Friday, December 09, 2005

ச்சே.. சின்னப்புள்ளையாவே இருந்துருக்கலாம்

கொட்டையோடு விழுங்கிய இலந்தை
மரமாய் முளைக்குமோ?
கிளைவிட்டு வளர்ந்து வயிறு கிழிக்குமோ ?

புத்தகத்தில் வைத்த மயிலிறகு
நான் ஊருக்குப் போன நாள் பார்த்து
குட்டி போட்டால்
யார் அதற்கு தீனி போடுவார் ?

பள்ளிநாட்களில்
பால்யவயதில்
இவ்வாறாக
தினமும் ஒரு கவலை
மனதில் எழும்

0

வேலைகிடைக்குமா ?
கிடைத்தது நிலைக்குமா ?
வருமானம் போதுமா ?
வாழ்க்கை சிறக்குமா ?
வளர்ந்த பிறகு

வளர்கின்ற கவலையில்
மாட்டிக்கொள்கிற மனசு
நினைத்துப் பார்க்கும்
மீண்டும் வராதா ?
அந்தப் பால்ய நாட்கள் ! -( கவிஞர் ஜீவி )

0
ஒரு சின்னப்புள்ளை வீட்டுப்பாடம் எழுதிக்கிட்டு இருந்திச்சாம்,அது கிட்டத்துல வீட்டு வேலைக்காரி உட்காந்தமானக்கி பாத்துக்கிட்டே இருந்துச்சாம்.. உடனே அந்தச் சின்னப் புள்ளை " நீ எம்புட்டு படிச்சிருக்கன்னு " வேலைக்காரியக் கேட்டுச்சாம்.. உடனே அந்த வேலைக்காரி " எங்கம்மாலாம் என்னை பள்ளிக்கொடத்துல சேக்கலைன்னு" சொன்னுச்சாம்.. அதுக்கு அந்த சின்னப் புள்ளை உங்க அம்மா தான் " நல்ல அம்மா "ன்னு சொன்னிச்சாம்.

0

கவிஞர் வண்ணை சிவா , உடைந்த பொம்மையும் அழாத குழந்தையும் அப்படின்னு ஒரு கவிதை தொகுப்பை வெளியிட்டாரு. எந்தக் குழந்தையுமே பொம்மைய உடைச்சதும் அழும் , அப்படி அழலேன்னா , அதுக்கு ஏதோ மூளைக் கோளாறுன்னு அர்த்தமாம்..

0



சில சின்னப்புள்ளைங்கள்ளாம் எதாச்சும் நினைச்சா சாதனையா கெடந்து அதை சாதிச்சுட்டுத்தான் மறுவேலை பாக்கும்.

இவன் எங்க அண்ணன் மவன் , ஸ்வஸ்திக் குமாரு . இவனை இங்கிலீஸ் மீடியத்துல சேத்துவிட்ட முத நாளுஸ்கூல் ஆரம்பிச்சு செத்த நேரத்துல , பைக்கட்ட தூக்கிட்டு விறுவிறுன்னு கிளம்பியிருக்கான் , ஏ எங்க போறன்னு மிஸ் கேட்டுருக்காங்க .. வீட்டுக்குப் போறேன்னு இவன் சொல்லியிருக்கான் , வீட்டுக்குலாம் போக முடியாது பெல் அடிச்சதுக்கப்புறம் தான் போகணும்னு மிஸ் சொல்லியிருக்காங்க ... அப்படின்னா பெல் அடிங்க ... நான் வீட்டுக்குப் போகணும்னு சொல்லியிருக்கான்.

0



அங்கே போகாதே
அதை எடுக்காதே
கீழே இறங்கு
மேல ஏறாதே
பேசாம இரு
சத்தம் போடாத
தூங்கு சீக்கிரம்
தொண தொணண்ணு பேசாதே
இவற்றோடு
லேசான கையுயர்த்தலும்
போதுமானதாயிருக்கிறது
குழந்தைகளை
நம் உலகிற்கு அழைத்துக் கொள்ள - ( வெண்ணிலா )



குழந்தைங்களப் பத்தி வெண்ணிலா நிறைய கவிதைகள் எழுதியிருக்காங்க வெண்ணிலாவின் கணவர் மு.முருகேஷும் நல்ல கவிஞர் தான்,ஆனா நிறைய பேருக்கு அவரைத் தெரியாது .


