிக்கலை .. மேளமும் கொட்டலை .. தாலியும் கட்டலைகல்யாணம் தான் ஆகிப்போச்சு இன்னிக்கு முதலிரவு என்ன ஆச்சு ?0ஜெயச்சந்திரன் & வித்யா - நட்பு

(28) அஞ்சுவிரல் கெஞ்சுதடி வஞ்சி உன்னைப் பார்த்து பஞ்சணையில் தஞ்சம் கொடு நெஞ்சம் தன்னைச் சேர்த்து0ஜெயச்சந்திரன் & ஜானகி - நட்பு

(29) மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே0ஜெயச்சந்திரன் & சுசிலா - நானே ராஜா நானே மந்திரி

(29) பூவிலே மேடை நான் போடவா பூவிழி மூட நான் பாடவா0ஜெயச்சந்திரன் & சுசிலா - பகல்நிலவு

(30) காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ .. நெருங்கிவா படிக்கலாம் ரசிக்கலாம்0ஜெயச்சந்திரன் & ஜானகி - சூரக்கோட்டை சிங்கக்குட்டி

(31) தென்றலது உன்னிடத்தில் சொல்லிவைத்த சேதி என்னவோ 0ஜெயச்சந்திரன் & ஜானகி - அந்த 7 நாட்கள்

(32) கவிதை அரங்கேறும் நேரம் மலர்க்கனைகள் பரிமாறும் தேகம்இனி நாளும் கல்யாண ராகம் .. இன்ப நினைவு சங்கீதமாகும்0ஜெயச்சந்திரன் & ஜானகி - அந்த 7 நாட்கள்

(33)கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ என் காதல்வீணை0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - லாட்டரி டிக்கெட்

(34) தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த ராகம்0ஜெயச்சந்திரன் & ஜானகி - உன்னை நான் சந்திதேன்

(35) தவிக்குது தயங்குது ஒரு மனது .. தினம் தினம் தூங்காமலேஒரு சுகம் காணாமலே ... 0ஜெயச்சந்திரன் & ஷைலஜா - நதியைத் தேடிவந்த கடல்

(36) பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா/உன் தோளுக்காகத் தான் இந்த மாலை ஏங்குது ..0ஜெயச்சந்திரன் & ஜானகி - அம்மன் கோவில் கிழக்காலே

(37) காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்0ஜெயச்சந்திரன் & சுனந்தா - புதுமைப்பெண்

(38) செம்மீனே செம்மீனே உன் கிட்ட சொன்னேனே0ஜெயச்சந்திரன் & சுனந்தா - செவ்வந்தி

(39) கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்0ஜெயச்சந்திரன் - ஒரு தலை ராகம்

(40) காதல் ஒரு வழிப்பாதை பயணம்0ஜெயச்சந்திரன் -
கிளிஞ்சல்கள்

(41) கலையோ சிலையோ .. இது பொன் மான் நிலையோ... பனியோ பூங்கிளியோ .. நிலம் பார்க்க வந்த நிலவோ 0ஜெயச்சந்திரன் - பகலில் ஒரு இரவு

(42) ஆடிவெள்ளி ... தேடி உன்னை ... நான் அடைந்த நேரம் / கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம் (அந்தாதி)0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - மூன்று முடிச்சு

(43) மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை .. மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில் காதல் தேவதைகள் பாடும் பாடல்களில் பரவசம் அடைகின்ற இதயங்களே ...0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - சாவித்திரி

(44) மலரோ நிலவோ மலைமகளோ ... தேவி வடிவாக அமர்ந்தவள் யாரோ0ஜெயச்சந்திரன் - ராகபந்தங்கள்

(45) பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும் பழகிய பலன் உருவாகும்பாடிவா பாடிவா .. பூந்தென்றலே ..0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - புவனா ஒரு கேள்விக்குறி

(46) பூவே மல்லிகைப் பூவே நெஞ்சில் போதை ஏறுதடி/பொன்மேனியும் கண்ஜாடையும் கண்டு காதல் மீறுதடி0ஜெயச்சந்திரன்&ஜானகி - ?

(47) தேவி ... செந்தூரக் கோலம் .. என் சிங்கார தீபம் .. திருக்கோயில் தெய்வம்/நான் உனக்காக வாழ்வேன் .. காதல் இது காலங்களின்
லீலை0ஜெயச்சந்திரன் & ஜானகி - துர்காதேவி

(48) மெளனமல்ல மயக்கம் .. இளமை ரதங்கள் வெள்ளோட்டம் ..சலனம் பார்வையில்.. சரசம் வார்த்தையில் .. மெய்சிலிர்க்கும் வேளையில்0ஜெயச்சந்திரன் & ஜானகி -அழகு

(49) கண்ணே கரிசல் மண்ணு பூவே தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே0ஜெயச்சந்திரன் -
வைகாசி பொறந்தாச்சு

(50) கோடி இன்பங்கள்.. தேடும் உள்ளங்கள் ... ஊடல் வந்தாலே கூடும்பாவை உன் தேகம் .. போதை உண்டாகும் .. பூமஞ்சம் ஆதலால்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - அவள் ஒரு காவியம்

(51) பாவை நீ மல்லிகை.. பால் நிலா புன்னகை மான்களில் ஓர்வகை .. மங்கையே என்னிடம் நீ அன்புவை0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - தெய்வீக ராகங்கள்

(52) என்னவோ சேதி மனம் பேச எண்ணும் பேசாது/காதலின் கீதம் இங்கு
பாடவரும் பாடாது0ஜெயச்சந்திரன் & ஜானகி - தேநீர்

(53) முத்துரதமோ .. முல்லைச்சரமோ .. மூன்று கனியோ .. பிள்ளைத் தமிழோ கண்ணே நீ விளையாடு... கனிந்த மனதில் எழுந்த நினைவில் காதல் உறாவாடு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - பொன்னகரம்

(54) நீரில் ஒரு தாமரை .. தாமரையில் பூவிதழ் ... பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ (அந்தாதி)0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - நெஞ்சத்தை அள்ளித்தா

(55) காமதேணு கன்னியாக கண்ணில் வந்ததைக் கண்டேன்/இது தானே தேவலோகம் .. இனிமேல் தான் ராஜயோகம்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - பால்காரி

(56) இசைக்கவோ நம் கல்யாண ராகம்..கண்மூடி மெளனமாய் நாண மேனியில் கோலம் போடும் போது0ஜெயச்சந்திரன் & ஜானகி - மலர்களே மலருங்கள்

(57) பூமாலைகள் இரு தோள் சேருமே வெட்கம் வந்து இவள் கண்ணில் முத்தம் கொஞ்சும்..0ஜெயச்சந்திரன் & ஜானகி- ஜாதிப்பூக்கள்

(58) ஊதக் காத்து வீசயில குயிலு கூவயில வாட தான் என்ன வாட்டுது0ஜெயச்சந்திரன் & ஜானகி - கிராமத்து அத்தியாயம்

(59) பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா 0ஜெயச்சந்திரன் & சுனந்தா - என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்

(60)சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்லை0 ஜெயச்சந்திரன் -செந்தூரப் பூவே

(61) கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே..0ஜெயச்சந்திரன் & ஜானகி - கடலோரக்கவிதைகள்

(62) வெள்ளி நிலாவினிலே .. தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா ...0ஜெயச்சந்திரன் - சொன்னது நீதானா

(63) உறவுகள் தொடர்கதை .. உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் .. முடிவிலும் ஒன்று தொடரலாம் .. இனியெல்லாம் சுகமே 0 ஜெயச்சந்திரன் - அவள் அப்படித்தான்

(64) பாவைமலர் மொட்டு .. இளம்பருவமோ பருவமோ ஈரெட்டு/பாடும் வண்ணச்சிட்டு .. ஒன்று தரவா கன்னம் தொட்டு... 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - அன்புள்ள அத்தான்

(65) பாடு தென்றலே புதுமணம் வந்தது ... ஆடு தோகையே புது இசை வந்தது ..காதலென்னும் பூமழையைப் பாடிடுவாய் கவிதையினிலே நெஞ்சமே ...0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - நெல்லிக்கனி

(66) அன்பே உன் பேர் என்ன ரதியோ .. ஆனந்த நீராடும் நதியோ..கண்ணே உன் சொல் என்ன அமுதோ .. காணாத கோலங்கள் எதுவோ ?0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- இதயமலர்

(67) மீனா ...ஹலோ மீனா ...கண்கள் கடல்மீனா ... விண்ணின் ஒளிமீனா ...மண்ணின் பொன்மீனா .. மன்னன் கொடிமீனா .. புது மோகம் உன்னிடம் ...0ஜெயச்சந்திரன் - மாம்பழத்துவண்டு

