Monday, October 10, 2005

ஈரத்தாமரைப் பூவே - போட்டி




ஈரத் தாமரைப் பூவே
உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே பித்தன் ஆனேன்
உறங்கவில்லை சில வாரங்கள்

0

கண்கள் கார்த்திகை அகல்களோ
இல்லை நட்சத்திரங்களின் நகல்களோ

விரல்கள் வெள்ளரிப் பிஞ்சுகளோ - இல்லை
வெடித்த பருத்திப் பஞ்சுகளோ

0

கூந்தல் என்பது சமுத்திரமோ - அதில்
பூக்கள் மலர்வது விசித்திரமோ

இலைகள் இல்லா பூமரமோ
உன் இமையே உனது சாமரமோ

நீ இலைகள் இல்லா பூமரமோ
உன் இமையே உனது சாமரமோ

ஈரத் தாமரைப் பூவே...
உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே பித்தன் ஆனேன்
உறங்கவில்லை சில வாரங்கள்

போட்டி

கேள்வி எண் (1) : மேலே இருக்கும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் எது ?
துப்பு : சமீபத்தில் ஓர் எழுத்தாளர் இந்தத் திரைப்படத்தின் பெயரைத் தலைப்பாகக் கொண்டு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.


கேள்வி எண் (2) : இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் ?




கேள்வி எண் (3) : ஒரு நடிகையின் பெயரில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்களைப் புனைபெயராகக் கொண்ட தமிழ்க் கவிஞர் , அவர் யார் ?
துப்பு : கவிஞர் மீரா அல்ல


கேள்வி எண் (4) : ஒரு வில்லன் நடிகரின் பெயரைக் கொண்ட ஓர் இலங்கை எழுத்தாளர் , அவர் யார் ?

ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு புத்தகம் பரிசாக வழங்கப்படும் :-)


போட்டி முடிவு

1. பாய்மரக்கப்பல் - பரிசு பெறுபவர் ( பிரகாஷ் )

ஜனகராஜ் கதாநாயகனாக நடித்த படம் . இந்தப் பாடலைப் பாடியவர் பால்சுப்ரமணியன் . இசை கே.வி. மகாதேவன் என்று நளாயினி தெரிவித்திருக்கிறார் (நன்றி) . இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்தப் பாடலின் Mp3 வடிவம் என்னிடத்தில் இருக்கிறது . தேவைப்பட்டால் maravantu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு மடல் அனுப்பவும்


2. சுரேந்தர் - பரிசு பெறுபவர் ( ஆனந்த் )

3. அபி - பரிசு பெறுபவர் ( சொக்கன்)


கவிஞர் அபியின் இயற்பெயர் அபிபுல்லா , இவருடைய சொந்த ஊர் தேனி மாவட்டத்திலுள்ள போடி நாயகனூர் ஆகும் , முதுகலைத் தமிழ் பட்டம் பெற்ற இவர் கல்லூரியில் பேராசியராகப் பணிபுரிகிறார். "இன்னொரு நான்" என்பது இவர் எழுதிய முதல்(1967) கவிதை ஆகும் . மெளனத்தின் நாவுகள் (1974) , அந்தர நடை (1979) , என்ற ஒன்று (1988) , அபிகவிதைகள் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார் . மேலும் லா.ச.ராமாமிர்தம் நாவல்களை ஆய்வு செய்துடாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். சமீபத்தில் நண்பர் சுதாகர் கஸ்தூரி அவர்கள் அபியின் கவிதைகள் குறித்து ஒரு பதிவை இட்டிருக்கிறார்


4. மு.பொன்னம்பலம் - பரிசு பெறுபவர் (பெயரில்லாப்பூச்சி)

நிறைய பேர் சிலோன் விஜயேந்திரன் என்று தவறாகச் சொல்வார்கள் என்று எனக்குத் தெரியும் :-)

பி.கு

இந்தப் போட்டியின் பரிசுப் புத்தகங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனந்த் மற்றும் பெயரில்லாப்பூச்சி ஆகியோர் தங்களது முகவரியை எனக்கு அனுப்பி வைக்கவும்.

0


இனிமேல் போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியையும் சேர்த்து எழுதுங்கள்

0


நிறைய பேர் கலந்து கொள்வதற்குள் போட்டி முடுந்துவிடுகிறதே என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள் :-) . இனி இப்படிச் செய்யலாம் , போட்டிக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பே போட்டி என்றைக்கு & எத்தனை மணிக்குத் தொடங்கும் என்ற விபரத்தை முன் கூட்டியே ஒரு பதிவாக இட்டுவிடுகிறேன். போட்டியாளர்களுக்கு வசதியாக இருக்கும்.