0

குங்குமம் புத்தகத்துல சினிமாப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் , "பாலகாண்டம்" அப்படின்னு ஒரு தொடர் எழுதிட்டு வந்தார் ,மொத்தம் 15 வாரங்கள் வந்திச்சுஅவரோட சின்ன வயசுல நடந்த சம்பவங்களை ரொம்ப நல்லா சுவாரஸ்யமா எழுதியிருந்தாரு.

0

நான் சின்னோண்டா இருக்கும் போதுலாம் எனக்கு நிறைய சந்தேகம் வரும் .. நான் ஆறாப்பு படிக்கத்துல வரலாறு வகுப்புல பேபி டீச்சர் பாடம் நடத்திட்டு இருந்தாங்க..... 1923 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 5 ஆம் நாள் அந்தப் போர் நடந்தது , டிசம்பர் திங்கள் 8 ஆம் நாள் இந்தப் போர் நடந்ததுன்னு .. அவங்க பாட்டுக்கு சொல்லிக்கிட்டே போனாங்க
உடனே நான் எந்திரிச்சி , "டீச்சர் எல்லாப் போரும் திங்கள் கிழமை அன்னைக்குதான் நடக்குமா?"ன்னு கேட்டேன் "
"திங்கள் என்பதற்கு இங்கே மாதம்னு அர்த்தம்"னு சொல்லி எனக்கு வெளங்க வச்சாங்க...

வீடு கட்டுறதுக்கு முன்னாடி அஸ்திவாரம் போடுறதுக்கு குழி தோண்டுவாங்க, அத கிராமத்துல வானம் தோண்டுறதுன்னு சொல்லுவாங்க , என்னடா இது "பூமியத் தோண்டிப்புட்டு வானம் தோண்டுறோம்"னு சொல்றாய்ங்கன்னு யோசிப்பேன் . இதே யோசனை இன்னொரு புத்திசாலிக்கும் வந்து அதை ஆனந்த விகடன் மதன் கிட்ட கேட்டடிருந்தாப்ல..அவர் அதுக்கு என்னமோ பதில் சொல்லியிருந்தாரு. சரியா ஞாபகம் இல்லை..ஒரு ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னாடி பிரசன்னான்னு ஒருத்தர் மதன்கிட்ட ஒரு கேள்வி கேட்டுருந்தார்..ஏன் சார் வாழப் பழத்தை கழுவாமலே சாப்புடுறோம்னு..அந்தக் கேள்விக்கும் மதன் பொறுமையா , வாழைப்பழத்தோலே அதுக்கு பாதுகாப்பா இருக்குறதுன்னால கழுவத் தேவையில்லைன்னு பதில் சொல்லியிருந்தாரு. பிடிச்சி மோலத் தெரியாத பய கூட இதுக்கு பதில் சொல்லிப்புடுவான் , இது ஒரு கேள்வின்னு அந்த ஆளு மெனக்கெட்டு , மதனுக்கு கடுதாசி போட்டுக் கேட்டுருக்காரு பாருங்க..

0

நான் அஞ்சு வயசிலேயே நீச்சல் கத்துக்கிட்டேன், தினமும் காலேல கிணத்துல தான் குளிப்பேன்.எங்க ஊரு கம்மாக்கரை ஓரமா ஒரு கிணறு இருக்கு , அந்த கிணத்துப் பக்கத்துல ஒரு பூவரசமரம் இருந்ததுனாலஅந்த கிணத்துக்கு பூவரசங்கிணறுன்னு பேரு , அப்ப பத்தாப்பு முழுப்பரிச்சை லீவு உட்டுருந்த சமயம் , வழக்கம் போல பூவரசங்கிணத்துல குளிச்சுட்டு இருந்தேன் , நல்லா அழுக்குத் தேய்ச்சு குளிக்கும் போதுநெஞ்சுல சின்ன கட்டி மாதிரி தட்டுப் பட்ட்டுச்சு, என்னடா இதுன்னு புடிச்சு நசுக்கிப் பாத்தேன் , வலிச்சது , அய்யய்யோ போச்சுடா இதை அறுத்துத் தான் எடுக்கணும் போலன்னு தலயக் கூட துவட்டாம வீட்டுக்கு விறுவிறுன்னு போயி எங்க அம்மா கிட்ட விசயத்தச் சொன்னேன் , எங்க அம்மா அங்க ஐயா கிட்ட சொன்னாங்க ...உடனே எங்க ஐயா எங்க அம்மாகிட்ட இருவது ரூவா கொடுத்து , " குமார செவாசில சந்திர கிரகம் டாக்டர் கிட்டபோயி காட்டிட்டு வாம்மா"ன்னு சொன்னாரு.