(68) அலையே கடல் அலையே .. ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய்..இன்ப நினைவினில் பாடுகிறாய் என்னென்னவோ உன் ஆசைகள் 0ஜெயச்சந்திரன்&ஜானகி - திருக்கல்யாணம்

(69) என்னோடு என்னன்னவோ ரகசியம் ...உன்னோடு சொல்லவேண்டும் அவசியம்சொல்லத்தான் ஆசை துடிக்கின்றது .. நாணம் தடுக்கின்றது0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் -தூண்டில் மீன்கள்

(70) பாலாபிஷேகம் செய்யவோ உனக்குத் தேனாபிஷேகம் செய்யவோ..அலங்காரவள்ளி திருநாமம் சொல்லி மலர்கொண்டு பூஜைசெய்யவோ...0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - முத்தான
முத்தல்லவோ

(71) ஓடும் நதிகளில் ஆடும் மலர்களில் உனது முகம்/ஓங்கும் மலைகளில் தோன்றும் கனிகளில் உனது மணம்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - சரிகமபதநி

(73) தென்றல் ஒரு தாளம் சொன்னது... சிந்தும் சங்கீதம் வந்ததுசந்தங்கள் தண்ணீர் தந்தது மாலைப்பெண்ணே ...0ஜெயச்சந்திரன் - கனவுகள் கற்பனைகள்

(74) ஆயிரம் ஜென்மங்கள் ஆசைகள் ஊர்வலம் இணைவதோ பறவைகள்/இதயம் உன்னை நாடும் இதழ்கள் உன்னைத் தேடும் நல்ல நாள் அல்லவோ0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - அந்த வீட்டில் ஒரு கோயில்

(75) கடல் அலை கால்களை முத்தமிடும் புதுக்கலைசத்தமில்லாத முத்தங்களை கற்றுத் தந்தாள் இந்தக் கன்னி அலை 0ஜெயச்சந்திரன் - பொம்பளமனசு

(76) மல்லிகை பூவில் இன்று .. புன்னகை கோலம் ஒன்று .. மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா.... என்னென்று நீ சொல்லு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - பெண்ணின் வாழ்க்கை

(77) வானம் எங்கே மேகம் எங்கே ஒரு மேடை கொண்டு வா ..ஒரு வீணை கொண்டு வா .. ஒரு ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம்0ஜெயச்சந்திரன் & ஜானகி - நெஞ்சிலாடும் பூ ஒன்று

(78) அக்கா ஒரு ராஜாத்தி .. இவ அழகா சிரிச்சு நாளாச்சு/மனம் போலவே வாழ்வு .. உனை வந்து தான் சேர .. பிறந்தது காதல் இங்கே வா0ஜெயச்சந்திரன் & ஜென்சி - முகத்தில் முகம் பார்க்கலாம்

(79) ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ வடிவேலனோ தெய்வானையோ/யார் வந்து பிறப்பாரோ .. கண்ணான என் செல்வமே0ஜெயச்சந்திரன் & எல்.ஆர்.ஈஸ்வரி - மீனாக்ஷ¢குங்குமம்

(80) மேலாடை மேகத்தில் நீந்தும் .. பூமேடை நான் ஆடும் ஊஞ்சல்/நீராடும் தேகத்தில் மேனி .. தள்ளாடும் செந்தாழம் பூதானோ0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - அக்கரைக்கு வாரீங்களா

(81) ஒரு தெய்வம் தந்த பூவே0ஜெயச்சந்திரன் & ? - கன்னத்தில் முத்தமிட்டால்

(82) ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உன் பேர சொல்லும் ரோசாப்பூ0ஜெயச்சந்திரன் & ? - சூர்யவம்சம்

(83) கதை சொல்லும் கிளிகள் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - கராத்தே கமலா

(84) கண்ணன் முகம் காண காத்திருந்தாள் ஒரு மாதுமன்னன் வந்த பின்னே தன்நினைவு என்பது ஏது 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - ஆயிரம் ஜென்மங்கள்

(85) அமுத தமிழில் எழுதும் புதுமைப்புலவன் நீ0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

(86) திருமுருகன் அருகினிலே வள்ளிக்குறத்தி 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - மேயர்மீனாக்ஷ¢

(87) கொல்லையிலே தென்னை வைத்து0 ஜெயச்சந்திரன் - காதலன்

(88) ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நாளும் உன்னோடு தானே நான் வாழுவேனே/பெண்ணோடு வாழும் என் வாழ்க்கை யாவும் உன்னோடு தானே என் கண்ணின் மணியே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்

(89) சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது .. அன்பில் சேர்ந்தாடும் போது சுவை நூறானது/காதல் கொண்டாடும் மனம் தேனானது .. கல்யாணக் கோலம் தினம் கொண்டாடுது0ஜெயச்சந்திரன் & ஜானகி - தேநீர்

(90) விழியோ உறங்கவில்லை ... ஒரு கனவோ வரவுமில்லை/ கனவினிலேனும் தலைவனைக்காண கண்ணே நீ உறங்கு அவன் காட்சியை நீ வழங்கு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - நீ வாழவேண்டும்

(91) எங்கெங்கும் அவள் முகம் அங்கெல்லாம் என் மனம் ஏந்திழை அவள் உடல் தங்கம் .. அவள் இயல் இசை நாடகச் சங்கம்0ஜெயச்சந்திரன் - நெருப்பிலே பூத்த மலர்

(92) இதயவாசல் வருகவென்று பாடல் ஒன்று பாடும்/எதுகை தேடும் மோனை இன்று கவிதை உன்னை நாடும் 0ஜெயச்சந்திரன் - நெஞ்சில் ஒரு ராகம்

(93) செவ்வானமே பொன்மேகமே தூவுங்கள் மலர்கள் கோடிசொல்லுங்கள் கவிதை கோடி0ஜெயச்சந்திரன் குழுவினர்- நல்லதொரு குடும்பம்

(94) கலைமாமணியே சுவைமாங்கனியே எந்தன் சிங்காரச் செவ்வானமே அன்பே சங்கீதமே.../மணிமாளிகையே .. திருவாசகமே.. ஒளிமங்காத பொன்னாரமே.. அன்பே சங்கீதமே...0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - பணம் பெண் பாசம்

(95) நாலுவகை பூவில் .. மலர்க்கோட்டை ... அதில் ராணியாகிறாய்/நாலு புறம் வீசும் மலர்வாசம் அதில் நீயே ஆள்கிறாய்0ஜெயச்சந்திரன் & ஜானகி - ?

(96) பால் நிலவு காய்ந்ததேன் .. பார் முழுதும் ஓய்ந்ததேன்ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ .. நீ தான் உயிரே0ஜெயச்சந்திரன் - யாரோ அழைக்கிறார்கள்

(97) - ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள் கனவென்னும் முடிசூடிக் கன்னம் சிவந்தாள்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - நந்தா என் நிலா

(98) சாமத்தில் பூத்த மல்லி சந்திரனை சாட்சி வைச்சேன்/சாமியே உன்னை எண்ணி லாபத்தை வரவு வைச்சேன்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - உங்களில் ஒருத்தி

(99)சின்னப்பூவே மெல்லப் பேசு உந்தன் காதல் சொல்லிப்பாடு/வண்ணப் பூவிழி பார்த்ததும் பூவினம் நாணுது ..உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது0ஜெயச்சந்திரன் & சித்ரா- சின்னப்பூவே மெல்லப் பேசு

(100) நான் ராமனைப் போல் ஒரு அவதாரம்/அவன் போல் எனக்கு ஒரு தாரம்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - ஆசைக்கு வயசில்லை

(101) மணிமாளிகை கண்ட மகாராணியே .. மன்மதன் கோவிலில் மங்கள ஓசைகள்..மங்கையின் சொர்க்கங்கள் மாலையில் கொஞ்சுது மஞ்சள் நிலாமுகம் ஏனடி வெட்கங்கள் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- தரையில் வாழும் மீன்கள்

(102) மகாராணி .. உனைத்தேடி வரும் நேரமே .. எங்கும் குழல் நாதமே/தென்றல் தேரில் வருவான் .. அந்தக் காமன் விடுவான் .. கணை இவள் விழி0ஜெயச்சந்திரன் & ஜானகி - ஆயிரம் வாசல் இதயம்

(103) சிந்து நதி ஓரம் தென்றல் விளையாடும்..கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்0ஜெயச்சந்திரன் & சுசிலா - மலர்களில் அவள் மல்லிகை

(104) வா வா ஆடிவா வா வா ஆடிவா உன்னை அழைத்தேன் வா வா ஆடிவா.ஒரு நதியலை போல் வா வா ஆடிவா காதோரம் பூபாளம் இனிக்கும் ..0ஜெயச்சந்திரன் & - கல்லுக்குள் தேரை