16 comments:

Anonymous said...

2. SN surendar

கருத்துச் சொன்னவரு: anand

Anonymous said...

1. paaymarakkappal
2. s.n.surendar
3. pass
4. vijayendran???

கருத்துச் சொன்னவரு: prakash

Anonymous said...

//2. SN surendar //

அன்புள்ள ஆனந்த்
SN surendar - சரியான பதில்


அன்புள்ள பிரகாஷ்

1. பாய்மரக்கப்பல் - சரியான பதில்
(எழுத்தாளர் பாவண்ணன் பாய்மரக்கப்பல் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்)
2. s.n.surendar - சரியான பதில் (ஆனால் ஏற்கனவே ஆனந்து இதற்கு பதிலளித்துவிட்டார்)
4. vijayendran??? - தவறு

கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

ஆனந்தன்

கருத்துச் சொன்னவரு: Priya

Anonymous said...

4.ஆனந்தன்

கருத்துச் சொன்னவரு: Priya

Anonymous said...

அன்புள்ள ப்ரியா

4.ஆனந்தன் - தவறு

கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

பொன்னம்பலம் ??

கருத்துச் சொன்னவரு: ll

Anonymous said...

அபி ? ('மௌனத்தின் நாவுகள்' நூலாசிரியர்)

நடிகை : அபிராமி

என். சொக்கன்,
பெங்களூர்

கருத்துச் சொன்னவரு: N. Chokkan

Anonymous said...

அன்புள்ள பெயரில்லாப்பூச்சி

4.பொன்னம்பலம் ?? - சரியான பதில்- வாழ்த்துக்கள்


அன்புள்ள சொக்கன் -
அபி ? ('மௌனத்தின் நாவுகள்' நூலாசிரியர்) - சரியான பதில்


அரை மணி நேரத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்
வந்து விட்டனவே !!!!

பரிசு பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

நாளை பரிசுப்புத்தகங்களின் விபரம் அறிவிக்கப்படும்

கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

இப்படி உடனே விடை சொல்லிட்டா நாங்க எப்படி போட்டியில் கலந்துக்கறது? விடைகளை வரிசையா சொல்லிட்டு, சரியான விடை எதுன்னு 24 மணிநேரம் கழிச்சுதான் சொல்லணும். அப்ஜக்ஷன்!!

கருத்துச் சொன்னவரு: thanu

Anonymous said...

பதில்/
1.பாய்மரக்கப்பல்/கே.வி.மகாதேவன்
2.சுரேந்தர்
3.அபி(சேது அபிதா)
4.பொன்னம்பலம்(சிலோன் விஜேந்திரனும் இன்னொரு பதில் அவர் வில்லனும் கவியும்)

கருத்துச் சொன்னவரு: nazhayini

Anonymous said...

தாமதமா வர்ற நாங்க என்ன பண்றது வண்டு

போட்டியான்னு பாக்கறதுக்குள்ள
முடிவும்,பரிசளிப்பும் முடிஞ்சா என்ன பண்றது

கருத்துச் சொன்னவரு: madhumitha

Anonymous said...

அன்புள்ள நளாயினி

போட்டி ஏற்கனவே முடிந்து விட்டது :-(
ஆனாலும் 3 கேள்விகளுக்கு சரியான பதில் அளித்திருக்கிறீர்கள் , வெரி குட் :-)

அன்புள்ள மதுமிதா

அடுத்த போட்டியில பாத்துக்கலாம் :-)

போட்டி முடிவை இந்தப் பதிவிலேயே வெள்யிட்டிருக்கிறேன்
பரிசு பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்


கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

பரிசு வென்றவர்களுக்கு வாழ்த்து

கருத்துச் சொன்னவரு: #

Anonymous said...

மரவண்டு
தனி மெயிலில் முகவரி அனுப்பி இருக்கிறேன்.
நன்றி
ஆனந்த்

கருத்துச் சொன்னவரு: ஆனந்த்

Anonymous said...

அன்புள்ள ஆனந்த்

உங்கள் தனிமடல் கிடைத்தது
நன்றி



கருத்துச் சொன்னவரு: மரவண்டு