சிவகாசில சந்திரககிரகம் டாக்டரு நல்ல கைராசிக்காருன்னு சொல்லிக்குவாங்க , சீக்காளியப் பாத்தே அவனோட ஆயுசச் சொல்லிப்புடுவாரு.பயந்துக்கிட்டே எங்கம்மா கூட ஆஸ்பத்திரிக்குள்ள போனேன் .டாகடர் கிட்ட , எங்க அம்மா விபரத்த சொன்னாங்க .. டாக்டரு என்னைய சட்டையக் கழட்டிட்டு அந்த ரூமுல போயி படுன்னாரு ,உயரமான படுக்கையில மல்லாக்கப் படுத்த்திருந்தேன் , எங்கன வலிக்குதுன்னு டாக்டர் கேட்டாரு , இங்கனன்னு நெஞ்சைக் காட்டுனேன் , லேசா பிடிச்சுப் பாத்துட்டு சட்டையப் போட்டுக்கோ.. 2 மாத்திரை எழுதித் தாரேன்னார் , எனக்கு ஒன்னும் புரியலை , ரூமுக்கு வெளிய நின்னுக்கிட்டிருந்த எங்க அம்மா கிட்ட என்ன தெரியுமா சொன்னாரு , பயப்புடுற மாதிரி ஒன்னும் இல்லேம்மா ,வேற டாக்டர் கிட்ட போயிருந்தேன்னா ..அறுக்கணும் வைக்கணும் ஒரு ஐயாயிரம் கொடும்பான் .. இது பயப்படுற மாதிரி ஒன்னும் கிடையாது , உன் மவன் வயசுக்கு வந்திருக்கான் . அவ்வளதான் "னு பொசுக்குன்னு சொல்லிப்புட்டாரு,வைத்தியம் பாக்குறதுக்கு வந்திருந்தவங்க எல்லாரும் என்னையே பாக்குறாங்க .அதுல காய்ச்சலுக்கோ வயித்துவலிக்கோ வைத்தியம் பாக்கவந்த ஒரு தாவணிப் பிள்ளை என்னைப் பாத்து நக்கலாச் சிரிக்கிது . எனக்குலாம் ஒரே வெட்கம் , என்னோட வலது கால் பெருவிரலால சிமெண்ட் தரையில் ஒரு வானவில்லையே வரைஞ்சுப்புட்டேன்... (இருங்கடே ஒரு டூயட் பாடிட்டு வந்துறேன் .. )

ஆஸ்பத்திரிக்கு எதுக்க இருக்குற மகாராஜா மெடிக்கல்ஸ்ல டாக்டரு
எழுதிக் கொடுத்த மாத்திரைய வாங்கிட்டு வீட்டுக்குத் திரும்பிட்டோம் ,
எங்க அம்மா , எங்க ஐயா கிட்ட விசயத்த சொல்லிட்டாங்க . எங்க ஐயா என்னைய கூப்பிட்டு , " எலே குமாரு இனிமேலு நீ டவுசர்லாம் போடக்கூடாது , ஐயா செவாசில இருந்து கைலி வாங்கிட்டு வர்ரேன் , இனிமேல் நீ கைலிதான் கட்டணும்னு சொல்லிட்டாரு..ஹ்ம் ... நான் வயசுக்கு வந்து 12 வருஷம் ஆச்சி .. அப்பிடி இப்பிடி நடக்குறதுக்கு எந்த சந்தர்ப்பமும் கிடைக்காததுனால இதுநாள் வரைக்கும் நான் ஒரு கற்புக்கரசனாத்தான் வாழ்ந்த்துக்கிட்டு இருக்கேன் :-)