(105) உனக்காக பூஜை செய்யும் பக்தனம்மா .. உறங்காமல் ஆசை வைத்த பித்தனம்மா/மனக்கோவில் தேவியே .. நீ தான் என் ஆவியே.. கட்டுக் கூந்தல் காற்றில் ஆட 0ஜெயச்சந்திரன் & ஜானகி - என் ஆசை உன்னோடுதான்

(106) தமிழில் இருந்து உலகம் முழுதும் இனிமை பிறந்தது அதைத் தழுவத் தழுவப் புதிய புதிய கவிதை பிறந்தது0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- பருவத்தின் வாசலிலே

(107) அழகி ஒருத்தி இளநீர் விக்குறா கொழும்பு வீதியிலேஅருகில் ஒருத்தன் உருகி நிக்குறான் குமரி அழகினிலே0ஜெயச்சந்திரன் & ? - பைலட் பிரேம்நாத்

(108) இருவிழிகள் பிறந்ததம்மா உலகைக் காணவே/இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரைப் போலவே 0ஜெயச்சந்திரன் & ஜானகி - சின்னமுள்ளு பெரியமுள்ளு

(109) இது காலாகாலம் அலைகள் கரையில் ஏறி வரஇது நேராநேரம் கடலில் படகு ஆடிவர 0ஜெயச்சந்திரன் & ? - வலம்புரிச்சங்கு

(110) அனுராகமே உந்தன் இளந்தேகமே அணையாத ஒளி சிந்தும் எழில் தீபமே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- கிளிப்பிள்ளை

(111) அன்புமிக்க மாப்பிள்ளைக்கு என்னைத் தந்த பெரியவர்க்கு..நன்றி சொல்லும் நேரமிது ... நான் வணங்கும் தெய்வமிது0ஜெயச்சந்திரன்&ஜானகி - எங்கல் குல தெய்வம்

(112) மாசி மாதம் முகூர்த்த நேரம் மேடை மங்களம் திருமணம் வந்த நாள் இருமணம் இந்த நாள் 0ஜெயச்சந்திரன் & ? - பெண்ணின்வாழ்க்கை

(113) அந்தரங்க நீர்க்குளத்தே .. ஊர்த்தெழுந்த தாமரைகள் .. சந்தியிலே மலராகிஅந்தியிலே மொட்டாகி சிந்தையிலே கோலமிட்டு திரும்பாமற் போயினவோ0ஜெயச்சந்திரன் & ? - சுஜாதா

(114) எந்தன் கண்ணான கண்ணாட்டி நாளை என் பொன்டாட்டிஎன் ஆசை நீ கேளடி .. பாலாக தேனாக முத்தங்கள் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - டெளரிகல்யாணம்

(115) கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - ஒரு கொடியில் இருமலர்கள்

(116) நிலவாகி வந்ததொரு பெண்ணே ... மலர்போல மேனிமுகம் கண்ணேதினம் நானே வருவேனே .. அதில் நானும் நீயும் புது மோகம் தேடிகாதல் சுகம் கூடி மகிழ்வோமே0ஜெயச்சந்திரன் & - அவள் ஒரு தனிராகம்

(117) சொல்லாமலே யார் பார்த்தது .. நெஞ்சோடு தான் பூப்பூத்ததுமழை சுடுகின்றதே .. அடி அது காதலா.. தீ குளிர்கின்றதே.. அடி இது காதலாஇந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா .. 0 ஜெயச்சந்திரன் & ? - பூவே உனக்காக

(118)நான் வரைந்த ஓவியமே 0 ஜெயச்சந்திரன் - ?

(119) கண்ணும் கண்ணும் பாத்துக்கிட்டா டிங் டிங் டிங் டிங் 0ஜெயசந்திரன் - சுந்தராடிராவல்ஸ்

(120) நீ சந்தனம் பூசிய செண்பகமே லாலாலல்லலாலா 0ஜெயச்சந்திரன் - சுந்தராடிராவல்ஸ்

(122) சாமந்திபூவுக்கும்0ஜெயச்சந்திரன் - புத்தம்புதுபூவே

(123) - சித்திரை நிலவு சேலையில் வந்தது பெண்ணே/அந்த சேலையின் புண்ணியம் நான் பெறவேண்டும் கண்ணே0ஜெயச்சந்திரன் & ? - வண்டிச்சோலை சின்னராசு

(124) ஊரெல்லாம் சாமி0ஜெயசந்திரன் & ஜானகி - தெய்வவாக்கு

(125) என் மேல் விழுந்த மழைத்துளியே 0ஜெயச்சந்திரன் & சித்ரா - மேமாதம்

(126) வானும் மண்ணும்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - வரம்

(127) இந்த பச்சக்கிளி0ஜெயச்சந்திரன் - பொன்விலங்கு

(128) ராஜ்ஜியமே0ஜெயச்சந்திரன் - பாபா

(129) பூவண்ணம் போல நெஞ்சம் 0ஜெயச்சந்திரன் & சுசிலா - அழியாத கோலங்கள்

(130) கார்த்திகையில் மாலையிட்டு0ஜெயச்சந்திரன் & ? - ?

(131) இது காலாகாலம் அலைகள் கரையில் ஆடிவரும்0ஜெயச்சந்திரன் & ஜானகி - வலம்புரிசங்கு

(132) கண்ணா வா வா வசந்த ராகம் காதல் ராகம் பாடுதே0ஜெயச்சந்திரன் & ஜானகி - மலர்கள் நனைகின்றன

(133) ஆத்தங்கரையில் ஒரு ரோஜா 0 ஜெயச்சந்திரன் & சுசிலா - ஒரேமுத்தம்

(134) ராஜாப்பொண்ணு வாடியம்மா0ஜெயச்சந்திரன் & சுசிலா - ஒரேமுத்தம்

(135) ராஜா வாடா சிங்கக்குட்டி0ஜெயச்சந்திரன் & ஜானகி - கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன

(136) புல்லைக் கூட பாடவைத்த 0ஜெயச்சந்திரன் & ? - என்புருஷன் தான் எனக்கு மட்டும்தான்

(137) கவிதை கேளுங்கள் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - புன்னகை மன்னன்

(138) ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் -வணக்கத்துக்குரிய காதலியே

(139) தேவி என் தேவி நீதானே .. அழகிய தேவி பொன்வேலி நான்தானே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - வேலி

(140) இளமையின் நினைவுகள் ஆயிரம் மலர்களில் எழுதிய ஓவியம் 0ஜெயச்சந்திரன் & சுசிலா - செல்வாக்கு

(141) நீரோடை கண்டு நீராட வந்தேன் வாராயோ என் செல்வமே 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - கருப்புசட்டைக்காரன்

(142) மாலை மாஞ்சோலை மலர்வாசனை அடி ஆகாதோ ஆண்வாசனை0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - ஒரு மனிதன் ஒரு மனைவி

(143) தெய்வம் நம்மை வாழ்த்தட்டும் கோயில் மணிகள் பாடட்டும்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - உன்னிடம் மயங்குகிறேன்

(144) காதல் மந்திரத்தில் தந்திரத்தில் கண்மயங்க0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - நேரம் வந்தாச்சு

(145) செவப்பா இருக்குது பொண்ணு சேத்துப் புடிச்சா என்ன ?0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - வேங்கையன்

(146) விளக்கு வச்சா படிச்சிடத்தான் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - மருதாணி

(147) அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி0ஜெயசந்திரன் & வாணிஜெயராம் - மனதிலே ஒரு பாட்டு

(148) உதடுகளில் உனது பெயர் ஒட்டிக் கொண்டதுஅதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - தங்கரங்கன்

(149) ஊஞ்சல் மனம் உலாவரும் நாளில் , உன்னுடனே நிலா வரும் தோளில்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - கொம்பேறிமூக்கன்

(150) மந்தாரமலரே மந்தார மலரே0ஜெயச்சந்திரன் & எல்.ஆர் .ஈஸ்வரி - ஒரு கொடியில் இரு மலர்கள்

(151) மெளனமே மெளனமே என்னுடன் பாடிவா0ஜெயச்சந்திரன் - சாந்திமுகூர்த்தம்

(152) வஞ்சிக்கொடி எண்ணப்படி0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - சாந்திமுகூர்த்தம்

(153) அதிகாலை நிலவே அலங்காரச்சிலையே புதுராகம் நீபாடிவா0ஜெயச்சந்திரன் & ஜானகி - உறுதிமொழி

(154) காவேரி கங்கைக்கு மேலே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - இதயத்தில் ஓர் இடம்

(155) வாழ்க்கையே வேஷம் இதில் பாசமென்னெ நேசமென்னா0ஜெயச்சந்திரன் - ஆறிலிருந்து அறுபது வரை

(156) சம்மதம் சொல்ல வந்தாய் , கையில் தாமரைப் பூவினைத் தந்தாய்0ஜெயச்சந்திரன் & ? - காலையும் நீயே மாலையும் நீயே

(157) கண்ணில் தெரியும் காதல் கவிதை எண்ணப்படிநீ எழுதிப் பழகு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - ருக்குமணி வண்டிவருது

(158) ஏரிக்குயிலே நீயும் பாடு ஏழை மார்பில் பூவைச்சூடு0ஜெயச்சந்திரன் - ருக்குமணி வண்டி வருது

(159) கரைசேர வழி தேடும் ஓடம் , நடுக்கடல் மீது தனியாக ஆடும்0ஜெயச்சந்திரன் - ஒரு ஊமையின் ராகம்

(160) பாட்டு ஒன்று பாடச்சொல்லி கேட்டு வந்தவன்0ஜெயச்சந்திரன் - பொம்பளமனசு

(161) நான் மணமகளே ஒரு ராத்திரிக்கு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - தம்பி தங்கக்கம்பி

(162) சங்கத் தமிழோ தங்கச்சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும்செந்தாமரையோ0 ஜெயச்சந்திரன் - விழியோர கவிதை

(163) தேகம் சிறகடிக்கும் ஓ வானம் குடைப்பிடிக்கும்0ஜெயச்சந்திரன் & சித்ரா - நானே ராஜா நானே மந்திரி

(164) ஒத்தப் பூ பூத்த மரம் காத்தடிச்சு சாஞ்ச மரம்அது தான் மகளே நான் வாங்கி வந்த வரம்0ஜெயச்சந்திரன்&வாணிஜெயராம் - திருட்டு ராஜாக்கள்

(165) ஆண்டவன் பிள்ளைகளே0ஜெயசந்திரன் & ? - ஆப்பிரிக்காவில் அப்பு

(166) அடி நகு0ஜெயச்சந்திரன் & ? - கரும்பு வில்

(167) அடி ஓங்காரி ஆங்காரி மார் 0ஜெயச்சந்திரன் - எல்லாம் உன் கைராசி

(168) தேவதை வந்தாள்0ஜெயச்சந்திரன் & ? - பொண்ணுக்கேத்த புருஷன்

(169) என் மனசை பறிகொடுத்து உன் மனசில் இடம் பிடிச்சேன்0ஜெயச்சந்திரன் & ? - உள்ளம் கவர்ந்த கள்வன்

(170) ஏழை ஜாதி0ஜெயச்சந்திரன் & ? - ஏழை ஜாதி

(171) ஹேய் மஸ்தானா0ஜெயசந்திரன் & ஜென்சி - அழகே உன்னை ஆராதிக்கிறேன்

(172) கஸ்தூரி மான்குட்டியாம் இது கண்ணீரை ஏன் சிந்துதாம்0ஜெயச்சந்திரன் & ? - ?

(173) கட்டிக் கொள்ளவா0ஜெயச்சந்திரன் & ? - வாழ்க்கை

(174) நாடிருக்கும் நிலைமையிலே0ஜெயச்சந்திரன் & ? -உள்ளம் கவர்ந்த கள்வன்

(175) நான் காதலில் ஒரு0ஜெயச்சந்திரன் & ? - மந்திரப்புன்னகை

(176) நூறாண்டு வாழும்0ஜெயச்சந்திரன் & ? -ஊரெல்லாம் உன் பாட்டு

(177) ஊரெல்லாம் சாமியாக பார்க்கும்0ஜெயச்சந்திரன் & ஜானகி - தெய்வவாக்கு

(178) வெளஞ்சிருக்கு சோளக்காடுதான்0ஜெயச்சந்திரன் & - ராஜகோபுரம்

(179) தொட்டுப்பாரு குற்றமில்லை0ஜெயச்சந்திரன் & - தழுவாத கைகள்

(180) உன் கண்ணில் நீரானேன்0ஜெயச்சந்திரன் & ? - கண்ணே கலைமானே

(181) தை மாதம் 0ஜெயச்சந்திரன் & - தம்பிக்கு ஒரு பாட்டு

(182) ஒரு கோலக்கிளி0ஜெயச்சந்திரன் & ? - பொன்விலங்கு

(183) ராஜாமகள் ரோஜா மகள்0ஜெயச்சந்திரன் - பிள்ளை நிலா

(184) ராத்திரிப் பொழுது உன்னை பாக்குற பொழுது அடி வேர்த்துக்கொட்டுது வார்த்தை முட்டுது கேக்குற பொழுது0ஜெயச்சந்திரன் & ஷைலஜா - ஒரு ஓடை நதியாகிறது

(185) கொஞ்சி கொஞ்சி 0ஜெயச்சந்திரன் & - எங்கள் அண்ணா

(186) சொல்லாயோ வாய்திறந்து0ஜெயச்சந்திரன் & - மோகமுள்

(187) உன்னைக் காண துடித்தேன்0ஜெயசந்திரன் & - நட்பு

(188) பூந்தென்றலே நீ பாடிவா பொன் மேடையில் பூச்சூடவா0ஜெயச்சந்திரன் & - மனசுக்குள் மத்தாப்பூ

(189) தேன் பாயும் வேளை செவ்வான மாலை பூந்தென்றல் தாலாட்டுப் பாடும்தெய்வங்கள் நல்வாழ்த்துக் கூறும்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - பெளர்ணமி அலைகள்

(190) வானம் இங்கே மண்ணில் வந்தது வாசல் தேடி வந்து வா வா என்றது0ஜெயசந்திரன் & வாணிஜெயராம் - நட்சத்திரம்

(191) ஆஹா இருட்டு நேரம் ஆசை வெளிச்சம் போடும்0ஜெயசந்திரன் & ? - இளையராஜாவின் ரசிகை

(192) கண்ணே கரிசல் மண்ணு பூவே தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே0ஜெயச்சந்திரன் - வைகாசி பிறந்தாச்சு

(193) இது காதலின் சங்கீதம்0ஜெயச்சந்திரன் - அவள் வருவாளா

(194) வெள்ளையாய் மனம்0ஜெயச்சந்திரன் & ? - சொக்கத்தங்கம்

(195)மழையில் நனைந்த 0ஜெயச்சந்திரன் & ? - காற்றுள்ள வரை

(196)காதல் திருடா0ஜெயச்சந்திரன் & சித்ரா - பிபாக்கெட்

(197)கண்ணில் ஏதோ மின்னலடிச்சிருச்சு0ஜெயச்சந்திரன் & ஜானகி - பூவிலங்கு

(198)அஞ்சாறு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - குரோதம்

(199)இதுக்குத் தானா0ஜெயச்சந்திரன் -உள்ளம் கவர்ந்த கள்வன்

(200) சுதந்திரத்தை0ஜெயச்சந்திரன் & ஜானகி - ரெட்டைவால்குருவி

(201 )இந்த இரவில் நான் பாடும் பாடல் 0 ஜெயச்சந்திரன் - யாரோ அழைக்கிறார்கள்

(202)கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்0ஜெயச்சந்திரன் - காற்றினிலே வரும் கீதம்

(203)ஆதிசிவன்0ஜெயச்சந்திரன் & ஜானகி - கடவுள்

(204)ஜனனி ஜனனி0ஜெயச்சந்திரன் & ஷைலஜா - விஸ்வநாதன் வேலை வேண்டும்

(205)வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா 0 ஜெயச்சந்திரன் & ஜானகி - கிழக்குச்சீமையிலே

(206)நீதானே தூறல் நான் தானே சாரல்0ஜெயச்சந்திரன் & ஷைலஜா - பிரம்மராஜாக்கள்

(207) இரவினில் பனியினில் இருவரும் விழித்திருப்போம்0
ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - நெருப்பிலே பூத்த மலர்

(208)மாளிகையானாலும் மலர்வனமானாலும் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - ஆஷா

(209)திருநாளும் வருமே சாமி 0 ஜெயச்சந்திரன் & சுசிலா -இசைக்கு ஒரு கோயில்

(210)எத்தனை அவதாரம் 0 ஜெயச்சந்திரன் - நான் நானேதான்

(211)அம்மா அடி அம்மா சுகம் சும்மா வருமா0ஜெயச்சந்திரன் & ஜானகி - ரசிகன் ஒரு ரசிகை

(212)நான் தாயுமானவன் தந்தையானவன்0ஜெயச்சந்திரன் - தாம்பத்யம் ஒரு சங்கீதம்

(213)என் மனக்கூட்டுக்குள்ளே ஒரு கிளியை வளர்த்தேனே அதன் அழகை ரசித்தேனே / நான் என்னை மறந்தேனே0ஜெயச்சந்திரன் - மனக்கணக்கு