0

முனீஸ்வரன் , இவன் என்னோட வகுப்புத் தோழன் , நெருங்கிய நண்பன்.குழப்பமான நேரத்துல இவங்கிட்டதான் நான் யோசனை கேட்பேன்.ஒரு நாள் இவன் கிட்ட " கல்யாணம் முடிக்காம இருந்துடலாமான்னு யோசிட்டுருக்கேன்னு" சொன்னேன்...
அதுக்கு அவன் "ரொம்ப கஷ்டம்டா , வயசான காலத்துல உன் கூடவே இருந்து நீ சொல்றதையெல்லாம் கேக்குறதுக்கு ஒரு ஆளு வேணும்,அப்படி ஒரு ஆளு வேணும்னா கண்டிப்பா நீ கல்யாணம் முடிச்சுதான் ஆவணும்"னு சொன்னான்.அவன் சொல்றதும் சரிதான்னு படுது. ஹ்ம்... எனக்குன்னு வாய்ச்சிருக்கவ இந்நேரம் எங்க இருக்காளோ .. என்ன செஞ்சிட்டு இருக்காளோ ...

0

போட்டி

கேள்வி எண் 1 : இவர் ஒரு நவீன தமிழ் இலக்கியவாதி இவருடைய இயற்பெயர் இளங்கோ. இவருடைய புனைபெயர் என்ன ?

கேள்வி எண் 2 : இது ஒரு நான்கெழுத்து தமிழ்த் திரைப்படம் , (பாடல்களுக்காகவே இந்தப் படத்தை நான் ஐந்து முறை பார்த்தேன்)இந்தப் படத்தில் வரும் ஒரு காட்சியில் இந்தப் படத்தின் இயக்குநர் , கதாநாயகிக்கு ஒரு பொக்கே கொடுத்துவிட்டுப் போவார்.இந்தப் படத்தின் பெயர் என்ன ?

சரியான பதில் அளிப்பவர்களுக்கு வழக்கம் போல ஒரு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

30 comments:

Anonymous said...

//அதுக்கு அந்த சின்னப் புள்ளை உங்க அம்மா தான் " நல்ல அம்மா "ன்னு சொன்னிச்சாம்.//

அட...

//பெல் அடிச்சதுக்கப்புறம் தான் போகணும்னு மிஸ் சொல்லியிருக்காங்க ... அப்படின்னா பெல் அடிங்க ... நான் வீட்டுக்குப் போகணும்னு சொல்லியிருக்கான்.//

:-):-):-)

//மோலத் தெரியாத பய கூட இதுக்கு பதில் சொல்லிப்புடுவான் , இது ஒரு கேள்வின்னு அந்த ஆளு மெனக்கெட்டு , மதனுக்கு கடுதாசி போட்டுக் கேட்டுருக்காரு பாருங்க..//

:-):-):-)

அடிக்கடி இது போல வந்து எழுதுங்க..

போட்டி கேள்வி ரெண்டுத்துக்குமே பதில் தெரியாது




கருத்துச் சொன்னவரு: prakash

Anonymous said...

நானும் இப்படித்தான் ஒருமுறை ஒரு வரலாற்று ஆசிரியர் நாட்டின் பரப்பளவை விரிவு படுத்த என்ன செய்யனும்னு கேட்டதுக்கு கடல்ல மண்ணைப்போட்டு விரிவாக்கலாம்னு சொன்ன அறிவுஜீவி.

கருத்துச் சொன்னவரு: Mohandoss Ilangovan

Anonymous said...

//கடல்ல மண்ணைப்போட்டு விரிவாக்கலாம்னு சொன்ன அறிவுஜீவி.//


அறிவுஜீவி நான் ரெண்டு கேள்விகள் கேட்டிருக்கேனே
அதுக்கு பதிலு எங்க ?




கருத்துச் சொன்னவரு: maravantu

Anonymous said...

அது தெரிஞ்சா சொல்லி பரிசை வாங்கிட்டு போயிருக்க மாட்டேனா. ஒன்னுமே புரியலை உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது :-) :-)

கருத்துச் சொன்னவரு: Mohandoss Ilangovan

Anonymous said...