(214)அலைமகள் மலைமகள் மூவரும் குலவிடும் ராத்திரி நவராத்த்திரி 0ஜெயச்சந்திரன் & சுசிலா - வெள்ளிரதம்

(215)பூந்தென்றல் காற்றே வா 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் - மஞ்சள் நிலா

(216) உயிருள்ள ரோஜாப்பூவே உனக்காக வாழ்வேன் நானே 0 ஜெயச்சந்திரன் - நான் வளர்த்த பூவே


(217) கண்ணுக்குள்ளே புன்னகைக்கும் காதல் ஓவியம்
கற்பனையில் மின்னும் ஒரு ராஜ காவியம் 0 ஜெயச்சந்திரன் - பந்தா

(218) மணி ஓசை கேட்டது உனைக் காண மனசு ஏங்குதே
0 ஜெயச்சந்திரன் & ? - இருளும் ஒளியும்

(219)கடலம்மா கடலம்மா உப்புக் கடலம்மா/என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா
0 ஜெயச்சந்திரன் & ? - நிலாவே வா

(220)சாமந்தி பூவுக்கும் சாயங்கால காத்துக்கும்/சரியாச்சு என்று சொல்லி பாட்டுப் பாடு
0 ஜெயச்சந்திரன் - புத்தம் புதுபூவே

(221)எனக்கொரு மணிப்புறா ஜோடி ஒன்று இருந்தது 0 ஜெயச்சந்திரன் - மணிப்புறா

(222)பால் நிலாவிலே ஒரு பல்லவி /அதைப் பாடும் போதிலே ஒரு நிம்மதி 0 ஜெயச்சந்திரன் - மீசை மாதவன்

(223)காபூளிவாளா நாடோடி காடாறு மாசம் சம்சாரி 0 ஜெயச்சந்திரன் - மீசை மாதவன்

(224)எந்தன் மனம் 0 ஜெயச்சந்திரன் & பவதாரிணி - எனக்கொரு மகன் பிறப்பான்

(225)பூச்சமாய் ஒரு பூங்குருவி 0 ஜெயச்சந்திரன் - எனக்கொரு மகன் பிறப்பான்

(226) கரு வண்ன வண்டுகள் 0 - ஜெயச்சந்திரன் - தேவ ராகம்

(227) மஞ்சள் இட்ட நிலவாக 0 ஜெயச்சந்திரன் & ? - அவள் தந்த உறவு

(228) மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில 0 ஜெயச்சந்திரன் - சோலையம்மா

(229) வைகை கரைப் பூங்காற்றே வாசம் வீசும் தேன்காற்றே 0 ஜெயச்சந்திரன் - மாங்கல்யம் தந்துனானே

(230) பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு 0 ஜெயச்சந்திரன் & வானி ஜெயராம் - பார்வையின் மறுமக்கம்

(231) தாலாட்டுவேண் கண்மணி பொண்மணி 0 ஜெயச்சந்திரன் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்

(232) பூ பூத்த செடியக் காணோம் விதை போட்ட நானோ பாவம் 0 ஜெயச்சந்திரன் - பூ பூவா பூத்திருக்கு

(233) ஓ மை டியர் ஐ லவ் யூ - 0 ஜெயச்சந்திரன் - வெளிச்சம்

(234) பூவெல்லாம் 0 ஜெயச்சந்திரன் - என் தங்கச்சி படிச்சவ

(235) மாமான்னு சொல்ல ஒரு ஆளு இப்ப வரப்போற நாளு 0 ஜெயச்சந்திரன் - என் தங்கச்சி படிச்சவ

(236) ஆத்தங்கரை மேட்டோரமா ஆடிப் பல நாளச்சம்மா 0 ஜெயச்சந்திரன் & ஜானகி

(237) தீபங்களே நீங்கள் கண் மூடினால் தெய்வம் வாடாதோ 0 ஜெயச்சந்திரன்

(238) எங்கும் இன்பம் கானுதே உலகம் எஙும் இன்பம் காணுதே 0 ஜெயச்சந்திரன் & சித்ரா

(239) என்னாவது இந்த வழக்கு 0 ஜெயச்சந்திரன் - பச்சைக் கொடி

(240) இன்று மோகம் தொடங்கி வரும் எதற்காக 0 ஜெயச்சந்திரன் & சித்ரா

(241) அந்தி நேர தென்றல் காற்று 0 ஜெயச்சந்திரன் - இணைந்த கைகள்
(242) பதினெட்டு வயது பருவத்தின் நிலவு 0 ஜெயச்சந்திரன் & சித்ரா

(243) செம்பருத்திப் பூவிது பூவிது /வேலியோரம் எட்டி எட்டி யாரைப் பார்க்குதோ 0 ஜெயச்சந்திரன் & சித்ரா

(244) உள்ளம் உள்ளம் /இன்பத்தில் துள்ளும் துள்ளும் 0 ஜெயச்சந்திரன் & சித்ரா - உள்ளம் என்னும் நதியினிலே


(245) ஏண்டியம்மா பக்கம் பக்கம் வாயேன் / வண்ணப் பூ இதழைத் தாயேன் 0 ஜெயச்சந்திரன்

(246) மோகம் வந்து முத்தம் கேட்கும் ராத்திரி/ அது எந்த ராத்திரி/நாணம் விடை பெற வேண்டும் 0 ஜெயச்சந்திரன் & வானி ஜெயராம்

(247) மொட்டு விட்ட வாசனை மல்லி / வாங்கி வந்தேன் ஆசையில் அள்ளி 0 ஜெயச்சந்திரன் & ஜானகி - கருடா சொந்க்கியமா ?

(248) பரிசம் போட பங்குனி மாசம் 0 ஜெயச்சந்திரன் & ஜானகி

(249) பார்த்தாலும் ஆசை இது தீராது / படுத்தாலும் தோங்க கோட தோணாது 0 ஜெயச்சந்திரன் & ?

(250) பெத்தாலும் பெத்தேனடா ஒரு போக்கிரி பையலத் தான் - 0 ஜெயச்சந்திரன்

(251) சுகமான எதிர் காலம் நல்ல சேதி நமக்கு கூறும் 0 ஜெயச்சந்திரன் & ?

(252) வீடு தேடி வந்தது 0 ஜெயச்சந்திரன் & ?

(253) உயிர் எழுதும் ஒரு கவிதை / நீதான் தேவியே 0 ஜெயச்சந்திரன் & ? - ஆசைக் கிளியே கோபமா

(254) நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டுச் சென்றது 0 ஜெயச்சந்திரன் - ரிஷிமூலம்

(255) கல்யான கனவு 0 ஜெயச்சந்திரன் & ? - சுதேசி

(256) ஒரு ஓசையின்றி மவுனமாக உறங்குபவள் மனது 0 ஜெயச்சந்திரன் & ? - பரிச்சைக்கு நேரமாச்சு

(257) கோலி கோலி 0 ஜெயச்சந்திரன் & ? - செம ரகளை

(258) வெத்தலக் காடு வெறிச்சோடி போச்சு 0 ஜெயச்சந்திரன் - காவடிச் சிந்து

(259) அலைமகள் கலைமகள் மலைமகள் மூவரும் குலவிடும் ராத்திரி நவராத்திரி - 0 ஜெயச்சந்திரன் & ? - வெள்ளி ரதம்

(260) மங்கள மேடை அதில் மல்லிகை வாடை - 0 ஜெயச்சந்திரன் & ? மருமகளே வாழ்க

(261) அம்மன் கோவில் எல்லாமே எந்தன் அம்மா உன்ந்தன் கோவிலம்ம 0 ஜெயச்சந்திரன் - ராஜாவின் பார்வையிலே

(262) காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே 0 ஜெயச்சந்திரன் - வானத்தைப் போல

48 comments:

Anonymous said...

நல்ல பதிவு. பாட்டு நிறைய சொல்லிருக்கீங்க. மெதுவா பார்க்கிறேன்.

கருத்துச் சொன்னவரு:

Anonymous said...

யோவ் பெயரில்லாப் பூச்சி

லிஸ்டுல இருக்குற எல்லாப்பாட்டையும் இன்னொருக்கா
பாத்துட்டு எதுனா விட்டுப் போயிருந்தா சொல்லும்வே


கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

மரவண்டு,
எல்லா பாட்டையும் தேடி புடிச்சி ..எப்படிவே தட்டச்சீரு?
கெளப்புறீருவே !

குமரேசன்.

கருத்துச் சொன்னவரு: kumaresan

Anonymous said...

கன்சு,

ஜெயச்சந்திரன் இனிய குரல் வளமுடைய பாடகர். என் அப்பாவுக்கு "ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு" பாடல் ரொம்பப் பிடிக்கும். ஏனோ நிறைய வாய்ப்புகள் அவருக்குத் தரப்படுவதில்லை.

அது சரி. இந்தப் பாடல்கள்லாம் பட்டியல்ல இருக்கா?

விழியே என்கொரு - தழுவாத கைகள்
பூ முடித்து பொட்டு வைத்து - என் புருசன் தான் எனக்கு மட்டும்தான்
வள்ளி வள்ளி என - தெய்வ வாக்கு (இது இளைய ராஜா பாடினதான்னும் சந்தேகமா இருக்கு)
ராஜ்யமா இல்லை இமையமா? - பாபா (இது வேற யாராச்சும் ஜெ.சந்திரனா?)
36-வதா இருக்கறது 60-லயும் திரும்ப வருது. அதுக்குப் பதிலா உன் பார்வையில் ஓராயிரம் - அ.கோ.கிழக்காலே-வைச் சேத்துக்குங்க
பூந்தென்றல் காற்றே வா - மஞ்சள் நிலா
வசந்தகால நதியினிலே வைர மணி நீரலைகள் - (என்ன படம்னு தெரியலை. ஜெ.சந்திரனா ஜேசுதாஸான்னும் சந்தேகமா இருக்கு)
அந்த 7 நாட்கள்ல - ஸ்வர ராக....ன்னு ஆரம்பிக்கற பாட்டு ஒண்ணும் இருக்கு.
இரு காதலின் ராகம் - அவள் வருவாளா
மழையில் நனைந்த - காற்றுள்ள வரை
கத்தாளம் காட்டு வழி - கிழக்குச் சீமையிலே
சோதனை தீரவில்லை - செந்தூரப் பூவே
வெள்ளையாய் மனம் - சொக்கத் தங்கம்
காதல் வெண்ணிலா - வானத்தப் போல
கண்ணே கரிசல் - வைகாசி பொறந்தாச்சு

இந்த சுட்டியையும் பாருங்க: http://www.jayachandransite.com/ அவர் மலையாளத்திலும் ஏகப்பட்ட பாடல்களைப் பாடியிருக்கார்.

அன்புடன்
சுந்தர்


கருத்துச் சொன்னவரு: சுந்தர்

Anonymous said...

முந்தி பகிர்ந்துகிட்ட பாடல்களுக்கு நன்றி கணேஷ்.

இப்ப எதுக்கு நன்றி சொல்றாங்கன்னு யோசிக்கிறீங்களா? மிச்சப்பாட்டு வேண்டுங்கிறதுக்காகத்தான் :P

-மதி

கருத்துச் சொன்னவரு: Mathy Kandasamy

Anonymous said...

சுந்தர்,
வள்ளி வள்ளி என - தெய்வ வாக்கு (இது இளைய ராஜா பாடினதான்னும் சந்தேகமா இருக்கு)
இளைய ராஜா தான்.
ஆனா அதே படத்துல "ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை" பாட்டு ஜெ.சந்திரன் பாடினது. பட்டியல்'ல இருக்கானு தெரியலை

ராஜ்யமா இல்லை இமையமா? - பாபா (இது வேற யாராச்சும் ஜெ.சந்திரனா?)
ஜெ.சந்திரன்


வசந்தகால நதியினிலே வைர மணி நீரலைகள் - (என்ன படம்னு தெரியலை. ஜெ.சந்திரனா ஜேசுதாஸான்னும் சந்தேகமா இருக்கு)

படம் :மூன்று முடிச்சு. ஜெ.சந்திரன் தான். உங்க தலைவர் படம் பேரு தெரியலையா? ;-)


கருத்துச் சொன்னவரு: kumaresan

Chandravathanaa said...

மரவண்டு
இவ்வளவு பாட்டையும் சேர்த்து வைத்திருக்கிறீங்களா...!
எல்லாவற்றையும் இங்கு பதிந்ததற்கு நன்றி.

அந்த மூக்குத்திப்பூ மேலே... பாட்டு வந்த காலத்தில் எனக்கு மிகவும் பிடித்தது.
பாக்கியராஜ் க்கும் சரிதாவுக்கும் தான் அந்தப் பாடல் படத்தில் வருகிறது.
சோகமாயும் சந்தோசமாயும் இரு பாடல்கள். இப்போதும் கேட்டால் நன்றாகத்தான் இருக்கும்.
அது மட்டுமல்லாமல் அந்தக் கால நினைவுகளையும் மீட்டும்.

மற்றும் சுந்தர் சொன்ன அந்தப் பாடலைப்(வசந்த கால நதிகளிலே..) பாடியது யார் என்பது எனக்கும் சரியாகத் தெரியாது.
பாடல் இடம் பெற்ற படம் தெரியும் - மூன்று முடிச்சு.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

அப்படியே அந்த பாட்டுக்களை எங்கியாவது ஏற்றினால், நாங்களும் கேட்போம் அல்ல.

கருத்துச் சொன்னவரு: பரணீ

Anonymous said...

கலக்கிப்புட்டியே ராசா! அப்படியெ மிச்ச பாட்டையெல்லாம் போட்டு நல்லாரும்வெ!

பட்டியல்ல எதுனா கிடைக்கலன்னா, MP3க்காக உமக்கு ஒரு தனி மின்னஞ்சல் தட்டலாமா?


கருத்துச் சொன்னவரு: செல்வராசு, ஸ்காட்லான்ட்.

Anonymous said...

//மரவண்டு
இவ்வளவு பாட்டையும் சேர்த்து வைத்திருக்கிறீங்களா...!
எல்லாவற்றையும் இங்கு பதிந்ததற்கு நன்றி.//

இதேதாங்க.
நல்லா இருங்க.


கருத்துச் சொன்னவரு: துளசி கோபால்

Anonymous said...

//என் அப்பாவுக்கு "ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு" பாடல் ரொம்பப் பிடிக்கும். ஏனோ நிறைய வாய்ப்புகள் அவருக்குத் தரப்படுவதில்லை.//


சுந்தர், உங்களோட அப்பாவுக்கா?


கருத்துச் சொன்னவரு: கொழுவி

Anonymous said...

ரொம்ப பெரிய விஷயமுங்க.....
ஜெயச்சந்திரன் சார் அட்ரஸ் கண்டுபிடிச்சு உங்க பதிவை அனுப்பு வச்சீங்கன்னா கண்டிப்பா அவரே அவரோட பாடல்களை mp3 வட்டாக அனுப்பி வைப்பார்

கருத்துச் சொன்னவரு: gganesh

Anonymous said...

Dear friends

Thanks for your comments
I will write in detail later

Thanks


கருத்துச் சொன்னவரு: maravantu

Anonymous said...

மரவண்டு..பொறுமையா இவ்வளவு பாட்டையும் தொகுத்திருக்கீங்களே..ராஜா மகள், ரோஜா மகள் எனக்கு பிடித்த பாட்டு.

ஆப்ரிக்காவில் அப்புன்னு ஒரு படமா?? துளசிக்கா.. ப்ளீஸ் நோட் திஸ்!! :-)

கருத்துச் சொன்னவரு: Ramya Nageswaran

Anonymous said...

//ஜெயச்சந்திரன் இனிய குரல் வளமுடைய பாடகர். என் அப்பாவுக்கு "ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு" பாடல்
ரொம்பப் பிடிக்கும். ஏனோ நிறைய வாய்ப்புகள் அவருக்குத் தரப்படுவதில்லை.//

அன்புள்ள சுந்தர்

இளையராஜவை அடுத்து , ஏ.ஆர்.ரகுமான் இசையில் , ஜெயச்சந்திரன் சில பாடல்கள் பாடியிருக்கிறார்.அப்புறம் எஸ்.ஏ ராஜ்குமார் இசையிலும் சில பாடல்கள் பாடியிருக்கிறார்.வேற யாரும் ஜெயச்சந்திரனை கண்டுக்கலை.

//36-வதா இருக்கறது 60-லயும் திரும்ப வருது. //

நன்றி திருத்திட்டேன்

//அதுக்குப் பதிலா உன் பார்வையில் ஓராயிரம் - அ.கோ.கிழக்காலே-வைச் சேத்துக்குங்க //

இந்தப் பாடலைப் பாடியது யேசுதாஸ்...