2) 'மின்னலே'

கருத்துச் சொன்னவரு: Bobby

Anonymous said...

என்ன அடக்கம் :-))))))))

//அதுல காய்ச்சலுக்கோ வயித்துவலிக்கோ வைத்தியம் பாக்கவந்த ஒரு தாவணிப் பிள்ளை என்னைப் பாத்து நக்கலாச் சிரிக்கிது . எனக்குலாம் ஒரே வெட்கம் , என்னோட வலது கால் பெருவிரலால சிமெண்ட் தரையில் ஒரு வானவில்லையே வரைஞ்சுப்புட்டேன்... (இருங்கடே ஒரு டூயட் பாடிட்டு வந்துறேன் .. )//



கருத்துச் சொன்னவரு: ramachandranusha

Anonymous said...

Hi maravandu,

good one. enjoyed immensely.questions to yr history teacher.....could imagine a bright inquisitive boy.....part about puberty.....hilarious.
keep up the good work.sorry not very good with typing in tamil.....but i dont want my inefficiency to stop me from commenting on good posts.

radha

கருத்துச் சொன்னவரு: Radha sriram

Anonymous said...

Vennila kavithai will be lingering. Vayasukku vantha samacharam kalakki irukkinga

கருத்துச் சொன்னவரு: பாலா சுப்ரா

Anonymous said...

அருமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டீர்கள் வண்டு.
சுவையாக இருந்தது பகிர்வு.

கருத்துச் சொன்னவரு: மூர்த்தி

Anonymous said...

ரொமப சரியா சொன்னீங்க பால்ய பருவத்தை நினைச்சாலே இனிக்கும். தாவனி கனவு நல்லாதான் இருக்கு! உடனே பாட்டு கட்டிடீங்க பாருங்க, நல்ல டைரக்டோரியல்

கருத்துச் சொன்னவரு:

Anonymous said...

ரொமப சரியா சொன்னீங்க பால்ய பருவத்தை நினைச்சாலே இனிக்கும். தாவனி கனவு நல்லாதான் இருக்கு! உடனே பாட்டு கட்டிடீங்க பாருங்க, நல்ல டைரக்டோரியல் டச்.

கருத்துச் சொன்னவரு:

Anonymous said...

anpin vandu.. summa kalakareenga ponga... sevasi-nna sivakasi yaa..
pesi romba naalachu.. mudinjaal online vaanga.
endrendrum anbudan, seemachu

கருத்துச் சொன்னவரு: seemachu

Anonymous said...

அன்புள்ள பிரகாஷ் , மோகன் தாஸ்,உஷா, ராதா,மூர்த்தி பாலசுப்ரா மற்றும் சீமாச்சு

உங்கள் வருகைக்கு நன்றி .

அன்புள்ள பாபி

மின்னலே சரியான விடை , கொஞ்சம் கஷ்டமான கேள்வி தான்..
இருந்தாலும் பதில் கண்டுபிடிச்சிட்டிங்க , வாழ்த்துக்கள்.
மின்னலே படத்தில் ரீமாசென்னுக்கு பொக்கே கொடுக்குற காட்சியில்
அந்தப் படத்தின் இயக்குநர் கெளதம் வருவார்

உங்கள் முகவரியை எனது மின்னஞ்சல் முகவரிக்கு தனிமடலில் அனுப்பி வையுங்கள் , புத்தகம் அனுப்புகிறேன்.

முதல் கேள்விக்கு இன்னும் யாரும் பதிலளிக்கவில்லை.





கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

Dear vandu

nice !

regards
Jegan

கருத்துச் சொன்னவரு: Jegan

Anonymous said...

அன்புள்ள ஜெகன்

உங்கள் வருகைக்கு நன்றி

என்றும் அன்பகலா
மரவண்டு

கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

அண்ணாச்சி! எப்பவாவது வர்றீய. வந்து கலக்கிட்டு போயடுறீய! கலக்கல் பதிவு. பழசை எல்லாம் நெனவுக்கு வந்துடுச்சி. அடிக்கடி எழுதுங்க. (கேள்விக்கு பதில் எல்லாம் கேக்கப்படாது)

கருத்துச் சொன்னவரு:

சிவா said...