//வசந்தகால நதியினிலே வைர மணி நீரலைகள் - (என்ன படம்னு தெரியலை. ஜெ.சந்திரனா ஜேசுதாஸான்னும்
சந்தேகமா இருக்கு)//

இது ஓர் அந்தாதிப்பாடல் , ஜெயச்சந்திரன் மொத்தம் மூனு அந்தாதிப் பாட்டு பாடியிருக்காரு

1)வசந்தகால நதியினிலே வைர மணி நீரலைகள்-மூன்று முடிச்சு
2)ஆடிவெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம் - மூன்று முடிச்சு
3)நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ் - நெஞ்சத்தை அள்ளித்தா

//அந்த 7 நாட்கள்ல - ஸ்வர ராக....ன்னு ஆரம்பிக்கற பாட்டு ஒண்ணும் இருக்கு.//
இந்தப் பாட்டு சரியா ஞாபகம் இல்லை .. பாக்குறேண்


//இரு காதலின் ராகம் - அவள் வருவாளா//

இது காதலின் சங்கீதம் - நன்றி லிஸ்டுல சேத்துட்டேன்

//மழையில் நனைந்த - காற்றுள்ள வரை//

இந்தப் பாட்டு நான் கேட்டதில்லையே

//கத்தாளம் காட்டு வழி - கிழக்குச் சீமையிலே//

யாரு பாடுனான்னு உறுதியாத் தெரில

//சோதனை தீரவில்லை - செந்தூரப் பூவே
வெள்ளையாய் மனம் - சொக்கத் தங்கம்
கண்ணே கரிசல் - வைகாசி பொறந்தாச்சு//

நன்றி - லிஸ்டுல சேத்துட்டேன்




கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

//மரவண்டு,
எல்லா பாட்டையும் தேடி புடிச்சி ..எப்படிவே தட்டச்சீரு?
கெளப்புறீருவே !

குமரேசன்.//

அன்புள்ள கும்ஸ்

எல்லாப் பாட்டையும் தேடிப்புடிக்கிறதுக்காகத் தான் இந்தப் பதிவே போட்டேன்.
இன்னும் தேடுதம் வேட்டை தொடரும்



கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

//முந்தி பகிர்ந்துகிட்ட பாடல்களுக்கு நன்றி கணேஷ்.//

அன்புள்ள மதி , யாருக்கு முந்தி நான் பகிர்ந்துக்கிட்டேன் :-)

//இப்ப எதுக்கு நன்றி சொல்றாங்கன்னு யோசிக்கிறீங்களா? மிச்சப்பாட்டு வேண்டுங்கிறதுக்காகத்தான் :P//

மிச்சப்பாட்டு பின்னாடி வரும் , லிஸ்டுல இருக்குறதுல எதாச்சும் பாட்டு தேவைப்பட்டா
மெயில் அனுப்புங்க




கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

//வள்ளி வள்ளி என - தெய்வ வாக்கு (இது இளைய ராஜா பாடினதான்னும் சந்தேகமா இருக்கு)
இளைய ராஜா தான்.ஆனா அதே படத்துல "ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை" பாட்டு
ஜெ.சந்திரன் பாடினது. பட்டியல்'ல இருக்கானு தெரியலை //

அன்புள்ள கும்ஸ்

பட்டியல்'ல இருக்கு பாடல் எண் : 177

கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

அன்புள்ள சந்திரவதனா , பரணீ, செல்வராசு , துளசிகொழுவி,கணேஷ் & ரம்யா

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

//ஜெயச்சந்திரன் சார் அட்ரஸ் கண்டுபிடிச்சு உங்க பதிவை அனுப்பு வச்சீங்கன்னா
கண்டிப்பா அவரே அவரோட பாடல்களை mp3 வட்டாக அனுப்பி வைப்பார்//

அவசியமே இல்லை , எங்கிட்டயே சுமார் 130 பாடல்கள் mp3 வடிவத்தில் இருக்கு
மீதிப்பாடல்கள் ஒலிநாடாவுல இருக்கு , தேவைப்பட்டால் மின் அஞ்சல் போடுங்க

maravantu@gmail.com

கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

இவ்வளவு பொறுமையாக நேரத்தையும் பொருட்படுத்தாது கடுமையாக உழைத்துள்ளீர்!!!

வளர்க உமது சேவை

mp3 தட்டு கிடைத்தால் எனக்கும் ஒன்று


கருத்துச் சொன்னவரு: abi nathan

Anonymous said...

மரவண்டு,
எனக்கும் ஜெயச்சந்திரன் மிகவும் பிடித்த பாடகர். பதிவுக்கும், பட்டியலுக்கும் நன்றி.

கருத்துச் சொன்னவரு: sundaramoorthy

Anonymous said...

// mp3 தட்டு கிடைத்தால் எனக்கும் ஒன்று //

அன்புள்ள அபி

தட்டுலாம் கிடைக்காது , பிடித்த பாடல்களைச் சொல்லுங்கள்
முடிந்தால் அனுப்பி வைக்கிறேன்

அன்புள்ள சுந்தரமூர்த்தி

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி
மேலும் சில பாடல்களைச் சேர்த்துள்ளேன்



கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

Dear MV

great work man

regards
rajesh

கருத்துச் சொன்னவரு: rejesh

Anonymous said...

அன்புள்ள மர வண்டு
நீங்க இசைத் தேனியானது எப்போது? அடேயப்பா!அட்ரஸ் தெரியாத படம் பாட்டெல்லாம் தேடி போட்டுருக்கீங்க! இதுல பாதிப் படம் ரிலீஸ் கூட ஆகவில்லை! எல்லாப் பாட்டையும் எழுதினத்துக்குப் பதிலா டாப் டென் இல்லை மிகச் சிறந்தபாடல்களை மட்டும் போட்டிருக்கலாம்! அத்தனைப் பாட்டையும் படிக்கவே ரொம்ப நேரமாகிறது.
சித்ரா


கருத்துச் சொன்னவரு: chitra

Anonymous said...

Anbu Nanbar kansu..,

arumaiyaana paadalgaLai thoguththu thantha ungalukku nandri. Naanum ungala maathir cinema paatu rasigan thaan. ithee maathiri veru yethum thoguppu irunthuthunaa thayavu seithu Maraththadikko allathu sundaranandhan@yahoo.com.au -ko anuppavum.

meendum nandiyudan,
Sundar.

கருத்துச் சொன்னவரு: Sundar Anandhan

Anonymous said...

Anbu Nanbar kansu..,

arumaiyaana paadalgaLai thoguththu thantha ungalukku nandri. Naanum ungala maathir cinema paatu rasigan thaan. ithee maathiri veru yethum thoguppu irunthuthunaa thayavu seithu Maraththadikko allathu sundaranandhan@yahoo.com.au -ko anuppavum.

meendum nandriyudan,
Sundar.

கருத்துச் சொன்னவரு: Sundar Anandhan

Anonymous said...

//எல்லாப் பாட்டையும் எழுதினத்துக்குப் பதிலா டாப் டென் இல்லை மிகச் சிறந்தபாடல்களை மட்டும் போட்டிருக்கலாம்//

அன்புள்ள சித்ரா

படிக்குறதுக்கு நேரமாகுதா ?
அப்படின்னா இவ்வளவு பாட்டையும் தேடுறதுக்கு எவ்வளவு நாளாயிருக்கும் ? அதவுடுங்க தட்டச்சுறதுக்கு எவ்வளவு நேரமாயிருக்கும் , ஜெயச்சந்திரன் பாட்டுல டாப்௰ லாம் சொல்ல முடியாது , இந்த லிச்ட் டாப் ௨00 :-)

அன்புள்ள சுந்தர்

கண்டிப்பாக வேறொரு பாடகர் பாடிய பாடல்கள் தொகுப்பு தயார் செய்யும் பொழுதும்
மரத்தடியில் பகிர்ந்து கொள்கிறேன்

பின்னூட்டத்திற்கு நன்றி





கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

அருமையான தொகுப்பு.

நன்றியும் பாராட்டுகளும்.

எம்.கே.

கருத்துச் சொன்னவரு: mkkumar

Anonymous said...

அன்புள்ள எம்.கே.குமார்

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி


கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

//என் அப்பாவுக்கு "ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு" பாடல் ரொம்பப் பிடிக்கும். ஏனோ நிறைய வாய்ப்புகள் அவருக்குத் தரப்படுவதில்லை.//


//சுந்தர், உங்களோட அப்பாவுக்கா?//

ஆமாங்க கொழுவி. எதுக்கெடுத்தாலும் "அந்தக் காலத்துல..."ன்னு ஆரம்பிக்கற பெரியவங்களுக்கே பிடிச்ச பாட்டு அந்தப் பாட்டு. என் அப்பாவுக்குப் பிடித்த மிகச் சில இந்தக் காலப் பாடல்களில் ராத்தி ஒன்ன-யும் ஒன்று.

அன்புடன்
சுந்தர்.



கருத்துச் சொன்னவரு: சுந்தர்

Anonymous said...

கணேஷ் உழைப்பின் பலன்
இந்த பதிவு
மிக்க மகிழ்ச்சி
முழுவதும் சேகரித்துவிட்டீர்களா?