அண்ணாச்சி! எப்பவாவது வர்றீய. வந்து கலக்கிட்டு போயடுறீய! கலக்கல் பதிவு. பழசை எல்லாம் நெனவுக்கு வந்துடுச்சி. அடிக்கடி எழுதுங்க. (கேள்விக்கு பதில் எல்லாம் கேக்கப்படாது)

சிவா said...

பாவி மக்கா (ஒங்கல இல்ல அண்ணாச்சி), இதுக்கெல்லாம் ஓட்டு போடாதிய! குஷ்பு, கற்பு என்று கண்ட கருமாதிய ஓட்டு போட்டு 25 க்குள்ள கொண்டு வந்திருங்க. நல்லா இருங்கடே, உங்க கருத்து கந்தசாமிகளோட :-)))

அது ஏண்டே, மொத தடவை கமெண்ட் போட்டா அனாமத்தா போய்டறது. அப்புறம் தான் என்னோட ப்ளாக் முகவரி போகுது..ஒதவி பண்ணுங்கடே.

Anonymous said...

முதல் கேள்விக்கு இதோ ஒரு பதில்

டிசே தமிழன்

பதிவு நல்லா இருந்துச்சு.

கருத்துச் சொன்னவரு:

Anonymous said...

தயவிட்டு நன்ன ஹிந்தின கமெண்ட்டுன்னு தெகிது பிட்றி ஸ்வாமி.

//கேள்வி எண் 1 : இவர் ஒரு நவீன தமிழ் இலக்கியவாதி இவருடைய இயற்பெயர் இளங்கோ. இவருடைய புனைபெயர் என்ன ?
//

இதை இப்போது தான் பார்த்தேன்: கோணங்கி


கருத்துச் சொன்னவரு: Sundaramoorthy

Anonymous said...

நல்லா எழுதிருக்கீங்க கணேஷ்.

-0-

//ஹ்ம்... எனக்குன்னு வாய்ச்சிருக்கவ இந்நேரம் எங்க இருக்காளோ .. என்ன செஞ்சிட்டு இருக்காளோ ...//

வண்டாரே! இன்னும் கொஞ்சம் பழமொழி போடுங்க. நானே தேடிப்பிடிச்சு அதையெல்லாம் குடுத்திட்டு, உங்ககிட்ட சொல்றேன். ;) :P

-மதி

கருத்துச் சொன்னவரு: மதி கந்தசாமி

Anonymous said...

அன்புள்ள சிவா

ரேடிஓ ஸ்டேசன் வச்சு நல்ல நல்ல பாட்டா போடுறிகளே அவுக தான நீங்க..

//முதல் கேள்விக்கு இதோ ஒரு பதில்

டிசே தமிழன்//

ஏங்க அனாமத்து டிசே வோட இயர்பெயர் இளங்கோவா ?

/////
கேள்வி எண் 1 : இவர் ஒரு நவீன தமிழ் இலக்கியவாதி இவருடைய இயற்பெயர் இளங்கோ. இவருடைய புனைபெயர் என்ன ?

இதை இப்போது தான் பார்த்தேன்: கோணங்கி
/////

அன்புள்ள சுந்தர மூர்த்தி

சரியா சொல்லிப்போட்டிங்க..
கோணங்கி சரியான விடை , வாழ்த்துக்கள் ..
நாளைக்கு தனி மடல் அனுப்புறேன்

//வண்டாரே! இன்னும் கொஞ்சம் பழமொழி போடுங்க. நானே தேடிப்பிடிச்சு அதையெல்லாம் குடுத்திட்டு, உங்ககிட்ட சொல்றேன். ;) :P
//

அன்புள்ள மதி

பழமொழி வந்துட்டே இருக்கு :-)

வருகை தந்த அனைத்து அண்ணாச்சிகளுக்கும் நன்றி
பிறகு விரிவாக எழுதுகிறேன்...

என்றும் அன்பகலா
மரவண்டு

கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

மரவண்டு அவர்களே

படித்தேன்,ரசித்தேன்


கருத்துச் சொன்னவரு: 9

Anonymous said...

கணேஷ்
வெண்ணிலாவின் கவிதை அருமை.
இளையபாரதியின் துளிப்பா இன்னும் அருமை.
உனது ஞாபகம் வருதே நினைவுகள் எல்லோருக்கும் தங்கள் இளமைப் பருவத்தை ஞாபகப் படுத்துகின்றன.

நான் ஆறாவதுப் படித்துக் கொண்டிருந்தப் போது ஒரு நாள் ஆங்கில ஆசிரியர் வராததால் தலைமை ஆசிரியர் வந்துப் பாடம் நடத்தினார். அப்போது அவர் தனது சாவிக் கொத்தைக் காட்டி வாட் ஈஸ் திஸ் என்றார். நான் முந்திரிக்கொட்டைக் கணக்காய் "திஸ் ஈஸ் சாவி"
என்று சொன்னேன். வகுப்பில் ஒரே சிரிப்பு.
இப்பொழுது ஊருக்குப் போனாலும் அந்தத் தலமை ஆசிரியர் எனக்கு அதை ஞாபகப் படுத்துவார்.
உம்ம். அதெல்லாம் ஒருக்கனாக்காலம்.

கருத்துச் சொன்னவரு: manjoor raja

Anonymous said...

கற்றதும் பெற்றதும வட்டார வழக்குல படிச்சாப்பல இருந்துது கணேசு. கலக்கிபுட்டீங்க...

கருத்துச் சொன்னவரு: சித்தார்த்

Anonymous said...

அன்புள்ள அனாமத்து ,மஞ்சூர் ராஜா , சித்தார்த்

உங்கள் வருகைக்கு நன்றி

சித்தார்த் , பாத்து ரொம்ப நாளாச்சு , எப்படி இருக்கிங்க ?

என்றும் அன்பகலா
மரவண்டு

கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

நிம்மதி



இறைவா என்னை
வளர்ச்சியடையச் செய்துவிடாதே!
ஒரே வகுப்பில்
ஒரே வீதியில்
ஒரே இனமாய்
வாழ்ந்தவர்கள் எல்லாம்
சாதி மதம் கண்டு பிரிகின்ற
சாதாரண மனிதனாய்
வாழ விரும்பவில்லை
ஆகவே என்னை
குழந்தையாய் இருக்கவைத்து
குழந்தையாகவே இறக்க வை!

ழூழூழூ

காதல்
வேலையில்லாத் திண்டாட்டம்
பணம்
மதவெறி
தொந்தரவின்றி நீ
தூங்குகின்ற
முதல் தூக்கமும்
முடிவு தூக்கமும் இதுதான்
ஆகவே விழித்துவிடாதே
அப்படியே தூங்கிக்கொண்டிரு

ரசிகவ் ஞானியார்


கருத்துச் சொன்னவரு: ரசிகவ் ஞானியார்

Anonymous said...

சின்னப் புள்ளயா இருக்கலாந்தான்.நன்றாகத் தான் இருக்கும்.


///ஹ்ம்... எனக்குன்னு வாய்ச்சிருக்கவ இந்நேரம் எங்க இருக்காளோ .. என்ன செஞ்சிட்டு இருக்காளோ ...///

இருங்க கணேஷ் காலம் கனியட்டும்.தை பிறந்தால் வழி பிறக்கும்.


கருத்துச் சொன்னவரு: madhumitha

Anonymous said...

அன்புள்ள ரசிகவ்
கவிதைகள் நன்று , நன்றி

அன்புள்ள மதுமிதா
உங்கள் வாக்கு பலிக்கட்டும் :-)

என்றும் அன்பகலா
மரவண்டு

கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

குழந்தைப்பருவம் தான் சுகம், இப்பல்லாம் ரொம்ப டென்சனா இருக்குன்னு நினைச்சிட்டே தான் இருந்தேன், அடுத்து உங்க பதிவை வாசிச்சவுடனே என்னடா இன்னிக்கு நினைச்ச விசயமாவே இருக்குன்னு தோணிச்சு. படிக்க ரொம்ப நல்லா இருந்துச்சு. என்ன... வயசுக்கு வந்த விவரத்தை மட்டும் விட்டிருக்கலாம்... தேவையா எங்களுக்கு? :-D

கருத்துச் சொன்னவரு: சேதுக்கரசி