என்றால் எனக்கு உங்கள் கலெக்ஷனின் காப்பி ஒன்று வேண்டும்.

கருத்துச் சொன்னவரு:

மதுமிதா said...

கணேஷ் உழைப்பின் பலன்
இந்தப் பதிவு
மிக்க மகிழ்ச்சி
முழுவதும் சேகரித்துவிட்டீர்களா?

என்றால் எனக்கு உங்கள் கலெக்ஷனின் copy ஒன்று வேண்டும்

Anonymous said...

அன்புள்ள மதுமிதா

உங்களுக்குத் தனிமடல் அனுப்பியுள்ளேன்


கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

ஒரு தெய்வம் தந்த பூவே (கன்னத்தில் முத்தமிட்டால்) விட்டுட்டீங்களே?

கருத்துச் சொன்னவரு: thangam

Anonymous said...

தெய்வம் தந்த பூவே இருக்கே
81 வது பாட்டு .. பாருங்க

கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
மதுமிதா said...

நன்றி கணேஷ்

Anonymous said...

எனக்கொரு மணிப்புறா ஜோடி என்று இருந்தது - படம் : ஜோடி புறா(ஜெயசந்திரன்)

எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் சிலவற்றை பாடி இருப்பவர் ஜெயசந்திரன் தான் என்று உங்கள் பதிவை பார்த்துதான் தெரிந்து கொண்டேன். நன்றி.

கருத்துச் சொன்னவரு: கீதா

Anonymous said...

அன்புள்ள கீதா

நீங்கள் சொன்ன பாடலைக் கேட்டதில்லை , ஆனால் படப் பெயர் கேள்விப் பட்டது போல் தெரிகிறது .நன்றி

உங்களுக்குப் பாடல் எதுவும் தேவைப் பட்டால் தனிமடலிடவும்



கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

http://www.musicindiaonline.com/l/26/s/movie_name.4549/singer.2811/
அந்தப்பாடல் இங்கு உள்ளது.

தேவைப்படும் பாடலை நிச்சயம் கேட்கிறேன்.
நன்றி

கருத்துச் சொன்னவரு: கீதா

Anonymous said...

எந்தன் மனம் படம்: எனக்கொரு மகன் பிறப்பான்

இதை நீங்கள் பட்டியலிட்டிருக்கிறீர்களா தெரியவில்லை.

கருத்துச் சொன்னவரு: கீதா

Anonymous said...

//எந்தன் மனம் படம்: எனக்கொரு மகன் பிறப்பான்//

பட்டியலில் இல்லை

நீங்கள் கொடுத்த இணைய முகவரியில் மேலும் (பட்டியலில் இல்லாத) சில பாடல்களும் இருக்கின்றன,நன்றி



கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

மரவண்டு:

தூள்.காம் ல் ஜெயசந்திரன் வாரம் கொண்டாடுகிறோம். "ராஜா பொண்ணு" போன்ற சில அரிய படல்களைத் தந்து உதவினால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முடியுமா ?

andholanam at yahoo.com

கருத்துச் சொன்னவரு: Murali

Anonymous said...

ஐயா,
எனக்கு சில பாட்டுகள் வேணுமே? கூல்கூஸ்லயும் தேடிபாத்தேன். வேற எங்கியாச்சும் இருக்கா?

கருத்துச் சொன்னவரு: manivannan

Anonymous said...

வனக்கம் கனெஷ்(அதானெ ஊங்க பெரு)
என் பெரு விஜய். சொந்த ஊரு சிவகாசி பக்கதுல பேராபட்டி. நானும் அய்ய நாடார் கல்லூரியிலே தான் படிச்சேன். ஊங்க தொகுப்பு ரொம்ப நல்லாயிருக்கு.

கருத்துச் சொன்னவரு: Vijay

Anonymous said...

Dear Ganesh(maravantu)

I saw your collections of Jayachandran songs. Really very good compilation. I am searching for Jayachandran song list for sometime. Because I have got a CD named “Jayachandran hits” a mp3 collection of 70 songs. But the CD did’t have any details of film names. Now I got the whole list from your collections and got few rare songs from your gmail account.Thank you very much.

Some corrections in your list

Songs by other singers in your list (as for as I know)

Song no 13 odayinna_rajathi rojakili KJY & janaki
Song no 63 uravugal thodarkathai_aval appadithan KJY
Song no 186 sollayo_moga mull MG Sreekumar
Song no 197 kannil etho_poovilangu KJY & janaki
Song no 199 idhukuthana_ullam kavarntha kalvan_malaysia vasudevan


Doubtful songs by Jayachandran

Song no 49 & song no192 kanne karisal mannu_vaikasi poranthachu KJY

Song no 201 singara mane_thai mozhi (female voice: Jayachandran version undaa ?)
Song no 202 kanden engum_katrinile varum geetham(janaki&vani versions:?PJ version)


Some songs listed twice

Song no 15 & song no 93 sevannae_nallathoru kudumbam
Song no 109 & song no 131 ithukalakalam_ valampurisangu
Song no 124 & song no 177 oorellam _deiva vakku
Song no 127 ( ? Oru pachakili ) & song no 182 oru kolakili_ponvilangu
Song no 122 & song no 220 samanthi poovukkum_putham pudhu poove


Some corrections

Song no 30 kalidasan_sorakkottai singakutty _ PJ & susheela not by janaki
Song no 69 eenodu_thoondil meen _pj & swarna not by vani jayaram
Song no 70 palabhisheka_muthana muthallavo_pj & susheela not by vani jayaram
Song no 190 vaanam inge mannil vanthathu_natchathiram PJ & janaki not by vani jayaram


Song no 95 naalu vagai poovil film name ramayee vayasukku vanthutta
Song no 150 manthara malare film name naan avanillai(oru kodiyil iru malargal illai)

clarification

Song no 89 soodana ennam film name annaparavai(quoted in song tag) or theeneer( quoted in list)


My additions to Jayachandran list

1. Oru ooasaiyindri mounamaga _ parichaikku neramachu
2. Intha iravil naan paadum paadal_yaro azhaikirargal
3. manjal itta nilavaga_aval thantha uravu_
4. Sriranjani en_thambi thangakambi
5. Mottu vitta vasanai malli_karuda sowkiyama
6. Kathal vennila_vanathai pola_
7. vaigai karai_mangalyam thanthunane
8. veththalakadu_kavadi sinthu
9. swararaga - antha 7 natkal
10. oru ooril oru oomai raja_theerppugal tiruthapadalam_
11. nenjil ulla kayam indru_rishi moolam
12. ayyavukku manasirukku_thee
13. holi holi_semaragalai
14. Kalyana Kanavu_sudesi


Continue the good work. I need some songs from you .Following is my requests.

Naan varaintha oviyame song no 118
Ilamaiyin ninaivugal ayiram malargalil ezhuthiya oviyam_selvakku song no 140
malai mancholai malarvasanai adi agatho_oru manithan oru manaivi song no 142
deivam nammai vazhthattum koyil manaigal padattum_unnidam mayangugiren(143)
uthadugalil unathu peyar otti kondathu_thanga rangan song no148
mouname mouname ennudan padi va_santhi muhurtham song no 151
sangathamizho_vizhiyora kavithai song no 162
kasthuri maan kuttiyam kannerai song no 172
uyirulla roja poove unakkaga vazhven naane song no 216


If you have these songs please upload in gmail account. If you need any help mail me.
Kanchu2222@yahoo.co.in

Thank you
kanchu


கருத்துச் சொன்னவரு: kanchu

Anonymous said...

ஜெயச்சந்திரனின் ஒரு பாடலை தேடும்பொது உங்கள் பதிவுக்கு தற்செயலாக வந்தேன்.

ஜெயச்சந்திரன் பாடல்களை விரும்பி கேட்கும் இரசிகர்களுக்கு ஒரு அருமையான தொகுப்பு.
இந்த பாடல்களை சேர்ப்பதற்கு எத்தனை சிரமப் பட்டிருப்பீர்கள் என்று புரிகிறது. நானும் எனது அண்ணனும் மீயுசிகல் கடைகளை தேடித் தேடி அலைந்திருக்கிறோம். முதலில் பாடல் இருக்காது. பாடல் இருந்தால், கேசட் டூ கேசட் பதிவு தான் இருக்கும். ரெகார்ட் கிடைக்காது.
உங்களுடைய முயற்சிகளுக்கு Hஅட்ச் ஒff!!

தங்கச் சிமிழ் போல-இது தான் முதல் பாடல்.
பொன்னென்ன பூவென்ன
கண்ணே-முதலில் பிரபலமடைந்த பாடல் மட்டுமே.

அன்புடன்,
இளா.


கருத்துச் சொன்னவரு: இளா